Dhanush: வாழ்க்கையை புரட்டிப் போட்ட முடிவு... தனுஷ் மனதில் ஏற்பட்ட மாற்றம்... நிறைவேறுமா ஆசை?-actor dhanush and aishwarya pair will join together after divorce - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dhanush: வாழ்க்கையை புரட்டிப் போட்ட முடிவு... தனுஷ் மனதில் ஏற்பட்ட மாற்றம்... நிறைவேறுமா ஆசை?

Dhanush: வாழ்க்கையை புரட்டிப் போட்ட முடிவு... தனுஷ் மனதில் ஏற்பட்ட மாற்றம்... நிறைவேறுமா ஆசை?

Malavica Natarajan HT Tamil
Sep 22, 2024 11:38 AM IST

Dhanush: இந்திய சினிமாவில் கலக்கி வரும் நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என நினைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Dhanush: வாழ்க்கையை புரட்டிப் போட்ட முடிவு... தனுஷ் மனதில் ஏற்பட்ட மாற்றம்... நிறைவேறுமா ஆசை?
Dhanush: வாழ்க்கையை புரட்டிப் போட்ட முடிவு... தனுஷ் மனதில் ஏற்பட்ட மாற்றம்... நிறைவேறுமா ஆசை?

தனுஷ்- ஐஸ்வர்யா திருமணம்

இந்நிலையில், இவர் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.

தனுஷ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்த நிலையில், அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷை வைத்து 3 திரைப்படம் இயக்கினார். பின்னர் வணக்கம் சென்னை, வை ராஜா வை, லால் சலாம் என அடுத்தடுத்த படங்களை இயக்கி வந்தார்.

இதற்கிடையில், கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் தனித்தனி வீடுகளில் வசித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு விவாகரத்தும் பெற்றனர். இருப்பினும் இருவரும் கோ பேரண்டிங் முறையில் குழந்தைகளை வளர்த்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் மீண்டும் சேறுவது குறித்து முடிவெடுக்குமாறும், இவர்கள் பிரச்சனையை முடித்து வைக்கவும் நடிகர் ரஜினிகாந்த் பெரும் முயற்சிகளை எடுத்தார். அதேசமயம் தனுஷ் குடும்பத்தினரும் பல முயற்சிகள் செய்தனர். ஆனால், இருவரும் அதனை பெரிதுபடுத்தவில்லை.

தனுஷ் மனதில் மாற்றம்

இந்நிலையில், திருமண உறவில் மீண்டும் இறங்குவது குறித்து தனுஷ் மனதில் மாற்றம் வந்துள்ளதாக பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளி்த்துள்ளார். அந்தப் பேட்டியில், ஐஸ்வர்யா தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்தபோது அதற்கு தனுஷ் லைக் அளித்தார். பின் ஐஸ்வர்யா மட்டும் தனியாக இருந்த புகைப்படத்தை பகிர்ந்தபோதும் லைக் அளித்துள்ளார். முதல் படத்திற்கு லைக் அளித்தது அவர்களின் மகன்கள் இருக்கும் புகைப்படம் என்பதால் தான் என பலரும் கூறிவருகின்றனர்.

மீண்டும் இணையுமா ஜோடி?

ஆனால், ஐஸ்வர்யா தனியாக எடுத்த புகைப்படத்தை பகிர்ந்தபோதும் அவர் லைக் அளித்துள்லார். இது தனுஷ் மனதில் ஏற்பட்ட மாற்றத்தையே காட்டுகிறது. தனுஷும் ஐஸ்வர்யாவும் திருமண வாழ்க்கையில் மீண்டும் இணைய வேண்டும் என்பதே நடிகர் ரஜினி காந்தின் விருப்பமாக உள்ளது. தற்போது ஐஸ்வர்யாவின் படங்களுக்கு தனுஷ் லைக் இடுவதே ஒரு முக்கிய மாற்றம் தான். தனுஷுக்கு திருமண வாழ்க்கை மீது மீட்டும் விருப்பம் வந்திருக்கலாம். அதேபோல், ஐஸ்வர்யாவிற்கும் அந்த ஆசை வரவேண்டும். அதன் பின்னரே இதுகுறித்து இருரும் முடிவெடுக்க முடியும் எனக் கூறினார். எது எப்படியோ கோலிவுட்டில் பல ஜோடிகள் தற்போது விவாகரத்து பெற்று வரும் நிலையில், இந்த ஜோடி மீண்டும் இணைந்தால் நன்றாக இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர்,

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.