Bayilvan Ranganathan: ‘அவ்வளவு விளம்பர வெறி.. கேவலம்.. பிரபுதேவா மனைவியிடம் அடி வாங்கிய நயன்தாரா’ - பயில்வான் விளாசல்!
அதன் பின்னர் பிரபுதேவா உடன் காதல் வயப்பட்டார் அதில் அதிருப்தி அடைந்த பிரபுதேவாவின் முதல் மனைவி நயன்தாராவை வீட்டிற்கு தேடி வந்து பயங்கரமாக திட்டி, தாக்கினார்.
இது குறித்து அரசியல் கருடன் சேனலுக்கு பேசிய பயில்வான் ரங்கநாதன், “ மிகப்பெரிய தொழிலதிபர், நடிகை, நயன்தாரா. ஆனாலும் அவருக்கு விளம்பர வெறி அடங்கவே இல்லை.
கேரளாவில் தொகுப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்த அவருக்கு இயக்குநர் ஹரி இயக்கி, சரத்குமார் நடித்த ஐயா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பு அவரது வாழ்க்கையை மாற்றியது.
அந்த படம் சூப்பர் சூப்பர் ஹிட் அடிக்க தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அவருக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. முன்னணி நடிகையாக உயர்ந்தார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை நேர்த்தியாக கையாண்டு, நடிப்பை வெளிப்படுத்துவார்
ஆனால் பர்சனல் வாழ்க்கையில் அவர் நிறைய காதல் தோல்விகளை சந்தித்தார். சிம்புவுடன் காதல் வயப்பட்டு படுக்கையை பகிர்ந்தார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
அதன் பின்னர் பிரபுதேவா உடன் காதல் வயப்பட்டார் அதில் அதிருப்தி அடைந்த பிரபுதேவாவின் முதல் மனைவி நயன்தாராவை வீட்டிற்கு தேடி வந்து பயங்கரமாக திட்டி, தாக்கினார்.
நயனின் உறவில் இருந்தாலும் பிரபுதேவா அவரது குழந்தைகளை சென்று பார்த்து வந்து கொண்டிருந்தார் இது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை. இதனையடுத்து நயன்தாரா அங்கு செல்ல வேண்டாம் என்று வலியுறுத்த பிரபுதேவாவோ அதற்கு எதிர் மாறாக நின்றார். இதனையடுத்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள்.
நயன்தாரா அண்மையில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு விக்னேஷ் சிவன் மூன்று கோடி மதிப்பிலான ஒரு சொகுசு காரை பரிசாக அளித்தார். அந்த காரில் அவ்வளவு வசதிகள் இருக்கின்றன.
நயன்தாராவிற்கு சொந்தமாக ஜெட் விமானமும் இருக்கிறது. இது போக அவருக்கு ஏழெட்டு கார்கள் இருக்கின்றன. இது தவிர அவர் அழகுசாதன பொருட்கள் சார்ந்த விற்பனையும் செய்கிறார். துபாய் பெட்ரோல் கிணறுகளிலும் அவர் முதலீடு செய்து இருக்கிறார் அவருக்கு கிட்டத்தட்ட 200 கோடி மதிப்பில் சொத்துக்கள் இருக்கின்றன
இவ்வளவு வசதி படைத்த நயன்தாராவிற்கு ஒரு கேவலமான ஒரு எண்ணம் இருக்கிறது. அது என்னவென்றால், அண்மைய மிக்ஜம் புயலில் சென்னை மக்கள் பாதிக்கப்பட்டது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அந்த சமயத்தில் வேளச்சேரியின் ஒரு பகுதியில் நயன்தாரா மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியிருக்கிறார். அந்த நிவாரண பொருட்களில், அவர் விற்பனை செய்யும் பொருட்களின் புகைப்படமும் அவரது புகைப்படமும் இடம்பெற்று இருந்ததாக சொல்லப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் நிவாரண பொருட்களை வாங்கிய மக்களிடம், தன்னுடைய பிசினஸ் செய்யும் பொருட்களை மக்களிடம் வாங்குமாறு சொல்லுமாறும், பேச சொல்லி இருக்கிறார்கள். இது எவ்வளவு கேவலமான விஷயம்” என்று பேசினார்.
டாபிக்ஸ்