“ஜோதிகா சரியான விஷபாட்டில்.. எப்போதும் பணம் பணம்.. கூப்பிட்டு வச்சு அவமானப்படுத்தினார்” - சுசித்ரா ஓப்பன் டாக்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  “ஜோதிகா சரியான விஷபாட்டில்.. எப்போதும் பணம் பணம்.. கூப்பிட்டு வச்சு அவமானப்படுத்தினார்” - சுசித்ரா ஓப்பன் டாக்!

“ஜோதிகா சரியான விஷபாட்டில்.. எப்போதும் பணம் பணம்.. கூப்பிட்டு வச்சு அவமானப்படுத்தினார்” - சுசித்ரா ஓப்பன் டாக்!

Kalyani Pandiyan S HT Tamil
Nov 20, 2024 04:20 PM IST

ஜோதிகா மிகவும் திமிர் பிடித்தவர் என்றும் அவர் சூர்யாவுடன் இருந்து விஷபாட்டில் போல செயல்படுவதாக பேசினார்.

“ஜோதிகா சரியான விஷபாட்டில்.. எப்போதும் பணம் பணம்.. கூப்பிட்டு வச்சு அவமானப்படுத்தினார்” - சுசித்ரா ஓப்பன் டாக்!
“ஜோதிகா சரியான விஷபாட்டில்.. எப்போதும் பணம் பணம்.. கூப்பிட்டு வச்சு அவமானப்படுத்தினார்” - சுசித்ரா ஓப்பன் டாக்!

இது குறித்து அவர்கள் பேசும் போது, “ரசிகர்கள் சூர்யா உயரமாக வேண்டும் என்று விரும்பவில்லை. ஜோதிகா சொல்வது போல, உயரமாக காட்டும் ஷூவை பயன்படுத்தி, அவர் தன்னை அப்படிக்காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

சூர்யாவை மாற்றிவிட்டார்

ஜோதிகா, சூர்யாவை அழகுப்படுத்துகிறேன் என்று சொல்லி, அவரது முடியை நேராக நிமிர்த்தி, ஐப்ரோவை ட்ரிம் செய்து, ஃபேசியல் செய்து, மேக்கப் செய்து அவரது முகத்தையே மாற்றி விட்டார். அது பாம்பேவின் பழக்கமா என்று தெரியவில்லை. உண்மையில் ஜோதிகா, பிக் பாஸில் சொல்வது போல, சரியான விஷபாட்டில். அவ்வாறுதான் அவர் சூர்யாவிடம் செயல்பட்டு இருக்கிறார்.

 

ஜோதிகாவிற்கு திமிர் மிகவும் அதிகம். நான் பத்திரிகையாளராக இருக்கும் பொழுது, சிம்ரனையும் ஜோதிகாவையும் நேர்காணல் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிம்ரன் மிக மிக நல்லவர்;ஆனால் ஜோதிகா மிகவும் திமிர் பிடித்தவர். அவருக்கு தான் ஒரு அழகு தேவதை என்ற நினைப்பு. 

ஜோதிகாவுக்கு வன்மம்

ஜோதிகாவுக்கு வன்மம் மிக மிக அதிகம். அவருக்கு ஹீரோயின்ஸ் மத்தியில் நண்பர்கள் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர்கள். ஜோதிகாவிற்கு ஆரம்ப காலத்திலிருந்தே நண்பர்கள் இருந்தது கிடையாது. ஜோதிகாவிற்கு எப்போதுமே பணம் தான் முக்கியம். அவர் எல்லா விஷயங்களையும் மிகவும் கால்குலேட்டிவ் ஆக செய்வார்.

அவமானப்படுத்துவார்.

ஜோதிகா உங்களை வீட்டிற்கு கூப்பிட்டு வைத்து அவமானப்படுத்துவார். அது எப்படி நடக்கும் என்றால், இரண்டு பேரும் சேர்ந்து ஒன்றாக ஒர்க்கவுட் செய்யலாம் என்று வீட்டுக்கு கூப்பிட்டு, பாடி ஷேமிங் செய்வார். தேவையில்லாத ஜோக்குகளை அடித்து மனதை கஷ்டப்படுத்துவார்.

ஒரு முறை என்னையும் இன்னும் பல பெண்களையும் யோகா செய்யலாம் என்று வீட்டிற்கு கூப்பிட்டு, மட்டம் தட்டி அனுப்பினார். அதன் பின்னர் நான் அவரது வீட்டுக்கு செல்வதையே நான் நிறுத்தி விட்டேன். அயன் படத்தின் போது, தமன்னா சூர்யாவின் குழந்தைகளுக்காக சில ஆடைகளை வாங்கி அனுப்பினார். போனில் அதை சோ ஸ்வீட்  வாங்கி அனுப்புங்கள் என்று பாசமாக பேசிய ஜோதிகா, அதன் பின்னர் ஆடைகள் வந்ததும், அதை தீ வைத்து கொளுத்தினார். அந்த அளவுக்கு ஜோதிகா மோசமானவர். உண்மையில் ஜோதிகா ஒரு நிஜ சந்திரமுகி” என்று பேசினார். 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.