Tamannaah Bhatia: ‘அச்சோ அச்சோ அச்சச்சோ’: மில்க் பியூட்டி தமன்னாவின் லேட்டஸ்ட் லுக்.. விஜய்யுடன் ஊர் சுற்றினாரா?
Tamannaah Bhatia: ‘அச்சோ அச்சோ அச்சச்சோ’: மில்க் பியூட்டி தமன்னாவின் லேட்டஸ்ட் லுக்.. விஜய்யுடன் ஊர் சுற்றினாரா? என்பது குறித்த தகவலை கீழே அறிந்துகொள்ளலாம்.
Tamannaah Bhatia: நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் லுக் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
நடிகை தமன்னா பாட்டியா, சமீபத்தில் ‘வேதா’ என்னும் இந்தி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அப்போது, ‘ஜரூரத் சே ஜியாதா’ என்னும் பாடல் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் பாடலை விட, அங்கு வந்திருந்த நடிகை தமன்னாவும் அவர் அணிந்திருந்த வெள்ளை நிற ஆர்கன்சா சேலை(White Organza Saree)யும் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
வேதா என்னும் இப்படத்தின் கதாநாயகனாக பாலிவுட் நடிகர் ஜான் அபிரஹாமும் கதாநாயகியாக ஷர்வாரியும் நடித்துள்ளார். நடிகை தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை தமன்னா, வேதா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட படங்களும், வீடியோக்களும் வைரல் ஆகி வருகின்றன.
வெள்ளை நிற சேலையில் மில்க் பியூட்டி தமன்னா பாட்டியா:
நடிகை தமன்னா பாடல் வெளியீட்டிற்கு மலர் வேலைப்பாடுகள் கொண்ட வெள்ளை நிற ஆர்கன்சா புடவையை அணிந்திருந்தார். அவள் அதை பொருத்தமான எம்பிராய்டரி ரவிக்கையுடனும், இரண்டு வரிசை முத்து மாலைகளுடனும் மற்றும் ஒரு எளிய கருப்பு பொருளுடனும் உருவாக்கி அணிந்திருந்தார்.
விழாவில் நடிகை தமன்னா இளஞ்சிவப்பு உதடுகள் மற்றும் ரோஸ் கன்னங்களுடன் குறைவாக மேக்கப் போட்டு இருந்தார். அவரது தலைமுடி லைட்டாக கர்லிங் செய்து, ஃப்ரீ ஹேராக வைத்திருந்தார்.
இந்நிலையில் விழாவில் எடுக்கப்பட்ட நடிகை தமன்னாவின் படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்தன. அதில் ஒரு ரசிகர், இதய எமோஜியைக் குறிப்பிட்டு, தமன்னாவை சுருக்கி, ‘தாம்’என்று அழைத்து இருந்தார். மற்றொரு ரசிகர், அவரது வீடியோவைப் பகிர்ந்து, ’இந்தியாவின் சரியான அழகு’ என்று குறிப்பிட்டு அழைத்தார்.
ஏராளமான ரசிகர்கள் நடிகை தமன்னாவின் படங்களையும் வீடியோக்களையும் எக்ஸ் சமூக வலைதளத்தில் இதய எமோஜிக்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
விழாவுக்குப் பின் விஜய்யுடன் சுற்றிய தமன்னா:
விழாவில் கலந்துகொண்டதற்குப் பின், தனது காதலர் விஜய் வர்மாவுடன் நடிகை தமன்னா மும்பையில் டின்னர் டேட்டிங் சென்றார். உணவகத்தை விட்டுவெளியேறும்போது நடிகை தமன்னா கருப்பு நிற பேன்ட், வெள்ளை நிற டி-ஷர்ட், அதற்கு மேல் ஜீன்ஸ் சட்டையினை அணிந்திருந்தார். நடிகர் விஜய் வர்மா சந்தன நிற உடைகளுடனும், பழுப்புநிற காலணிகளுடன் நடிகை தமன்னாவுடன் ஜோடியாக வெளியில் வந்தார்.
இந்த ஜோடி கேமராக்களுக்கு புன்னகைத்து, உணவகத்திலிருந்து வெளியேறி தங்கள் காருக்குச் சென்றது. லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தின் இரண்டாம் பாகமான லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படப்பிடிப்பில் நடிகர் விஜய்யும், நடிகை தமன்னாவும் முதன்முதலில் ஜோடியாக நடித்தனர். அதன்பிறகு இருவரும் 2023ஆம் ஆண்டில் இருந்து காதலிக்கத் தொடங்கி, டேட்டிங் செய்யத்தொடங்கினர்.
நடிகை தமன்னாவின் படங்கள்:
நடிகை தமன்னா தமிழில் கடைசியாக, ’அரண்மனை 4’ படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் ஒடேலா 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் வேதா படத்திலும், ஸ்ட்ரீ 2 படத்திலும் நடித்து முடித்துள்ளார். நிகில் அத்வானி இயக்கத்தில் ஜான் ஆபிரகாம், நடிகை ஷர்வாரி நடிப்பில் உருவாகியுள்ள பாலிவுட் படம் தான், வேதா. இப்படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
தொடர்புடையை செய்திகள்