Bayilvan: 2 நடிகைகளுடன் உல்லாசமாக ஒரே படுக்கையில் இருந்த தமிழ் நடிகர்.. 8 வயதில் காதலித்த நடிகை: பயில்வான் ரங்கநாதன்-tamil actor who was in the same bed with 2 actresses and movie gossips says bayilvan ranganathan - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bayilvan: 2 நடிகைகளுடன் உல்லாசமாக ஒரே படுக்கையில் இருந்த தமிழ் நடிகர்.. 8 வயதில் காதலித்த நடிகை: பயில்வான் ரங்கநாதன்

Bayilvan: 2 நடிகைகளுடன் உல்லாசமாக ஒரே படுக்கையில் இருந்த தமிழ் நடிகர்.. 8 வயதில் காதலித்த நடிகை: பயில்வான் ரங்கநாதன்

Marimuthu M HT Tamil
Sep 07, 2024 05:34 PM IST

Bayilvan: 2 நடிகைகளுடன் உல்லாசமாக ஒரே படுக்கையில் இருந்த தமிழ் நடிகர் மற்றும் 8 வயதில் காதலித்த நடிகை பற்றி மூத்த சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டியளித்துள்ளார்.

Bayilvan: 2 நடிகைகளுடன் உல்லாசமாக ஒரே படுக்கையில் இருந்த தமிழ் நடிகர்.. 8 வயதில் காதலித்த நடிகை: பயில்வான் ரங்கநாதன்
Bayilvan: 2 நடிகைகளுடன் உல்லாசமாக ஒரே படுக்கையில் இருந்த தமிழ் நடிகர்.. 8 வயதில் காதலித்த நடிகை: பயில்வான் ரங்கநாதன்

இதுதொடர்பாக சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் கிங் 24x7 யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘’பொதுவாகவே, நடிகர்கள் மத்தியில் கமல்ஹாசனை மிகச்சிறந்த நடிகர் என்று எல்லோரும் புகழ்வார்கள். அதேநேரம் ஜோடியாக நடித்த நடிகையை பதம்பார்க்காமல் விடவேமாட்டார், கமல்ஹாசன். ஒன்று உதட்டில் கிஸ் அடிப்பார், பின்புறத்தைக் கடிச்சிடுவார். எல்லா படங்களிலும் நடிகைகளைப்போட்டு கட்டி அணைத்து உருண்டு, புரண்டுவிடுவார், கமல்ஹாசன். 

இதனால், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இடையே நடந்த போட்டியில் ரஜினிகாந்த் தான் வசூலைக் குவிப்பார். பெண்கள், ரஜினிகாந்தின் படங்களைப் பார்க்க குவிவார்கள். கமல்ஹாசன் படத்தைப் பார்க்க இளைஞர்கள் முன்வருவார்கள். தவிர, பெண்கள் முன்வரமாட்டார்கள். அதுவும் ஹவுஸ் வொய்ஃப் எல்லாம் கமல்ஹாசனின் படத்தைப் பார்க்க வரமாட்டார்கள். ஏனென்றால், ஆபாசமாக இருக்கும் என்ற ஒரு பொதுவான குற்றச்சாட்டு நிலவுகிறது. கமல்ஹாசன் என்பவர் மேற்கத்திய கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் நடிகர்.

கமல்ஹாசன் என்னும் ஜாம்பவான்:

 25ஆண்டுகளுக்குப் பின்னால், செய்யப்போவதை முன்னாலே செய்துவிடுவார். விஷப்பரீட்சை செய்வார். குணா போன்ற படத்தை யாராலும் எடுக்கமுடியுமா?. விருமாண்டி, ஒரே கதை, இரண்டு திரைக்கதை. இப்படி எல்லாம் யாராலும் செய்யமுடியாது. அதில் சகலகலாவல்லவன் கமல்ஹாசன். இதில் யாரும் மாற்றுக்கருத்துத் தெரிவிக்கமுடியாது. நடிகர் சிவாஜி கணேசனுக்கு அடுத்து, கமல்ஹாசன் தான். எந்தப் பாத்திரம் கொடுத்தாலும் சரி, அது பிறமொழிப்பாத்திரமாக இருந்தாலும்சரி, அதிரிபுதியாக அசத்திவிடுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரிடம் இருக்கும் ஒரே வீக்னஸ், பெண்கள் தான். சமீபத்தில் கூட படத்தில் ஒரு பக்கம் ஆண்ட்ரியா, மறுபக்கம் பூஜா குமார் ஆகியோரைப்போட்டு படுத்தி எடுத்தியிருப்பார். ஒரு படுக்கையில் இரண்டு நடிகைகளுடன் படுத்தவர், வாழ்ந்தவர், கமல்ஹாசன். 

