Jayam Ravi: ஆமா... எனக்கு ஜெயம் ரவியோட உறவு இருக்கு... ஆனா... உண்மையை உடைத்த கெனிஷா... தீயாய் பரவும் தகவல்-singer kenisha about jayam ravi relationship - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jayam Ravi: ஆமா... எனக்கு ஜெயம் ரவியோட உறவு இருக்கு... ஆனா... உண்மையை உடைத்த கெனிஷா... தீயாய் பரவும் தகவல்

Jayam Ravi: ஆமா... எனக்கு ஜெயம் ரவியோட உறவு இருக்கு... ஆனா... உண்மையை உடைத்த கெனிஷா... தீயாய் பரவும் தகவல்

Malavica Natarajan HT Tamil
Sep 25, 2024 12:44 PM IST

Jayam Ravi: நடிகர் ஜெயம் ரவிக்கும் தனுக்கும் இடையே இருப்பது நட்பு எனும் உறவு. அவர் எனது சிகிச்சைக்கு வரும் வாடிக்கையாளர். அவ்வளவு தான் என பாடகி கெனிஷா தெரிவித்துள்ளார்.

Jayam Ravi: ஆமா... எனக்கு ஜெயம் ரவியோட உறவு இருக்கு... ஆனா... உண்மையை உடைத்த கெனிஷா... தீயாய் பரவும் தகவல்
Jayam Ravi: ஆமா... எனக்கு ஜெயம் ரவியோட உறவு இருக்கு... ஆனா... உண்மையை உடைத்த கெனிஷா... தீயாய் பரவும் தகவல்

அந்த வதந்திகளில் பெரிதும் பேசப்பட்டவர் பாடகியும், ஹீலிங் தெரபிஸ்ட்டுமான கெனிஷா தான். இவருடன் ஏற்பட்ட பழக்கத்திற்கு பின்னர் தான் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். அதே சமயம், அவர்கள் இருவரும் ஒன்றாக கோவாவில் தங்கி இருந்தது ஆர்த்தி தெரிய வந்துள்ளது என பல்வேறு தகவல்கள் வெளிவந்தது.

இந்த நிலையில், கெனிஷா பிரபல நாளிதழ் ஒன்றிற்கு இந்த சம்பவம் குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், ஜெயம் ரவி உடன் தனக்கு இருக்கும் உறவு என்பது நட்பு ரீதியிலானது மட்டுமே. அதுமட்டுமன்றி, அவர் என்னிடம் சிகிச்சை பெற வந்ததால் அதுவும் தொழில்முறை சார்ந்த நட்பாகவே இருந்தது.

ஆனால், ஜெயம் ரவி அவரது மனைவியை பிரிந்ததற்கு நான் தான் காரணம் என பலதரப்பும் கூறிவருகிறது. அவர், மனைவியை பிரிவதாக நோட்டிஸ் அனுப்பும் வரை அந்த விவகாரம் குறித்து தனக்கும் தெரியாது எனக் கூறியுள்ளார்.

காதல் திருமணம்

ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் ஜெயம் ரவி. பின், ஜெயம் ரவியின் திரைப்படப் பணிகளில் ஆர்த்தி மற்றும் அவரது குடும்பம் நுழைந்தது. ஜெயம்ரவியின் பெரும்பாலான படங்களை ஆர்த்தியின் தாயார் தான் வெளியிட்டு வருகிறார் எனவும் தகவல்கள் உலா வரத் தொடங்கின.

விவாகரத்து

இந்த நிலையில் தான், ஜெயம் ரவிக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் இருவரும் சில நாட்கள் தனித்தனியே வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் கசிந்த நிலையில், ஜெயம்ரவி மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அனைவரின் நலன் கருதியே இந்த முடிவை எடுத்ததாகவும் கூறியிருந்தார்.

அன்ஃபாலோ செய்த ஜெயம் ரவி

இந்த நிலையில், ஜெயம்ரவி தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் தி நியூ மீ எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இதனை பலரும் விமர்சித்து வந்த நிலையில், ஜெயம் ரவியின் இன்ஸ்டாகிராமை இத்தனை நாள் மனைவி ஆர்த்தி தான் நிர்வகித்து வந்தார் எனவும், இதனால் தான் விவாகரத்து அறிவிப்புக்கு பின்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியின் புகைப்படங்கள் தொடர்ந்து இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இன்ஸ்டாகிராம் நிர்வாகத்திடம் பேசி, தற்போது ஜெயம்ரவி அவரது கணக்கை மீட்டெடுத்துள்ளாராம். இதைத் தொடர்ந்து தான் மனைவி ஆர்த்தியை அன்ஃபாலோ செய்துள்ளார். அதுமட்டுமின்றி ஆர்த்தி, மகன்களுடன் உள்ள புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். மேலும், தனது மகன்களின் கஸ்டடிக்காக நீதிமன்றத்தில் குரல் கொடுப்பேன் எனவும், மூத்த மகனை வைத்து படம் எடுக்கும் ஆசை உள்ளதாகவும் ஜெயம் ரவி கூறியுள்ளார்

கெனிஷா விளக்கம்

ஜெயம் ரவி உடன் தனக்கு இருக்கும் உறவு என்பது நட்பு ரீதியிலானது மட்டுமே. அதுமட்டுமன்றி, அவர் என்னிடம் சிகிச்சை பெற வந்ததால் அதுவும் தொழில்முறை சார்ந்த நட்பாகவே இருந்தது.

ஆனால், ஜெயம் ரவி அவரது மனைவியை பிரிந்ததற்கு நான் தான் காரணம் என பலதரப்பும் கூறிவருகிறது. அவர், மனைவியை பிரிவதாக நோட்டிஸ் அனுப்பும் வரை அந்த விவகாரம் குறித்து தனக்கும் தெரியாது எனக் கூறியுள்ளார்.

அதுமட்டுமன்றி, இது உங்க வீட்டில் நடக்கும் பிரச்சனை இல்லை. வேறு ஒரு நபரின் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனை. அதிலிருந்து நாம் அனைவரும் விலகி இருப்பது தான் நல்லது. அதே சமயம் என்னை இந்த விவகாரத்தில் இழுக்காமல் இருப்பதும் நல்லது. எனக்கு பல வேலைகள் இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கும் அளவிற்கு நேரமும் இல்லை எனக் கூறி தன் மீதான புகாருக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.