Bayilvan: ‘என் மனைவி நல்லவங்க தான்.. என் மாமியார் தான் கொடுமைக்காரி..’ புலம்பிய ஜெயம் ரவி.. பயில்வான் ரங்கநாதன் பகீர்
Bayilvan: ‘என் மனைவி நல்லவங்க தான்.. என் மாமியார் தான் கொடுமைக்காரி..’ என்று புலம்பிய ஜெயம் ரவி குறித்து பயில்வான் ரங்கநாதன் பல்வேறு தகவல்களைக் கூறியுள்ளார்.

Bayilvan: தன் மனைவி நல்லவங்க என்றும், தன் மாமியார் தான் கொடுமைக்காரி என்றும் ஜெயம் ரவி புலம்பியதாக பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் யூட்யூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியில், ‘’அடுத்தவங்க அந்தரங்கத்தை அறிய நேயர்கள் விரும்புறாங்க. நானும் அறிஞ்சதை சொல்றேன். ஜெயம் ரவி பல விஷயங்களை சொல்ல மறுக்கிறார். இதே மாதிரி சில சம்பவங்கள் நடந்திருக்கும்போல. சொல்ல மறுக்கிறார். என் மகன்களுடைய நல்வாழ்க்கை ரொம்ப முக்கியம். அதனால் மனைவியைப் பற்றி சொல்ல விரும்பவில்லைன்னு ஜெயம் ரவி சொல்றார். இரண்டுபேரும் விவாகரத்துபெற்றுவிட்டுட்டால்கூட, இரண்டுபசங்களுக்கும் அவங்க தானே அம்மா. அதனால் பிள்ளைகளின் மீது யாரும் களங்கம் சொல்லக்கூடாது. அதுவும் அப்பாவே சொல்லக்கூடாதுங்கிற கட்டுப்பாடான உணர்வில் நான் இருக்கேன்னு சொல்றார், ஜெயம் ரவி.
ஜெயம் ரவி - தனுஷ் சண்டை போட்டது உண்மை: பயில்வான்
ஏற்கனவே, ஒரு வருடம் முன்பு, ஜெயம் ரவி தனுஷ் கூட சண்டைப்போட்டு இருக்கார். காரணம் ஆர்த்தி தான். ஆர்த்தி தனுஷோட நெருங்கிப் பேசிட்டு இருந்திருக்காங்கன்னு கிசுகிசு இருக்கு. அதை நாமே பேசியிருக்கோம். அதன்பின்னே, இரண்டுபேரும் சமாதானம் ஆகிட்டாங்க. அதுதான் உண்மை. இதனைத்தொடர்ந்து ஜெயம் ரவிகிட்டே சொல்லாமலேயே ஆர்த்தி பப்-க்கு போறது அதிகமாகிடுச்சு. சாராயம் குடிக்கிறது, அடுத்து தாலிகட்டிய கணவனின் அனுமதி இல்லாமலேயே பாங்காங், தாய்லாந்துபோறது. அனுமதிகூட வேண்டாம், ஒரு மரியாதை நிமித்தமாக எங்கே போகணும்கிறதை சொல்ல வேண்டாமா?. ஆர்த்தி அதை ரவிகிட்ட சொல்லவே இல்லை அப்படிங்கிற தகவல் தான் வந்திருக்கு.
