தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Saran Birthday : அஜித்தை ஆக்ஷன் அல்டிமேட் ஸ்டாராக மாற்றியவர்.. இயக்குனர் சரண் பிறந்தநாள் இன்று!

Director Saran Birthday : அஜித்தை ஆக்ஷன் அல்டிமேட் ஸ்டாராக மாற்றியவர்.. இயக்குனர் சரண் பிறந்தநாள் இன்று!

Divya Sekar HT Tamil
Jun 16, 2024 06:00 AM IST

Director Saran Birthday : நல்ல கார்ட்டுனீஸ்ட், ஓவியர், அதை கடந்து நல்ல இயக்குனர். இந்த புகழுக்கெல்லாம் சொந்தக்காரரான இயக்குனர் சரணின் 58வது பிறந்த நாள் இன்று.

அஜித்தை ஆக்ஷன் அல்டிமேட் ஸ்டாராக மாற்றியவர்.. இயக்குனர் சரண் பிறந்தநாள் இன்று!
அஜித்தை ஆக்ஷன் அல்டிமேட் ஸ்டாராக மாற்றியவர்.. இயக்குனர் சரண் பிறந்தநாள் இன்று!

Director Saran Birthday : காதல் மன்னனாக இருந்த அஜித்தை ஆக்ஷன் அல்டிமேட் ஸ்டாராக மாற்றியவர். நல்ல கார்ட்டுனீஸ்ட், ஓவியர். அதை கடந்து நல்ல இயக்குனர். இந்த புகழுக்கெல்லாம் சொந்தக்காரரான இயக்குனர் சரணின் 58வது பிறந்த நாள் இன்று.

சரண் என்று அழைக்கப்படும் கே.வி.சரவணன் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் இயக்குனர் கே. பாலச்சந்தரிடம் துணை இயக்குநராக பணியாற்றினார். ஜெமினி புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்பட தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரித்துள்ளார்.

98 முறை அந்த படத்தை பார்த்தும் வாங்காத நிலை

சரண், சுபா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு சஞ்சனா மற்றும் சஞ்சித் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். சரணின் இளைய சகோதரர் கே. வி. குகன் தமிழ்த் திரையுலகில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார்.

இவரின் முதல் படமான காதல் மன்னன் முடிந்த பிறகு, வினியோகஸ்தர்கள் யாரும் இப்படத்தை வாங்க முன்வரவில்லை. வினியோகஸ்தர்கள் 98 முறை அந்த படத்தை பார்த்தும் வாங்காத நிலையில் 99 ஆவது முறை தான் வாங்கியிருக்கிறார்கள். அனைவராலும் ஒதுக்கப்பட்ட அந்த படம் தான் 100 நாட்களை கடந்து அனைவருக்கும் லாபத்தை கொட்டித்தந்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

அஜித்துக்கு புதுவசந்தம் கொடுத்த படம் 'காதல் மன்னன்'. 1998 ஆம் ஆண்டு வெளியானது. அஜித் கேரியரில் முக்கியமான தருணத்தில் அமைந்த இந்த வெற்றிப் படத்தில் ஒரே நேரத்தில் பல சுவாரஸ்ய நிகழ்வுகள் அரங்கேறி இருக்கின்றன. 

சரண்-அஜித் கூட்டணி

கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்த சரண் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு நடிகராக அறிமுகமானதும் இந்தபடம்தான். பரத்வாஜ் தமிழில் இசையமைத்த முதல் படமும் இதுதான். 'திலோத்தமா'அசாம் நடிகை மானுவும் இப்படத்தில் தான் அறிமுகமானார்.

1998 ல் காதல் மன்னன் சூப்பர் ஹிட் அடித்தது. இது அனைவரும் அறிந்ததே. அதுவரை தொடர்ந்து சில படங்கள் அஜித்திற்கு தோல்வியை சந்தித்த நிலையில் காதல் மன்னன் வெற்றியை தொடர்ந்து சரண்-அஜித் கூட்டணியில் அடுத்த ஆண்டே அமர்க்களம் படத்தில் இணைந்தது.

அது வரை ஆசை நாயகனாக இருந்த அஜித் அமர்க்களம் படத்திலிருந்து ஆக்ஷன் நாயகனாக தன்னை மாற்றினார். அந்த படத்தின் வெற்றிக்கு பின், தமிழ் சினிமாவில் தனி ஒரு முறையை சரண் தனக்கென உருவாக்கினார்.

இவர் இயக்கிய ஹிட் படங்கள் சில

காதல் மன்னன்

அமர்க்களம்

பார்த்தேன் ரசித்தேன்

ஜெமினி

ஜே ஜே

அட்டகாசம்

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்

ஆறு

இயக்குனர் சரணின் பிறந்த நாள்

2004 ஆம் ஆண்டு வெளியான வசூல் ராஜா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் கமல், கிரேசி மோகன், பிரகாஷ்ராஜ், சினேகா என்று ஒரு வெற்றிக் கூட்டணியை அமைத்து இருப்பார் சரண். மேலும், இந்த திரைப்படம் ஒரு முழு நீள காமெடி படமாக அமைந்திருந்தது. இப்படம் ரசிகர்களை மிகவும் கலகலப்பாக வைத்திருக்கும். சரண் இயக்கிய திரைப்படங்களில் இப்படம் வித்தியாசமானது.

நல்ல கார்ட்டுனீஸ்ட், ஓவியர். அதை கடந்து நல்ல இயக்குனர். இந்த புகழுக்கெல்லாம் சொந்தக்காரரான இயக்குனர் சரணின் 58வது பிறந்த நாள் இன்று. அவருக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பாக வாழ்த்துக்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.