Inimel: லோகிண்ணோவ்.. உச்சகட்ட போதை ரொமான்ஸில் ‘இனிமேல்’.. ஜிவ்வென அணைக்கும் ஸ்ருதி ஹாசன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Inimel: லோகிண்ணோவ்.. உச்சகட்ட போதை ரொமான்ஸில் ‘இனிமேல்’.. ஜிவ்வென அணைக்கும் ஸ்ருதி ஹாசன்

Inimel: லோகிண்ணோவ்.. உச்சகட்ட போதை ரொமான்ஸில் ‘இனிமேல்’.. ஜிவ்வென அணைக்கும் ஸ்ருதி ஹாசன்

Marimuthu M HT Tamil Published Mar 25, 2024 04:50 PM IST
Marimuthu M HT Tamil
Published Mar 25, 2024 04:50 PM IST

#Inimel: லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்த இனிமேல் மியூசிக் வீடியோ ஆல்பம் ரிலீஸ் ஆகியுள்ளது.

இனிமேல்
இனிமேல்

உலக நாயகன் கமல்ஹாசன் வரிகளில், நடிகை ஸ்ருதிஹாசன் இசையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் பாடல் ‘இனிமேல்’. இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், லோகேஷ் கனகராஜூடன் சேர்ந்து ரொமான்ஸ் செய்துள்ளார். 

 இந்தப்பாடலின் அறிவிப்பு தொடர்பான போஸ்டர் கடந்த மாதம் வெளியான நிலையில், அண்மையில் இந்தப்பாடல் தொடர்பான புரோமோ வெளியாகி, இளைஞர்கள் இடையே பரபரப்பாகப் பேசப்பட்டது. 

அதற்குக் காரணம், அந்தப் புரோமோவில் நடிகை ஸ்ருதி ஹாசனுடன் மிகவும் நெருக்கமாக நடித்து இருந்தார் லோகேஷ் கனகராஜ். 

அதுகுறித்து லோகேஷ் கனகராஜிடம் கேட்டபோது, “என்னுடைய திரைப்படங்களில் காதலுக்கான இடம் கம்மியாக இருப்பதையும், நான் கதாநாயகிகளை கொன்று விடுவதையும் குறிப்பிட்டு, இவர் எப்படி இப்படியான ஒரு ரொமான்டிக் பாடலில் நடித்தார் என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது.

ஆக்சன் படங்களுக்கு என்று சில டெம்ப்ளேட்கள் இருக்கின்றன. ஆகையால் அதன்படிதான் அதை செய்தாக வேண்டும். ஆனால், இனிமேல் பாடல் என்பது எனக்கு உண்மையில் ஆச்சரியம் தான். ஒரு நாள் எனக்கு கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ஒரு அழைப்பு வந்தது.

நான் அவர்கள் வேறு எதற்காகவோ அழைக்கிறார்கள் என்று நினைத்தேன். இதனையடுத்து அவர்கள் விஷயத்தை சொன்னார்கள். நான் ஸ்ருதிஹாசனை சந்தித்தேன். அவரை பார்த்த உடனேயே நான் சிரித்துவிட்டேன்.

அதன் பின்னர் பாடலைக் கேட்டேன். கொஞ்சம், கொஞ்சமாக ஏன் இதை முயற்சி செய்து பார்க்கக்கூடாது என்று தோன்றியது. இதில் இன்னொரு முக்கியமான விஷயம் கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ஏதாவது கேட்டு வந்தால், அதற்கு என்னால் நோ சொல்ல முடியாது” என்று பேசியிருந்தார். இந்தப் பதிலுக்கும் பலர் கிண்டல் அடித்திருந்தனர். 

இந்நிலையில் இனிமேல் பாடல், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் யூட்யூப் பக்கத்தில், சரியாக மாலை 4 மணிக்கு ப்ரீமியர் செய்யப்பட்டது.  ‘’இனிமேல் இந்த தொல்லையில்லை; இதுவே இதுவே உறுதி என்று சொல்வேன்’’ என அந்தப் பாடல் தொடங்குகிறது.

இனிமேல் வீடியோ பாடல் எடுக்கப்பட்ட விதம்:

முதலில் நெருக்கமாகப் பழகும் இளைஞனும், ஒரு இளம்பெண்ணும் சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் ஓடும் படத்துக்கு முதன்முதலாகச் சென்று பார்ப்பதுபோல் சென்று, அங்கு தங்களுக்கான தனிமை நெருக்கத்தை உணர முயற்சிக்கின்றனர்.

