தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Shruti Haasan - Santanu Hazarika Broken Up: பிரிந்ததா ஸ்ருதிஹாசன் - சாந்தனு ஹசாரிகா காதல் ஜோடி: என்னாச்சு?

Shruti Haasan - Santanu Hazarika Broken Up: பிரிந்ததா ஸ்ருதிஹாசன் - சாந்தனு ஹசாரிகா காதல் ஜோடி: என்னாச்சு?

Marimuthu M HT Tamil
Apr 26, 2024 09:19 PM IST

Shruti Haasan - Santanu Hazarika Broken Up: இன்ஸ்டாகிராமில் ஸ்ருதிஹாசன் மற்றும் சாந்தனு ஹசாரிகா ஒருவரையொருவர் பின்தொடராத நிலையில், இந்த ஜோடி உண்மையில் பிரிந்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ஸ்ருதிஹாசனுக்கும், சாந்தனு ஹசாரிகாவுக்கும் இடையே பிரேக்அப்
ஸ்ருதிஹாசனுக்கும், சாந்தனு ஹசாரிகாவுக்கும் இடையே பிரேக்அப்

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகை ஸ்ருதிஹாசன், கமல்ஹாசன் மற்றும் சரிகா தம்பதியினரின் மூத்தமகள் ஆவார். 38 வயதாகும் ஸ்ருதிஹாசன் 2011ஆம் ஆண்டு, வெளியான 7ஆம் அறிவு திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதன்பின், 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3, புத்தம் புது காலை, லாபம் ஆகியப் படங்களில் நடித்துள்ளார். தவிர, ஸ்ருதிஹாசன், தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். அதில் அனகனகா ஓ தீரடு, ஓ மை ஃபிரெண்ட், கபர் சிங், பலுப்பு, ராமய்யா வஸ்தவ்வய்யா, எவடு, ரேஸ் குர்ரம், அகடு, ஸ்ரீமந்துடு, பிரேமம்(தெலுங்கு), கிராக், பிட்ட கதைலு, வக்கீல் ஷாப், வீர சிம்ஹா ரெட்டி, வால்டர் வீரய்யா, ஹாய் நானா, சலார் பார்ட் 1 ஆகியப் படங்களில் நடித்து பிரபல தெலுங்கு நடிகையாகவும் பெயர் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன், டூடுல் கலைஞரும் ஓவியருமான சாந்தனு ஹசாரிகாவை பல ஆண்டுகளாக காதலித்தார். அஸ்ஸாம் மாநிலம், கெளகாத்தி நகரைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகா ஓவியம் மற்றும் டிசைன் செய்வதில் வல்லவர். 

மும்பையில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்த ஸ்ருதி ஹாசனுடன், லிவிங் டூ கெதரில் இருந்து வந்தார், சாந்தனு ஹசாரிகா. இது கமல்ஹாசனுக்கும் தெரியும். அவர் தனது மகளின் தனிப்பட்ட முடிவுகளில் தலையிடாத தந்தையாகவே இருந்து வந்தார். 

 இந்நிலையில் நீண்டநாள் காதலி ஜோடியான ஸ்ருதிஹாசனும், சாந்தனு ஹசாரிகாவும் ஒருவரை ஒருவர் பிரேக் அப் செய்துவிட்டதோடு மட்டுமில்லாமல், இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் அன்ஃபாலோ செய்துள்ளனர். 

 ஸ்ருதி ஹாசனின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகள் பற்றி விசாரித்தபோது, இருவருக்கும் நெருங்கிய வட்டாரங்கள் அவர்களது பிரிவை உறுதிசெய்துள்ளனர். 

இதுதொடர்பாக அவர்கள் பேசியதாவது, "அவர்கள் கடந்த மாதம் பிரிந்தனர். தனிப்பட்ட கருத்துகளில் இருந்த உடன்பாடு இன்மையால், இருவரும் சுமூகமாக பிரிந்து செல்ல முடிவு செய்தனர்’’ என்றார்.

இதுதொடர்பாக கமல்ஹாசனை அணுகியபோது, அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

நடிகை ஸ்ருதிஹாசனும் சாந்தனு ஹசாரிகாவும் சுமார் ஒரு மாதமாகப் பிரிந்து வாழ்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல், ஸ்ருதிஹாசன் தனது முன்னாள் காதலர் சாந்தனு ஹசாரிகாவுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியுள்ளார். 

மேலும் ஸ்ருதி ஹாசன், சமீபத்தில் சில காலங்களாக தனது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இல்லாமல், ஒரு சிறிய சமூக ஊடக இடைவெளியை எடுத்துக்கொண்டார். பின்னர் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில், "வாழ்க்கை ஒரு பைத்தியக்காரத்தனமான பயணம். என்னைப் பற்றியும் மக்களைப் பற்றியும் நிறைய கற்றுக்கொண்டேன். நாம் செய்ய வேண்டிய எல்லா விஷயங்களுக்காகவும் நாம் ஒருபோதும் வருத்தப்படக்கூடாது"என்றார். 

ஸ்ருதி ஹாசன் - சாந்தனு ஹசாரிகாவின் காதல் கதை:

ஸ்ருதி ஹாசனும், சாந்தனு ஹசாரிகாவும் சமூக வலைதளங்கள் மூலம் ஒருவருக்கொருவர் உரையாடத் தொடங்கினர். மேலும், டூடுல் கலைஞர் சாந்தனு, ஸ்ருதியின் புகைப்படங்களைப் பார்த்து காதலில் விழுந்தார். பின்னர் இருவரும் மனம்விட்டுப் பேசத் தொடங்கினர். 

முன்னதாக ஒரு நேர்காணலில், ஸ்ருதிஹாசன் தனது கவிதைகளில் ஒன்றை சாந்தனு ஹசாரிகாவுக்கு அனுப்பியதாகவும், அதற்கு ரியாக்ட் செய்யும் விதமாக, ஒரு விரிவான ஓவியப்படைப்பை சாந்தனு அனுப்பியதாகவும் சொல்லியிருந்தார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்