தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  The Greatest Of All Time: 'நான் ரெடி தான் வரவா?': ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் கொடுத்த ‘தி கோட்’ குழு

The Greatest Of All Time: 'நான் ரெடி தான் வரவா?': ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் கொடுத்த ‘தி கோட்’ குழு

Marimuthu M HT Tamil
Apr 13, 2024 04:19 PM IST

The Greatest Of All Time(The GOAT): தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தின் பாடல் வெளியீடு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்

ட்ரெண்டிங் செய்திகள்

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம், தி கோட். அதாவது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest Of All Time). இது விஜய்யின் 68ஆவது படமாகும். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்துவருகிறார்.

தவிர, இந்தப் படத்தில் பிரபுதேவா, லைலா, பிரசாந்த், சினேகா, மைக் மோகன், அஜ்மல், யோகி பாபு, விடிவி கணேஷ், ஜெயராம், வைபவ், நிதின் சத்யா, பிரேம்ஜி, அஜ்மல், பார்வதி நாயர் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, ஹைதராபாத், இலங்கை, பாண்டிச்சேரி, திருவனந்தபுரம், ரஷ்யா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. மேலும் நடிகர் விஜய், இந்த திரைப்படத்தில், இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும் தெரிகிறது. முன்பே, நடிகர் விஜய், அழகிய தமிழ் மகன், வில்லு, கத்தி, மெர்சல்,பிகில், லியோ ஆகியப் படங்களில் நடித்திருந்த நிலையில் தற்போதும் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் மூலம் நடிகர் விஜய்யின் படத்துக்கு, பல ஆண்டுகளுக்குப் பின், யுவன் சங்கர் ராஜா முதன்முறையாக இசையமைக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரிலீஸாகும் வகையில் தயார் ஆகி வருகிறது. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக, கல்பாத்தி அகோரம்,கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் ஆகிய மூவர் இணைந்து தயாரிக்கின்றனர்.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்துக்குண்டான ஒளிப்பதிவினை சித்தார்த்தா நுனி புரிய, வெங்கட் ராஜின் என்பவர் எடிட் செய்கிறார். இப்படத்துக்குண்டான வசனத்தை விஜி மற்றும் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

இப்படத்தில் கங்கை அமரன், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, விவேக் ஆகிய நால்வர் சேர்ந்து பாடல்கள் எழுதியுள்ளனர்.

பொதுவாகவே விஜய் படத்தில் நடனம் பட்டையைக் கிளப்பும். இப்படத்திலும் நடனத்திற்கு வலுவாக இடம்தரும் ராஜூ சுந்தரம், சேகர் மற்றும் சதீஷ் ஆகியோர் சேர்ந்து பாடல்களுக்கு நடன அமைப்பினை செய்துள்ளனர்.

அதேபோல், விஜய் படத்தில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் பஞ்சமிருக்காது. அதற்குத் தீனிபோடும் வகையில் திலீப் சுப்புராயன் மாஸ்டர், தி கோட் திரைப்படத்துக்கான சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். மேலும், இத்திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2023ஆம் ஆண்டு மே 2023ல் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதிகாரப்பூர்வ படப்பிடிப்பு அக்டோபர், 2023ல் தொடங்கியது. இப்படம் அறிவியல் புனைவு கதையாக உருவாகி வருகிறது. மேலும், இப்படத்தினை 2024ஆம் ஆண்டு, செப்டம்பர் ஐந்தாம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தி கோட் படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து இணையதளங்களில் கேட்டு வந்தனர். அதனையொட்டி, நடிகர் விஜய் கண்ணாடி போட்டு, தாடியுடன் முறைக்கும் படத்தை, படக்குழுவினர் வெளியிட்டனர்.

அதனைத்தொடர்ந்து தற்போது, ‘கோட்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு தயாரா?’ என்று கேட்பதுபோல், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்