ஓடிடிக்கு வைக்கப்பட்ட செக்.. தலையில் குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்.. சம்பம் செய்ய காத்திருக்கும் ஓடிடி
ஓடிடி தளத்தில் வெளியாகும் அனைத்து படைப்புகளுக்கும் தணிக்கை செய்து ஒழுங்குபடுத்த தனி குழு அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கலாச்சார சீர்கேடு, போதைப் பொருள் பழக்கம், குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்து வருவதால், ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படம் மற்றும் வெப் தொடர்களுக்கும் தணிக்கை அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஷாஷாங் மற்ரும் அபூர்வா அர்ஹதியா ஆகியோர் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.
நீதிமன்றம் அதிரடி
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் இன்று விசாரித்தனர். அப்போது பேசிய அவர்கள், “ஓடிடிக்கு தணிக்கை செய்து ஒழுங்கு படுத்த தனி குழு அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடமுடியாது. இதுதொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு பார்த்துக்கொள்ளும் எனக் கூறினர்.
மனு தள்ளுபடி
ஓடிடி விவகாரம் குறித்து பொதுநல மனு தாக்கல் செய்தது அவசியமற்ற ஒன்று. மனுதாரர்கள் தணிக்கை மற்றும் ஒழுங்குபடுத்தல் தேவையா இல்லையா என்பது குறித்து சம்பந்தபட்ட துறையில் முறையிட்டிருந்தாலே போதுமானதாக இருந்திருக்கும் என கூறினர். அத்துடன் நில்லாமல் கலாச்சார சீர்கேடு, போதைப் பொருள் பழக்கம், குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்து வருவதால், ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படம் மற்றும் வெப் தொடர்களுக்கும் தணிக்கை அளிக்க வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்தனர்.
திரைப்படத்தில் சென்சார்
திரைத்துறையில் வெளியாகும் படங்கள் அனைத்தும் திரைப்படத் தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, படத்திற்கான தணிக்கை சான்றிதழை பெற்ற பின்னர் தான் திரையரங்கிற்கே வரும். இந்த அமைப்பு, படத்தில் வரும் வசனம், காட்சி அமைப்பு, பாலியல் ரீதியான தவறான சித்தரிப்புகள், மத உணர்வுகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு படத்தில் செய்ய வேண்டிய மாற்றங்களை அறிவிக்கும்.
பின் இந்தப் படம் எந்த வயதினருக்கு ஏற்றது. இது குடும்பத்தினரோடு சென்று பார்க்கும் படமா, அல்லது 18 வயதிற்கு மேற்பட்டோர் மட்டும் பார்க்கும் படமா என வரிசைப்படுத்தி சான்றிதழை அளிக்கும்.
ஓடிடி ஆர்வம்
இந்த சான்றிதழை வைத்தே படம் திரையாகும் இடங்கள் கூட முடிவு செய்யப்படுகின்றன. அதுமட்டுமின்றி, தணிக்கை சான்றிதழ் பெற காலதாமதமானதால் ரிலீஸ் தள்ளிப்போன படங்களும் ஏராளம்.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தற்போது பலரும் படைப்பு சுதந்திரம் வேண்டும் எனக் கருதி, தங்களது திரைப்படங்களை அல்லது படைப்புகளை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடுகின்றனர். ஓடிடி தளங்களுக்கு சென்சார் சான்றிதழ் கிடையாது என்பதால் பெரும்பாலானோர் ஓடிடியில் படங்களை வெளியிட ஆர்வம் காட்டுகின்றனர். அதே சமயம் தியேட்டரில் வெளியாகும் போது சென்சார் செய்யப்பட்ட காட்சிகளை ஓடிடி தளத்தில் நீட்டித்தும் படங்களை வெளியிட்டு வந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு, வழக்கறிஞர்கள் இருவரும் மனு தாக்கல் செய்த நிலையில், நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்