Actress Roja: ‘அங்கேயே நில்லுங்க..’.. ஆசையாக வந்த தூய்மை பணியாளர்கள்; கறார் காட்டிய நடிகை ரோஜா..கண்டிக்கும் நெட்டிசன்ஸ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Roja: ‘அங்கேயே நில்லுங்க..’.. ஆசையாக வந்த தூய்மை பணியாளர்கள்; கறார் காட்டிய நடிகை ரோஜா..கண்டிக்கும் நெட்டிசன்ஸ்

Actress Roja: ‘அங்கேயே நில்லுங்க..’.. ஆசையாக வந்த தூய்மை பணியாளர்கள்; கறார் காட்டிய நடிகை ரோஜா..கண்டிக்கும் நெட்டிசன்ஸ்

Kalyani Pandiyan S HT Tamil
Jul 16, 2024 06:44 PM IST

Actress Roja: தூய்மை பணியாளர்கள் ரோஜாவுக்கு அருகில் வர முயன்றனர். உடனே நடிகை ரோஜா, அங்கேயே நில்லுங்கள், அருகில் வரவேண்டாம் என்று கூறினார்.

Actress Roja: ‘அங்கேயே நில்லுங்க..’.. ஆசையாக வந்த தூய்மை பணியாளர்கள்; கறார் காட்டிய நடிகை ரோஜா..கண்டிக்கும் நெட்டிசன்ஸ்
Actress Roja: ‘அங்கேயே நில்லுங்க..’.. ஆசையாக வந்த தூய்மை பணியாளர்கள்; கறார் காட்டிய நடிகை ரோஜா..கண்டிக்கும் நெட்டிசன்ஸ்

அப்போது, தூய்மை பணியாளர்கள் ரோஜாவுக்கு அருகில் வர முயன்றனர். உடனே ரோஜா, அங்கேயே நில்லுங்கள், அருகில் வரவேண்டாம் என்று கூறினார். இதனையடுத்து அவர்கள் அங்கேயே நின்று கொண்டு செல்ஃபி எடுத்தார்கள். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் ரோஜாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

யார் இந்த நடிகை ரோஜா? 

நடிகை ரோஜா, 1972 ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி ஆந்திரா மாநிலம், திருப்பதியில் நாகராஜ ரெட்டி மற்றும் லலிதா தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். பொலிட்டிக்கல் சயின்ஸ் படிப்பை முடித்த ரோஜா சினிமாவில் நுழைவதற்கு முன்பு குச்சுப்புடி நடனக்கலைஞராக இருந்தார்.

இவர் சினிமாவில் தந்தையின் ஆசைக்காகதான் நடிக்க வந்தாராம். இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியிருப்பார். அதன் பிறகு நல்ல வரவேற்பு கிடைக்கவே சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தார். 1991-ம் ஆண்டு ‘பிரேம தப்பாஸு’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தமிழில் வெளியான செம்பருத்தி படம் மூலமாக தான் ரோஜா அறிமுகமானார். 

செம்பருத்தி கொடுத்த செழுமை 

நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக நடிகை ரோஜா நடித்திருந்தார். பணக்கார தொழிலதிபரின் மகனுக்கும், வீட்டு வேலை பார்க்கும் சாதாரண மீனவப் பெண்ணுக்கும் ஏற்படும் காதலை மையமாகக் கொண்டு இந்த திரைப்படத்தின் கதை நகரும். இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய ஹிட் அடித்த காரணத்தினால், இந்திய சினிமாவில் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

இந்த திரைப்படத்தில் செம்பருத்தியாக அறிமுகமான ரோஜாவைப் பிற்காலத்தில் படத்தின் இயக்குநர் ஆர்.கே செல்வமணி காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். செம்பருத்தி படத்திற்குப் பிறகு சூரியன், உழைப்பாளி, அதிரடிப்படை,மக்கள் ஆட்சி, ஏழையின் சிரிப்பில், என் ஆசை ராசாவே,வீரா என நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகி வரிசையில் வந்தார்.

1999-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் பிரிவான தெலுங்கு மஹிளாவில் தலைவர் பதவி கிடைத்தது. ஆனால், அங்கு அவருக்கு சரியான மரியாதை கிடைக்கவில்லை. பின்னர் அங்கிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ஆனால், அங்கும் இதே நிலை தொடர ஒருக்கட்டத்தில் அரசியலை விட்டே விலகிவிடலாம் என்று எண்ணினார் ரோஜா. அப்போதுதான் 2011-ம் ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. அங்கு உடனே தன்னை இணைத்துக் கொண்டார் ரோஜா.  

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.