அப்போது அவர்களது வாழ்க்கைபோன்ற ஒன்று, திரையில் காட்டப்படுகிறது. அதில், அந்த இளம்பெண்ணையும் இளைஞனையும்போல் திரையில் காட்டப்படுகிறது. 

காட்சிகள் ஓட ஓட, திரையரங்கில் இருக்கும் இருளில் இருவரும் நெருக்கமாகின்றனர். அந்தக் காட்சியில் வரும் இளம்பெண்ணும் இளைஞரும் முதலில் நண்பர்களாக அவுட்டிங் செல்கின்றனர். பப்பிற்குச் சென்றாலும் கண்ணியம் காக்கின்றார், அந்த ஆண். அதன்பின், லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பிற்குச் சென்று ஒன்றாக வசிக்கின்றனர், அந்த இளைஞரும் இளம்பெண்ணும். அதில் ஆண் கொஞ்சம் நாகரிகம் பார்ப்பவனாகவும், அந்த இளம்பெண் எதையும் கண்டுகொள்ளாதவள்போலும் காட்டப்படுகிறது.

அதன்பின் இளம்பெண் பணிசெய்யும் பேக்கரிக்குச் செல்லும் இளைஞர், அங்கு அப்பெண்ணுக்கு உதவி புரிய நினைத்து, உணவுப்பொருட்களை விநியோகம் செய்யும் சப்ளையர் போல் மாறுகிறார். அப்போது, வாடிக்கையாளர் எகிறவே, அவர் மீது நீரை ஊற்றுகிறார், திரையில் காட்டப்படும் இளைஞர்.

பின், ஒரு மோதிரத்தை தன் காதலியின் கையில் போட்டு விடும், அந்த இளைஞர், தனிமையின் நெருக்கத்தில், அந்த மோதிரத்துடன் சேர்த்து, தன் காதலியின் கையில் முத்தமிடுகிறார்.

அதன்பின், பதிவுத்திருமணம் செய்துகொள்ளும், லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் காதலனும் காதலியும், கல்யாணத்திற்குப் பின், தனது நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ந்து விளையாடுகின்றனர். முதல்நாள் இரவில் கூட, வீடியோ கேம் விளையாடுகின்றனர், இளம் தம்பதியினர்.

அதன்பின், இளம் தம்பதிகள் இடையே கல்யாணத்துக்குப் பின், மெல்ல கருத்துவேறுபாடுகள் வர ஆரம்பிக்கிறது. டாய்லெட் சுத்தத்தைப் பற்றி பேச ஆரம்பிக்கையில் காதல் மனைவியிடம் கோபத்தில் கொப்பளிக்கிறார், அந்த இளம் கணவன். அதில் பிரச்னை தொடங்குகிறது. அதன்பின், ஒருவருக்குப் பிடிக்காத விஷயத்தை மற்றவர்கள் மாறி மாறி செய்துகொண்டு கோபத்தை மூட்டிக்கொள்கின்றனர். இதற்கிடையே அந்த இளம் மனைவி கர்ப்பமாகி விடுகிறார். அது இளம் கணவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.

இறுதியாக இருவரும் பிரிந்துவிட நினைக்கின்றனர். இருவரும் டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்திடுகின்றனர். இதை கமலா திரையரங்கில் திரையில் பார்க்கும் இளம்ஜோடியினர், நாம் அவ்வாறு திருமணத்துக்குப் பின் நடந்துகொள்ளக்கூடாது என முடிவு எடுக்கின்றனர். பின், ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு வெளியில் செல்கின்றனர்.

இந்த இனிமேல் மியூசிக் வீடியோவை, துவர்கேஷ் பிரபாகர் இயக்க, புவன் கவுடா இருள் மற்றும் மஞ்சள் டோனில் பாடல் முழுக்க  ஒளிப்பதிவு செய்திருந்தார். பிலோமின் ராஜின் எடிட்டிங்கில் பிசிறுதட்டவில்லை. பாடலை கமல்ஹாசன் எழுதி, இறுதியில் ஒரு சில வரிகளும் கமல்ஹாசன் பாடுகிறார். கலை இயக்கத்தை சவுந்தர் நல்லசாமி செய்துள்ளார். 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.