Thalapathy Vijay: கோட் என எழுதப்பட்டிருக்கும் மோதிரம்..படக்குழுவின் அன்பு பரிசு - போட்டோவுடன் விஜய் பகிர்ந்த பதிவு
Thalapathy Vijay: படக்குழுவின் அன்பு பரிசு, கோட் என எழுதப்பட்டிருக்கும் மோதிரம் கையில் அணிந்து கொண்டு அந்த போட்டோவுடன் தனது எக்ஸ் பக்கத்தில் விஜய் பகிர்ந்த பதிவு வைரலாகியுள்ளது.

தளபதி விஜய்யின் தி கோட் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றியை பெற்றிருப்பதுடன் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை குவித்துள்ளது. இதையடுத்து இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக கோட் என எழுத்தப்பட்டிருக்கும் மோதிரம் படக்குழு சார்பில் தளபதி விஜய்க்கு பரிசாக அளிக்கப்பட்டுள்ளது
விஜய்க்கு பரிசாக மோதிரம்
தளபதி விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், தனது கையில் கோட் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் மோதிரத்தை அணிந்திருப்பதை காட்டியவாறு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இந்த பதிவில் தி கோட் என்ற கேப்ஷன் மட்டுமே குறிப்பிட்டிருந்தார்.
இதுபற்றி படக்குழுவிடம் விசாரிக்கையில், பிரபல தயாரிப்பாளரான டி. சிவா, தி கோட் படம் வெற்றிகரமாக ஓடியதற்காகவும் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியிருப்பதால், அவருக்கு பரிசாக அளித்திருப்பது தெரியவந்துள்ளது.