Kaadhal Mannan: 'அழுக்குச் சட்டை போட்டாலும் அழகாய் தெரியும் ஆணழகன்' என்றும் மறக்காத காதல் மன்னன்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kaadhal Mannan: 'அழுக்குச் சட்டை போட்டாலும் அழகாய் தெரியும் ஆணழகன்' என்றும் மறக்காத காதல் மன்னன்!

Kaadhal Mannan: 'அழுக்குச் சட்டை போட்டாலும் அழகாய் தெரியும் ஆணழகன்' என்றும் மறக்காத காதல் மன்னன்!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 06, 2024 06:00 AM IST

அஜித் ஹீரோவாக சிவா என்ற கதாபாத்திரத்திலும், அறிமுக நாயகி மானு திலோத்தம்மாவாகவும், எம். எஸ். விஸ்வநாதன் கண்ணதாசன் மெஸ் நடத்துபவராகவும் , கரண் வில்லன் ரஞ்சனாகவும் இவர்களோடு விவேக் கிரிஷ் கர்னாட் கனல் கண்ணன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

காதல் மன்னன்
காதல் மன்னன்

அஜித் ஹீரோவாக சிவா என்ற கதாபாத்திரத்திலும், அறிமுக நாயகி மானு திலோத்தம்மாவாகவும், எம். எஸ். விஸ்வநாதன் கண்ணதாசன் மெஸ் நடத்துபவராகவும் , கரண் வில்லன் ரஞ்சனாகவும் இவர்களோடு விவேக் கிரிஷ் கர்னாட் கனல் கண்ணன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

கிரிஷ் கர்னாட் என்பவர் தனது இளைய மகளை மிகுந்த கண்காணிப்புடன் வளர்த்து வருகிறார். அதற்கான காரணம் ஒன்று உண்டு. மூத்த மகளை கண்டிப்பாக வளர்த்து வந்தும் தன்னை மீறி காதல் திருமணம் செய்து தனியாக போய் விட்டார். அந்த கோபத்தில் தனது இரண்டாவது மகள் திலோத்தம்மாவை இன்னும் கடுமையான கட்டுப்பாடுகளோடு வளர்த்து வருகிறார்.

பிளாக் டாக் செக்யூரிட்டி சர்வீசஸ் என்ற பெயரில் பாதுகாப்பு நிறுவனம் நடத்தி வரும் ஹீரோயின் தந்தை கட்டுப்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை அவர் நடத்தும் தொழில் நிறுவனமே புரிய வைக்கும். ஹீரோ சிவா தனது நண்பர்களுடன் எம்.எஸ்.வி. நடத்தி வரும் பேச்சிலர் விடுதியில் தங்கி தொழில் செய்து வரும் இளைஞன். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து டெல்லி சென்ற இடத்தில் ஒரு விபத்தில் சிக்கிய குழந்தை ஒன்றை காப்பாற்றிய போது குழந்தை அம்மா நன்றி தெரிவித்து விட்டு இன்னும் ஒரு உதவியை கேட்கிறார். 

தனது குடும்பத்தை விட்டு பிரிந்த காதல் கதையை சொல்லி தற்போது குழந்தைகளுடன் உள்ள போட்டோவை தனது தங்கையிடம் சேர்க்கும் படி கேட்கிறார். அவர் தங்கைதான் தந்தை கட்டுப்பாட்டில் இருக்கும் திலோத்திமா. தந்தை கட்டுப்பாடுகளை மீறி புகைப்படத்தை சந்தித்து கொடுக்கும் தினத்தில் தான் திலோத்திமாவுக்கு ரஞ்சனுடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடக்கிறது. அந்த நிகழ்ச்சியில் சந்தித்த மாத்திரத்தில் அஜித் மனதில் காதல் தோன்றினாலும் சொல்ல முடியாது. 

அக்கா புகைப்படம் பார்த்த உடன் தன் அக்காவை டெல்லி சென்று சந்திக்க உதவுமாறு அஜித்திடம் கேட்கிறார் நாயகி. தந்தை கட்டுப்பாடுகளை சமாளித்து அக்கா மற்றும் குழந்தைகளை சந்தித்து திரும்பும் போது திலோத்திமா மனதிலும் காதல் மலர்கிறது. இருவரும் ஓருவருக்கொருவர் தங்களது காதலை வெளிப்படையாக சொல்லாத நிலையில் திருமண தேதி நெருங்குகிறது. ஒரு கட்டத்தில் திலோத்திமா வீட்டுக்கு சென்று அஜித் தனது காதலை வெளிப்படுத்துகிறார். அப்போது திலோத்திமா மனநிலை... காதலுக்கு எதிரான தந்தையின் மனநிலை.. திருமணம் உறுதி செய்த ரஞ்சன் மனநிலை எல்லாம் மீறி காதல் வென்றதா என்பது தான் கிளைமாக்ஸ்.

இந்த படத்தில் இசையமைப்பாளர் பரத்வாஜ் இசை ஒரு ராஜாங்கமே நடத்தி இருப்பார்.

"உன்னை பார்த்த பின்பு தான் நானாக இல்லையே" பாடல் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் குரலில் அஜித்தின் ஸ்பெஷல் சாங். இப்போதும் இந்த பாடலை முனுமுனுக்காதவர்கள் இல்லை.

"வானும் மண்ணும்"

"திலோத்தமா"

"மெட்டு தேடி"

|மாரிமுத்து மாரிமுத்து"

"கன்னிப்பெண்கள்" என்று எல்லா பாடல்கள் அனைத்தும் சூப்பர்  ஹிட்.

இந்த படம் நிறைய பேருக்கு ஸ்பெஷல். இயக்குனர் சரண், ஹீரோயின் மானு, இசையமைப்பாளர் பரத்வாஜ், நடிகராக விஸ்வநாதன் என்று பலருக்கும் முதல் படம்.

இன்னொருவருடன் திருமண நிச்சயமான தினத்தில் பார்த்த மாத்திரத்தில் காதலில் விழும் ஹீரோ, நிச்சயம் முடிந்த பின் மனம் மாறும் ஹீரோயின், இருவருக்கும் இடையில் உள்ள காதலை மறைத்து வைத்து திருமண தேதி நெருங்க நெருங்க, படம் பார்க்கும் நமக்கு பிரஷர் ஏற்றும் வித்தியாசமான கதையை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இன்று தல என்று அழைக்கப்படும் அஜித் இந்த படம் வந்த பொழுதில் காதல் மன்னன் அஜித் ஆக ரசிகர்கள் மத்தியில் இருந்தார். படம் வெளியாகி இருபத்தாறு ஆண்டு காலம் இன்று நிறைவடைகிறது.

அஜித் அவர்கள் கேரியரில் இது முக்கியமான படமாக இன்றும் தொடர்கிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.