Pathaan Censor: பதான் சென்சார் ரிப்போர்ட் லீக்…பேஷரம் ரங் பாடலில் என்ன மாற்றம்?
பதான் படத்தில் இருந்து பேஷரம் ரங் பாடலில் இருந்து மூன்று காட்சிள் நீக்கம் செய்ய சென்சார் போர்டு உத்தரவிட்டுள்ளது.

பதான் சென்சார் ரிப்போர்ட்
இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், பதான். ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடித்துள்ள இப்படம், குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.
பதான் படத்தின் முதல் பாடலான 'பேஷரம் ரங்' பாடல் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், பல சர்ச்சைகளில் சிக்கி தவித்து வருகிறது. அதில் தீபிகா படுகோன் காவி நிற உடையை மிகவும் கவர்ச்சியான முறையில் அணிந்துள்ளது கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது.
வலதுசாரி அமைப்புகள், அரசியல்வாதிகள், இந்துத்துவ கும்பல் என பலரும் பெரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.