Gautham Vasudev Menon: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது சரியா?.. கெளதம் மேனன் பகீர் பேட்டி!-director gautham vasudev menon talk about vijay enter to politics - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Gautham Vasudev Menon: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது சரியா?.. கெளதம் மேனன் பகீர் பேட்டி!

Gautham Vasudev Menon: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது சரியா?.. கெளதம் மேனன் பகீர் பேட்டி!

Karthikeyan S HT Tamil
Feb 23, 2024 03:12 PM IST

‘GOAT' படத்தை அடுத்து நடிகர் விஜய் ஒப்பந்தமாகி இருக்கும் புதிய படத்தை யார் இயக்குகிறார் என்ற தகவல் இன்னும் சஸ்பென்ஸாகவே இருக்கிறது.

நடிகர் விஜய், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்.
நடிகர் விஜய், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்.

இதற்கான பணிகளை இப்போதே தொடங்கிவிட்ட விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி பெயரையும் அறிவித்துள்ளார். ஏப்ரலில் கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விஜயின் இந்த பரபர அரசியல் செயல்பாடுகள் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தாலும் அவர் சினிமாவை விட்டு விலகுவது திரைத் துறையினர் மத்தியிலும் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கிடையில் ‘GOAT' படத்தை அடுத்து அவர் ஒப்பந்தமாகி இருக்கும் புதிய படத்தை யார் இயக்குகிறார் என்ற தகவல் இன்னும் சஸ்பென்ஸாகவே தொடர்கிறது. இந்த நிலையில் 'ஜோஷ்வா இமை போல் காக்க' படக்குழு செய்தியாளர்களைச் சந்தித்தது. அப்போது இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனிடம், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பட்டென பதிலளித்த கெளதம் மேனன், 'விஜய் இன்னும் நிறைய படங்களில் நடித்தால் நன்றாக இருக்கும்' என்று தெரிவித்தார்.

மேலும், விஜய்யின் கடைசி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்குமா? கிடைத்தால் இயக்குவீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு,  வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை.. கிடைத்தால் கண்டிப்பாக இயக்குவேன்' என்று பதிலளித்தார். நடிகை த்ரிஷா குறித்து முன்னாள் அதிமுக பிரமுகர் தெரிவித்த அவதூறு கருத்து தொடர்பாக கேட்டதற்கு, 'பெண்களைப் பற்றி யார் அவதூறாகப் பேசியிருந்தாலும் அது தவறுதான்' என்றார். மேலும், 'சிம்புவும் தயாரிப்புத் தரப்பும் பிரச்னைகள் இன்றி ஒன்று சேர்ந்தால் நிச்சயம் வெந்து தணிந்தது காடு 2 எடுப்பேன்' என்றும் அவர் கூறினார்.

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் தற்போது 'ஜோஷ்வா இமை போல் காக்க' படத்தை இயக்கியுள்ளார். இத் திரைப்படம் வரும் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் 'பிக் பாஸ்' புகழ் வருண் கதாநாயகனாக நடித்துள்ளார். ராக்கே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், யோகிபாபு, டிடி, கிருஷ்ணா, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.