Ajit Doval appointed NSA: நாயகன் மீண்டும் வரார்! தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் அஜித் தோவல் நியமனம்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ajit Doval Appointed Nsa: நாயகன் மீண்டும் வரார்! தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் அஜித் தோவல் நியமனம்!

Ajit Doval appointed NSA: நாயகன் மீண்டும் வரார்! தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் அஜித் தோவல் நியமனம்!

Kathiravan V HT Tamil
Jun 13, 2024 06:06 PM IST

Ajit Doval appointed NSA: தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டு உள்ள அஜித் தோவல் இன்றைய தினம் ஜி7 உச்சி மாநாட்டுக்கு செல்லும் பிரதமர் உடன் இத்தாலி செல்ல உள்ளார்.

NSA Ajit Doval (File Photo)
NSA Ajit Doval (File Photo)

பிரதமர் உடன் இத்தாலி செல்லும் தோவல் 

மோடி 3.0 இல் தனது முதல் முக்கிய பணியாக, டோவல் இன்றைய தினம், ஜி7 உச்சிமாநாட்டிற்காக பிரதமருடன் இத்தாலிக்கு பயணம் செய்கிறார். குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழந்தது மற்றும் பலர் காயமடைந்தது குறித்து பிரதமர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.

பிரதமரின் பதவிக்காலம் வரை பதவியில் இருப்பார்

“10.06.2024 முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அஜித் தோவலை, நியமனம் செய்ய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அவரது நியமனம் பிரதமரின் பதவிக்காலம் அல்லது மறு உத்தரவு வரும் வரையில் இருக்கும்” என்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு முதல் நியமனம் 

இந்தியாவின் உள்நாட்டு உளவு அமைப்பான புலனாய்வுப் பணியகத்தின் (Intelligence Bureau) தலைவராக 2005 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அஜித் தோவல் கடந்த 2014ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். 

பிரதமரின் முதல் தேர்வு 

தேச பாதுகாப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆலோசனை வழங்குவதற்கு பிரதமரின் முதல் தேர்வாக அஜித் தோவல் இருந்தார். 

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு தொடர்பான நிலைமையைக் கையாண்டது முதல், மேற்கில் உள்ள சில நாடுகளில் ஏற்பட்டுள்ள காலிஸ்தானி இயக்கங்களின் எழுச்சி, அரபு நாடுகள் உடனான இந்தியாவின் நட்பு, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை கையாள்வது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் அஜித் தோவலின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. 

கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் இரண்டு முறை நடத்தப்பட்ட எல்லை தாண்டிய தாக்குதல் செயல்பாடுகளில் அஜித் தோவல் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. 

2016 ஆம் ஆண்டில் நடந்த உரி தாக்குதல் மற்றும், புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானின் பாலகோட்டில் ஜெய்ஷ்-இ-முகமது முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் இதில் கவனம் பெற்றவையாக உள்ளது. 

1968ஆம் ஆண்டு கேரள கேடர் அதிகாரியான தோவல், 1988ஆல் பொற்கோவிலில் இருந்து தீவிரவாதிகளை வெளியேற்றத் தொடங்கப்பட்ட ஆபரேஷன் பிளாக் தண்டர்-II-ல் தனது பங்கிற்காக இரண்டாவது மிக உயர்ந்த அமைதிக்கால வீர விருதைப் பெற்ற முதல் போலீஸ் அதிகாரி ஆவார்.

பிரதமரின் முதன்மை செயலாளருக்கும் பதவி நீட்டிப்பு 

பிரதமரின் முதன்மை செயலாளர் பிகே மிஸ்ராவுக்கும் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. “10.06.2024 முதல் பிரதமரின் முதன்மை செயலாளராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.கே.மிஸ்ராவை நியமனம் செய்ய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அவரது நியமனம் பிரதமரின் பதவிக் காலத்துடன் இணையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

குஜராத்தில் முதல்வராக இருந்ததில் இருந்து மோடியுடன் இணைந்து பணியாற்றி வந்த மிஸ்ரா, 2014ல் மோடி பதவியேற்றதில் இருந்து பிரதமர் அலுவலகத்தில் பணிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.