தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Shruti Haasan New Year Celebration: அப்பா, பாய்பிரண்ட், மாமா, அத்தையுடன் புத்தாண்டை கொண்டாடிய ஸ்ருதிஹாசன்

Shruti Haasan New Year Celebration: அப்பா, பாய்பிரண்ட், மாமா, அத்தையுடன் புத்தாண்டை கொண்டாடிய ஸ்ருதிஹாசன்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 01, 2024 09:57 AM IST

சலார் படத்தில் சிறப்பான நடிப்பின் மூலம் கவனத்தை ஈர்த்துள்ளார் ஸ்ருதிஹாசன். இவரது நடிப்பில் இந்த ஆண்டில் வரிசை கட்டி படங்கள் வெளியாகவுள்ளன.

குடும்பத்தினருடன்  புத்தாண்டை கொண்டாடிய ஸ்ருதிஹாசன்
குடும்பத்தினருடன் புத்தாண்டை கொண்டாடிய ஸ்ருதிஹாசன்

ட்ரெண்டிங் செய்திகள்

படத்தில் பிரபாஸ் காதலியாக வரும் ஸ்ருதிஹாசனின் நடிப்பு வெகுவாக பாராட்டுகளை பெற்றது. இதையடுத்து ஸ்ருதிஹாசன் 2024ஆம் ஆண்டு புத்தாண்டை தந்தை கமல்ஹாசன், பாய்பிரண்ட் சாந்தனு ஹசாரிகா, தனது அத்தையும் நடிகையுமான சுகாசினி மற்றும் அவரது கணவரும் டாப் இயக்குநருமான மணிரத்னம் ஆகியோருடன் கொண்டாடியுள்ளார்.

புத்தாண்டு 2024 கொண்டாட்டத்தின் புகைப்படங்களை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாவில் ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார்.

பொதுவாக நடிகைகள், நடிகர்கள் பலரும் புத்தாண்டை வெளிநாடுகளில் பார்ட்டி, டான்ஸ் என கல்ர்புஃல்லாக கொண்டாடி அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இதற்கிடையே மிகவும் சிம்பிளாக குடும்பத்தினருடன் புத்தாண்டை வரவேற்றுள்ளார் ஸ்ருதிஹாசன்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் தந்தை கமலும், ஸ்ருதிஹாசனும் கருப்பு நிறத்தில் உடையணித்து பார்ப்பவர்கள் கொள்ளை கொள்ளும் விதமாக இருந்தனர். குடும்பத்தினருடனான இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஸ்ருதியின் பாய்பிரண்ட் சாந்தனுவும் உடன் இருந்தார்.

சாந்தனுவடன் இணைந்து பல்வேறு குறும்புத்தனமான விடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கும் ஸ்ருதி, தற்போது அவர் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ஸ்ருதிஹாசன் நடிப்பில் டக்காய்ட் என்ற படம் உருவாகி வருகிறது. இந்தி, தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அத்வி ஷே கதையின் நாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் டீஸர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதேபோல் கடந்த ஆண்டில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைந்து வால்டர் வீரய்யா, தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து வீர சம்ஹா ரெட்டி ஆகிய படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் ஒரே சமயத்தில் வெளியாகி ஹிட்டடித்தன.

இதைத்தொடர்ந்து நானி நடித்த ஹாய் நானா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். கடந்த 2023 முழுவதும் தெலுங்கு படத்தில் நடித்த ஸ்ருதிஹாசன், தற்போது இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடைசியாக தமிழில் 2021இல் லாபம் படம் வெளியானது. மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்