தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mamitha Baiju: எகிறி குதித்து வந்த ரசிகர்கள்! பாதுகாவலர்களால் தப்பித்த மமிதா - வைரல் விடியோ

Mamitha Baiju: எகிறி குதித்து வந்த ரசிகர்கள்! பாதுகாவலர்களால் தப்பித்த மமிதா - வைரல் விடியோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 03, 2024 04:58 PM IST

மமிதாவை கண்டதும் ரசிகர்கள் எகிறி குதித்து வர, பாதுகாவலர்களால் அவர் தப்பித்தார். தன்னை காண வந்த ரசிகர்கள் கூட்டத்தை கண்டு திக்கு முக்காடி போனார். மமிதா பைஜூவை ரசிகர்கள் சூழ்ந்திருக்கும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

பாதுகாவலர்களால் தப்பித்த மமிதாவின் வைரல் விடியோ
பாதுகாவலர்களால் தப்பித்த மமிதாவின் வைரல் விடியோ

ட்ரெண்டிங் செய்திகள்

சமீபத்தில் வெளியான பிரேமலு படத்தில் மமிதாவின் நடிப்பு அனைவராலும் வெகுவாக ரசிக்கப்பட்டது. இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவராக மமிதா உள்ளார். தமிழில் இவர் ஜிவி பிரகாஷ் ஜோடியாக ரீபல் படத்தில் நடித்திருந்தார்.

மமிதாவை சூழ்ந்த ரசிகர்கள்

சென்னை விஆர் மாலில் இருக்கும் பிரபல நகைக்கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மமிதா வருகை தந்திருந்தார். இதையடுத்து இவரை காண வேண்டும் என மாலில் ரசிகர்கள் பெரும் கூட்டமாக கூடினர்.

இதைத்தொடர்ந்து மமிதா வந்தவுடன் ரசிகர்கள் நாலபுறமும் அவரை சூழ்ந்து கொண்டனர். ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டம், அவர்களின் திக்குமுக்காட வைக்கும் அன்பால் ஒரு கணம் ஆடிப்போய்விட்டார் மமிதா.

அவரை சுற்றி இருந்த பாதுகாவலர்களால் கூட கட்டுப்படுத்த முடியாத அளவில் ரசிகர்கள் மமிதா நோக்கி அன்பு மழை பொழிந்தனர். அத்துடன் தங்களது செல்போன்களை வைத்து புகைப்படங்களையும் கிளிக்கி தள்ளினர். இந்த சம்பவத்தால் விஆர் மாலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மமிதாவை சூழ்ந்த ரசிகர்களிடம் இருந்து, அவரை பாதுகாவலர்கள் பாதுகாக்கும் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

 

மமிதா புதிய படம்

மமிதா நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான பிரேமலு திரைப்படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை ஈட்டி, ஆண்டின் சூப்பர் ஹிட் படமானது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது மமிதா, கோமாளி, லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இதுதவிர தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டாவின் புதிய படமான VD12 படத்தில் நடிக்கவுள்ளார்.

சிஎஸ்கே அணியின் தீவிர ரசிகையான மமிதா பைஜூ, ஐபிஎல் 2024 தொடரின்போது சென்னை சேப்பாக்கத்தில் வைத்து சில போட்டிகளை கண்களித்தார். அப்போது இவரது புகைப்படங்கள் வைரலாகின.

இப்போது மீண்டும் சென்னை பக்கம் வந்திருக்கும் அவர், ரசிகர்களின் அன்பு மழையில் மூழ்கியுள்ளார்.

மமிதா பைஜூ - இயக்குநர் பாலா சர்ச்சை

பிரேமலு படம் வெளியான சமயத்தில் இயக்குநர் பாலா குறித்து மமிதா பேசிய பேச்சு சர்ச்சையானது. சூர்யாவுடன் வணங்கான் திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆன மமிதா, தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இயக்குநர் பாலா படப்பிடிப்பில் தான் கத்துவதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது என்று சொன்னதாகவும், காட்சி ஒன்றில் சரியாக நடிக்காத போது அவர் தன்னை திட்டியதோடு, முதுகில் அடித்தார் என்று பேசியிருந்கார். இவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பலரும் பாலாவை சமூகவலைதளங்களில் கடுமையாக சாடினர்.

மமிதா விளக்கம்

இந்த விவகாரம் தொடர்பாக இன்ஸ்டாவில் விளக்கம் அளித்த மமிதா, "நான் ஒன்றை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். வணங்கான் திரைப்படம் தொடர்பாக ஆன்லைனில் பரவும் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை.

எனது பேட்டியின் ஒரு பகுதியை மட்டும் கட் செய்து பதிவிட்டு, தவறான தலைப்பில் அவை செய்திகளாக மாறியுள்ளன. இயக்குநர் பாலாவுடன் கிட்டதட்ட ஒரு வருடம் பணியாற்றியுள்ளேன்.அவர் என்னிடம் கனிவாக நடந்து கொண்டு என்னை ஒரு நல்ல நடிகையாக மாற்ற முயன்றார்.

அந்தப்படத்தில் மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ நான் எந்த வித துன்பத்தையும் அனுபவிக்கவில்லை என்பதை இங்கு மீண்டும் சொல்லிக்கொள்கிறேன். நான் விலகி வந்ததற்கான காரணம் என்னுடைய தொழில்முறை சார்ந்த கமிட்மெண்ட்டுகள்தான்" என்று விளக்கம் அளித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்