ஆரம்பத்தில் கமல்ஹாசனின் பழைய படங்களில் ஜோடியாக நடித்தவர், நடிகை சுமித்ரா. அதே நடிகை சிங்காரவேலன் படத்தில், கமல்ஹாசனின் அம்மாவாக நடித்திருப்பார். இதுதொடர்பாக பேட்டியளித்திருந்த சுமித்ரா, ‘ சிங்காரவேலன் என்னும் படத்தில் அம்மா என்று வேகமாக வருவதற்குப் பதில், சுமி சுமி என்று வந்தார், நடிகர் கமல்ஹாசன். அப்போது நான் சொன்னேன். இந்தப் படத்தில் நான் உனக்கு அம்மா. அம்மான்னு கூப்பிடுன்னு சொன்னேன்.  உடனே, சூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரும் சிரித்துவிட்டார்கள். அந்தப்படத்தில் அம்மாவாக நடித்திருந்தாலும் என்னிடம் கமல்ஹாசன் ஆபாச ஜோக்கை அடித்துக்கொண்டிருப்பார், கமல்ஹாசன். அப்பேர்பட்ட ஆள் கமல்ஹாசன்’’ என்று சொன்னார், நடிகை சுமித்ரா.

நடிகர் வருண் தவான், அவரது தந்தை டேவிட் தவான் செல்லும் படப்பிடிப்புத்தளுங்களுக்கு எல்லாம் செல்வார். அப்போது நடிகை ஸ்ரத்தா கபூர், அவரது தந்தை சக்தி கபூருடன் படப்பிடிப்புக்குச் செல்வார்களாம். அப்போது வருண் தவான் மீது ஸ்ரேத்தா கபூருக்கு 8 வயதில் காதல் ஏற்பட்டிருக்கிறது. அதைத் தன் தந்தையிடம் சொன்னதும் ஸ்ரேத்தா கபூருக்கு அடிவிழுந்திருக்கிறது; பின் படிக்கச் சொல்லியிருக்கிறார். இதனை ஸ்ரேத்தா கபூர் தன் சமீபத்திய பேட்டியொன்றில் கூறியிருக்கிறார். 

கவர்ச்சி உடையில் படங்களை வெளியிட்ட நடிகை:

நடிகை ரோஜா, ஆந்திராவில் தற்போது தில்லுமுல்லு குற்றச்சாட்டில் மாட்டியிருக்கிறார். கடந்த ஆட்சியில் ஜெகன்மோகன் ரெட்டி ஆளும்போது அமைச்சராக இருந்து ரூ.35 கோடி ஊழல் செய்துவிட்டதாகப் புகார் எழுந்துள்ளது. விசாரணை வளையத்தில் இருக்கும் நடிகை ரோஜா, விரைவில் கைது செய்யப்படுவார். இதனிடையே நடிகை ரோஜா சமீபத்திய பேட்டியில், ‘’நான் விஜய் கட்சியில் சேரமாட்டேன். தொடர்ந்து ஜெகன்மோகனின் கட்சியில் தான் பயணிப்பேன்’’ என்றார். 

நடிகை மலைக்கா அரோரா, பல்வேறு மொழிகளில் கவர்ச்சி நடனம் ஆடுவதில் வல்லவர். இவர் நடிகர் அர்ஜூன் கபூரை காதலித்து வந்தார். இருவருமிடையே பிரேக்-அப் ஆனதாக சொல்லப்பட்ட நிலையில் தனது 51 வயதில் தான், இன்னும் இளமையாக இருப்பதை நிரூபிக்கும் வகையில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்’’ எனத் தெரிவித்தார். 

நன்றி: கிங் 24X7 யூட்யூப் சேனல்!

பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.