அஜித்துக்கு லவ் லெட்டர் எழுதிய நடிகை.. டாப் குக்கு டூப் குக்கு டைட்டில் வின்னர் பருத்திவீரன் சுஜாதா செஞ்ச வேலைய பாருங்க!
Ajith Kumar: பிரபலமான கோலிசோடா திரைப்படத்தில் ஆச்சி மெஸ் நடத்திய சுஜாதா இவ்வளவு பெரிய சமையல் மாஸ்டரா. விருமாண்டி, பருத்தி வீரன், என தொடங்கி இன்று கோலி சோடா வெப் சீரிஸ் வரை கலக்கி வரும் பருத்தி வீரன் சுஜாதா டாப் குக்கு டப் குக்கு நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகி உள்ளார்.

Ajith Kumar: பிரபலமான கோலிசோடா திரைப்படத்தில் ஆச்சி மெஸ் நடத்திய சுஜாதா இவ்வளவு பெரிய சமையல் மாஸ்டரா. விருமாண்டி, பருத்தி வீரன், என தொடங்கி இன்று கோலி சோடா வெப் சீரிஸ் வரை கலக்கி வரும் பருத்தி வீரன் சுஜாதா டாப் குக்கு டப் குக்கு நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகி உள்ளார். இந்த நிலையில் அவர் அஜித் குறித்து பேசிய பழைய வீடியோ வைரலாகி வருகிறது. அது குறித்து இங்கு பார்க்கலாம். சமையல் என்பது ஒரு பிரதான கலை. ருசியான உணவை எல்லோரும் தேடி தேடி சமைப்பது இயல்பு. அப்படிபட்ட சமையல் நிகழ்ச்சிகளை தனியார் தொலைக்காட்சி சேனல்களும் பல காலமாக நடத்தி வருகின்றன. காலப்போக்கில் அதை மேலும் சுவாரஸ்யமாக்க சமையல் பிளஸ் காமெடி கலாட்டா என நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர். இன்றைய சூழலில் இப்படி ஒரு சமையல் காமெடி கலந்த காம்போ தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களின் டீஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் வந்தது. மீடியா மேசன்ஸ் என்ற நிறுவனம் தனியார் தொலைக்காட்சியில் நான்கு சீசன் களை தொடர்ந்து நடத்தும் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றது. இதை ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சி என்று ரசிகர்கள் கொண்டாடினர்.
டாப் குக்கு டூப் குக்கு
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற பெயரில் கடந்த மே மாதம் ஆரம்பித்தது. இதில் ஒன்பது டாப் குக்குகளுடனும், காமெடி கலாட்டா கலகலப்புக்கு பத்து டூப் குக்கு களும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லா தரப்பினரையும் ஈர்த்தது. காமெடி கலாட்டா ஒரு பக்கம் நடந்தாலும் பங்கு பெற்ற டாப் குக்குகள் வித்தியாசமான விதவிதமான உணவு ஐட்டங்களை செய்து காட்டிய விதம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றது. இதில் சமைத்த பல ரெசிப்பிகள் பொதுமக்கள் மற்றும் யூடியுபர்களால் செய்து பார்க்க பட்டு சோசியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டது.
ஒவ்வொரு வாரமும் நடைபெற்ற கடுமையான சமையல் போட்டியின் இறுதியில் எலிமினேஷன் ரவுண்ட் முறையில் ஒவ்வொரு வரும் வெளியேற்றப் பட்டனர். சோனியா அகர்வால், ஷாலி சிங்கம் புலி தீனா, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் வெளியேறினர். செமி பைனல் வைல்ட் கார்ட் என்று மறுபடியும் வாய்ப்பு கொடுத்து நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற சைத்ரா ரெட்டி, சுஜாதா, மனீஷா நரேந்திர பிரசாத், பெப்சி விஜயன், சுபாஷ் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். இந்த ஆறு பேரும் செய்த பல ரெசிப்பீஸ் சமையல் வல்லுநர்களால் பாராட்டப்பட்டது. கடந்த ஞாயிறன்று நடந்த இறுதிப்போட்டியில் டூப் குக்குகளின் குடும்ப உறுப்பினர்கள் பங்கு பெற்று பல கலைநிகழ்ச்சிகளோடு களை கட்டியிருந்தது.