பிரிச்சு பேசறதை நிறுத்துங்க.. இந்தியா சினிமான்னு சொல்லுங்க.. வட, தென் இந்தியா சினிமா பற்றி மனம் திறந்து பேசிய தமன்னா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பிரிச்சு பேசறதை நிறுத்துங்க.. இந்தியா சினிமான்னு சொல்லுங்க.. வட, தென் இந்தியா சினிமா பற்றி மனம் திறந்து பேசிய தமன்னா

பிரிச்சு பேசறதை நிறுத்துங்க.. இந்தியா சினிமான்னு சொல்லுங்க.. வட, தென் இந்தியா சினிமா பற்றி மனம் திறந்து பேசிய தமன்னா

Marimuthu M HT Tamil
Nov 22, 2024 10:26 PM IST

பிரிச்சு பேசறதை நிறுத்துங்க.. இந்தியா சினிமான்னு சொல்லுங்க.. வட, தென் இந்தியா சினிமா பற்றி மனம் திறந்து பேசிய தமன்னாவின் பேட்டி பற்றிப் பார்ப்போம்.

பிரிச்சு பேசறதை நிறுத்துங்க.. இந்தியா சினிமான்னு சொல்லுங்க.. வட, தென் இந்தியா சினிமா பற்றி மனம் திறந்து பேசிய தமன்னா
பிரிச்சு பேசறதை நிறுத்துங்க.. இந்தியா சினிமான்னு சொல்லுங்க.. வட, தென் இந்தியா சினிமா பற்றி மனம் திறந்து பேசிய தமன்னா (Photo: Instagram)

நடிகை தமன்னாவின் கருத்துப்படி, இந்த தலைப்பில் தொடர்ச்சியான விவாதம் நடப்பது மேலும் குழப்பம் மற்றும் பிளவுக்கு மட்டுமே வழிவகுக்கிறது எனத் தெரிவித்தார்.

ஆஜ் தக் 2024ஆம் ஆண்டுக்கான ஒரு ஊடக அமர்வில் நடிகை தமன்னா பாட்டியா கலந்துகொண்டார். அதில், சிக்கந்தர் கா முக்தார் படத்தின் இணை நடிகர்களான அவினாஷ் திவாரி மற்றும் ஜிம்மி ஷெர்கில் ஆகியோரும் இணைந்ததாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

விவாதத்தின் போது, தமன்னா பான்-இந்தியா சினிமா அணுகுமுறையின் மூலம் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தினார். வடக்கு மற்றும் தெற்கு என்னும் விவாதத்தை கைவிடுவதற்கான நேரம் இது என்று நடிகை தமன்னா தனது கருத்தினைப் பகிர்ந்து கொண்டார்.

வட இந்திய மற்றும் தென்னிந்திய திரைப்படம் குறித்து பேசிய தமன்னா:

சினிமாவில் வடக்கு-தெற்கு விவாதம் குறித்து பேசிய நடிகை தமன்னா, "எங்கள் சொந்த துறையில் வேறுபாடுகளை உருவாக்குவதை நிறுத்த வேண்டிய நேரம் இது. வட இந்திய சினிமாத் துறையும் தென்னிந்திய சினிமாத் துறையும் ஒன்றிணைந்து ஒரு உண்மையான பான்-இந்தியா திரைப்படத்தை உருவாக்க வேண்டும். ஒருவருக்கொருவர் எதிராக விளையாடுவது நீண்ட காலமாக நடந்து வருகிறது. இது சினிமாவை மேலும் அழிக்க மட்டுமே செய்துள்ளது. இதுதொடர்பான பழி எப்போதும் நடிகர் மற்றும் நடிகைகள் மீதுதான், விழுந்துள்ளது.

ஆனால், சர்வதேச அளவிலும் மக்கள் நம்மை நோக்கி பார்க்கும் ஒரு அழகான கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பதே உண்மை. அவர்கள் இந்தியப் படங்களைப் பார்க்க விரும்புகிறார்கள். மாறாக ஒரு சர்வதேச வெளியில் நம்மை எவ்வாறு நிலைநிறுத்திக் கொள்வது என்பது பற்றி நாம் பேச வேண்டும்.

தென்னிந்தியப் படங்கள் மற்றும் வட இந்தியப் படங்கள் என்ற தடையை நீக்க வேண்டும். திரைப்படங்கள் ஒரு கூட்டுக் கலையின் வடிவம் ஆகும். ஒவ்வொரு முறையும் படப்பிடிப்பு தளத்தில் வேலை செய்யும்போது, அது ஒரு புதிய அனுபவமாக இருக்கும். ஒரு சினிமாத் துறையில் ஏதாவது வேலை செய்தால், அது மற்றொரு துறையில் நன்கு ரிசல்ட் கிடைக்கும் என்று எந்த சூத்திரமும் இல்லை. அதற்கு சரியான வழியும் இல்லை" என்று நடிகை தமன்னா பாட்டியா பேசியிருக்கிறார்.

அதேபோல், நடிகர் வினாஷ் திவாரி பேசுகையில், "பிராந்திய பிளவை கைவிட்டு, அதை 'பாலிவுட்' என்று அழைப்பதை நிறுத்த வேண்டிய நேரம் இது.

தென்னிந்திய திரைப்படங்கள் என்றும்; இந்தி திரைப்படங்கள் என்றும் அழைப்பதற்குப் பதிலாக இந்திய திரைப்படத்துறை என்று அழைக்கப்படும் நாளுக்காக தான் காத்திருப்பதாக நடிகர் வினாஷ் திவாரி பகிர்ந்து கொண்டார்.

தமன்னா நடித்த படம் எத்தகையது?:

நடிகை தமன்னா பாட்டியா சிக்கந்தர் கா முக்தார் படத்தில், அவினாஷ் திவாரி மற்றும் ஜிம்மி ஷெர்கில் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். வரவிருக்கும் இப்படத்தை நீரஜ் பாண்டே இயக்கியிருக்கிறார். இப்படத்தில் திவ்யா தத்தா மற்றும் சோயா அஃப்ரோஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

தமன்னா நடித்த காமினி சிங் என்னும் பாத்திரத்திலும், அவினாஷ் திவாரி நடித்த சிக்கந்தர் சர்மா கதாபாத்திரத்திலும் மற்றும் ராஜீவ் மேத்தா நடித்த மங்கேஷ் தேசாய் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மூன்று சந்தேக நபர்களைச் சுற்றி 2008ஆம் ஆண்டு நடந்த வைரக் கொள்ளையை இப்படம் காட்டுகிறது. ஜிம்மி விசாரணை அதிகாரி ஜஸ்விந்தர் சிங்காக நடிக்கிறார். அவர் குற்றத்திற்கும் அப்பாவித்தனத்திற்கும் இடையிலான மெல்லிய கோட்டில் சாட்சியாக இருக்கிறார். சிக்கந்தர் கா முக்தார் நவம்பர் 29அன்று நெட்ஃபிளிக்ஸில் திரையிடப்படுகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.