100 வருடங்கள் பின்னோக்கி செல்லும் பயணம்..கங்குவா படம் வித்தியாசமான உலகத்துக்கு அழைத்து செல்லும் - சூர்யா பேச்சு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  100 வருடங்கள் பின்னோக்கி செல்லும் பயணம்..கங்குவா படம் வித்தியாசமான உலகத்துக்கு அழைத்து செல்லும் - சூர்யா பேச்சு

100 வருடங்கள் பின்னோக்கி செல்லும் பயணம்..கங்குவா படம் வித்தியாசமான உலகத்துக்கு அழைத்து செல்லும் - சூர்யா பேச்சு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Oct 24, 2024 08:46 AM IST

லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ், அபோகாலிப்டோ போன்ற படமாக கங்குவா படம் இருக்கும் என சூர்யா தெரிவித்துள்ளார். 100 வருடங்கள் பின்னோக்கி செல்லும் பயணமாக இந்த படம் ரசிகர்களை வித்தியாசமான உலகத்துக்கு அழைத்து செல்லும் விதமாக உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கங்குவா படம் வித்தியாசமான உலகத்துக்கு அழைத்து செல்லும் என் சூர்யா பேச்சு
கங்குவா படம் வித்தியாசமான உலகத்துக்கு அழைத்து செல்லும் என் சூர்யா பேச்சு

லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் போன்ற படம்

கங்குவா படத்துக்காக இயக்குநர் சிவாவை வெகுவாக பாராட்டிய சூர்யா, இந்த படம் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை தரும் என்றார்.

இதுதொடர்பாக நடிகர் சூர்யா பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,

"ஹாலிவுட் படங்களான 'பிரேவ்ஹார்ட்', 'லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்', 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்', 'அபோகாலிப்டோ' போன்ற படங்களை நாம் அனைவரும் ரசித்தோம். இந்த படங்களின் கதை, மேக்கிங்கில் மயங்கி பலமுறை பார்த்திருக்கிறோம். இப்படிப்பட்ட படங்களை எப்போது செய்யப் போகிறோம் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாக கங்குவா படத்தை உருவாக்கியுள்ளோம்.

சில 100 வருடங்கள் பின்னோக்கிச் சென்று அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து சிக்கலான சூழ்நிலையை மக்கள் அனுபவித்தால் என்ன நடக்கும் என்ற இயக்குநர் சிவாவின் யோசனையில் இந்த படம் உருவானது" என்றார்.

சிவா க்ரீன் மேட் ஷாட்களில் அசத்தும் இயக்குநராக சிவா இருக்கிறார். விஷுவலாக அவர் கதை சொல்வதில் மிகவும் திறமையானவராக இருக்கிறார். திரையரங்கில் ரசிகர்கள் வெளிப்படுத்தும் தருணங்களை வெகுவாக விரும்புகிறார். எனவே அனைத்தையும் ஒன்றாக இணைத்து 'கங்குவா' படத்தை உருவாக்கியுள்ளார்" என்று கூறினார்.

சுவாரஸ்யமான திரைக்கதை மிகவும் முக்கியம்

இந்த படத்தில் வில்லனாக உதிரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பாலிவுட் நடிகர் பாபி தியோல். கடந்த ஆண்டில் வெளியான அனிமல் படத்தில் வில்லனாக தோன்றி மிரட்டிய இவர், தற்போது தமிழில் அறிமுகமாகிறார்.

படம் குறித்து பாபி தியோல் கூறும்போது, "வில்லன் வேடத்தில் நடிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கலாம் . ஆனால் அவற்றை ஏற்று நடிக்க படத்தின் கதை மற்றும் திரைக்கதை சுவாரஸ்யமாக இருப்பது மிகவும் முக்கியம். கதை சுவாரஸ்யமாக இல்லாவிட்டால், படத்தின் வில்லனாகவோ அல்லது முக்கிய ஹீரோவாகவோ நீங்கள் சிறப்பாக நடித்தாலும் ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள். ஒரு நடிகனாக நீங்கள் திருப்தி அடையலாமே தவிர வேறு எதையும் பெற முடியாது."

வித்தியாசமான உலகத்துக்கு அழைத்துச் செல்லும்

"நான் சூர்யாவின் தீவிர ரசிகன். சிவாவை எனக்கு அவ்வளவாக தெரியாது, நான் அவரைச் சந்தித்தபோது, ​​'சார் நீங்கள் செட்டுக்கு வரும்போது, ​ உண்மையிலேயே மகிழ்ச்சியாக உணர்வீர்கள்' என்று என்னிடம் தெரிவித்தார்.

எந்தவொரு செட்டிலும் நான் இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததில்லை. சிவா ஒரு டெடி பொம்மை போல இருக்கிறார். அவர் மிகவும் இனிமையானவர். நீங்கள் நிறைய வரலாற்றுப் படங்களை பார்த்துள்ளீர்கள். ஆனால் இது உங்களை ஒரு வித்தியாசமான உலகத்துக்கு அழைத்துச் செல்லும்.

உங்களுக்கு ஒரு மொழி தெரியாதபோது அதில் பேசி நடிப்பது மிகவும் கடினம். நீங்கள் என்ன செய்ய முயற்சிக்கிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட நடிகரின் இயக்குநராக சிவா இருக்கிறார். நாங்கள் படப்பிடிப்பில் இருந்தபோது அவர் அருகில் இருப்பது ஆச்சரியமாக இருந்தது. நான் நடித்த ஒவ்வொரு காட்சியிலும் அவர் என்னை வழிநடத்தினார்" என்றார்.

கங்குவா ரிலீஸ்

மிக பெரிய பொருள் செலவில் ஆக்‌ஷன் த்ரில்லர் பேண்டஸி படமாக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் கங்குவா படத்தில் சூர்யா டைட்டில் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாலிவுட் இளம் நடிகையான திஷா பதானி இந்த படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கங்குவா படம் நவம்பர் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 38 மொழிகளில் வெளியாகிறது. படம் வட இந்தியாவில் மட்டும் 3500 ஸ்கிரீன்களில் வெளியாக இருக்கிறது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.