Cyber Censorship : இணைய தணிக்கைக்கு எதிரான உலக தினம் இன்று! இன்டர்நெட்டில் என்ன செய்யலாம் மற்றும் செய்யக்கூடாது?
World Day Against Cyber Censorships : எல்லோரையும் அடக்கியதாக இணையதளங்கள் இருக்க வேண்டும். இந்நாளில் இணையத்தில் நாம் என்ன செய்யலாம் மற்றும் செய்யக்கூடாது என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.
இணைய தணிக்கைக்கு எதிரான உலக தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 12ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. தன்னார்வ நிரூபர்கள் எல்லையற்றவர்களால் இது நிறுவப்பட்டது. கட்டுப்பாடுகள் இல்லாமல் இணையதளத்தில், அனைவரையும் ஒன்றிணைக்கவேண்டும். இணையதளம் அனைவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்வதும் இதன் நோக்கம்.
ஒவ்வொருவருக்கும் இணையதளம் சுதந்திரம் அவசியம். அவர்கள் இணையதளத்தில் என்ன செய்யலாம் மற்றும் செய்யக்கூடாது என்பதை அறிந்திருக்க வேண்டும். ஒவ்வொருவரின் இணைய சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும். எல்லோரையும் அடக்கியதாக இணையதளங்கள் இருக்க வேண்டும். இந்நாளில் இணையத்தில் நாம் என்ன செய்யலாம் மற்றும் செய்யக்கூடாது என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.
இணையதளத்தை பொறுப்புடன் பயன்படுத்துங்கள்
நீங்கள் இணையதளத்தை பயன்படுத்தும்போது பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். மற்றவர்களின் தனிப்பட்ட அந்தரங்கத்தை மதித்து நடப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். மற்றவர்களின் ஆன்லைன் கணக்குகளை பயன்படுத்தாதீர்கள். மற்றவர்களின் இமெயில்களை படிக்காதீர்கள்.
உங்களுக்கு விருப்பமானவர்களுடன் தொடர்பில் இருங்கள்
உங்களுக்கு விருப்பமானவர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு இணையதளம் அதிவேகமான வழி. எனவே உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு அதை நன்முறையில் பயன்படுத்துங்கள். வாட்ஸ்அப்பில் ஒரு எளிய டெக்ஸ்ட் முதல் வீடியோ கால் வரை, நிறைய வழிகளில் நீங்கள் தொடர்புகொள்ள முடியும்.
எனவே உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் நீங்கள் தொடர்ந்து தொடர்பில் இருப்பதற்கு பல வழிகள் உள்ளன. அவர்கள் எத்தனை தொலைவில் இருந்தாலும் உங்களால் அருகில் உணர முடியும்.
இணையதளத்தில் தாக்கப்பட்டால் பெரியவர்களிடம் கூறுங்கள்
நீங்கள் 18 வயது நிரம்பாதவராக இருந்து, இணையதளத்தில் தாக்குதலுக்கு ஆளானால், அதை கட்டாயம் பெரியவர்களிடம் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். நீங்களாகவே இந்த சூழலை கையாளலாம் என்று நினைக்காதீர்கள் அல்லது இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடாதீர்கள்.
நீங்கள் எதையாவது டவுண்லோடு செய்யும்போது கவனமாக இருங்கள்
நீங்கள் இணையதளத்தில் இருந்து எதையாவது டவுண்லோடு செய்தால், கட்டாயம் கவனமாக இருங்கள். ஏனெனில் நீங்கள் தவறாக எதையாவது டவுண்லோடு செய்தால், அது கட்டாயம் உங்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தும், டவுண்லோடு செய்யும்போது வைரஸ்கள் இல்லாததை செய்யுங்கள். முதலில் புரோகிரமை ஸ்கேன் செய்த பின்னரே டவுண்லோடு செய்யுங்கள்.
ஆன்டி வைரஸ் மென் பொருட்களை பயன்படுத்துங்கள்
உங்கள் லேப்டாப் அல்லது கம்பூட்டரில் நல்ல ஒரு ஆன்டி-வைரஸ் சாஃப்ட் வேரை பயன்படுத்துங்கள். இதை நீங்கள் எப்போதும் புதுப்பிப்பதையும் வழக்கமாகக் கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் கூடுதல் பாதுகாப்பாக இருக்கலாம்.
இணையதளத்தின் மூலம் பணி பரிவர்த்தனைகள் செய்தால் அதுகுறித்து தொடர்ந்து பரிசோதியுங்கள்
ஆன்லைனில் நீங்கள் செய்யும் அனைத்து பணி பரிவர்த்தனைக்கும் ஒரு முறையான ரெக்கார்ட்டை செய்து வைத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் வங்கிக்கணக்குகளை யாரும் பயன்படுத்திவிடக்கூடாது என்பதை உறுதிசெய்வதற்காக இருக்கட்டும். உங்கள் வங்கி கணக்குகளை அடிக்கடி பரிசோதித்துக்கொள்ளுங்கள். எந்த இணையதளத்தில் நீங்கள் வழக்கமாக பொருட்களை வாங்குகிறீர்கள் என்பதிலும் கவனமாக இருங்கள்.
இணையதளத்தை பயன்படுத்தும்போது செய்யக்கூடாதவை
உங்கள் தனிப்பட்ட விவரங்களை கொடுக்கக்கூடாது
உங்கள் இணையதள நண்பர்களுடன் நீங்கள் எத்தனை நெருக்கமாக பழகினாலும், உங்கள் இணைய நண்பர்களிடம் உங்கள் தனிப்பட்ட விவரங்களை கொடுக்கக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இணையதளத்தில் வரும் பல்வேறு அபாயங்கள் குறித்து அறிந்து வைத்திருங்கள்
வங்கிக்கணக்கு திருட்டு உள்ளிட்ட இணையதளத்தில் நடக்கும் பல்வேறு திருட்டுகள் குறித்து கவனம் செலுத்துங்கள். இதுகுறித்து அதிகம் தெரிந்துகொள்வதன் மூலம் நீங்கள் அவற்றில் சிக்கிக்கொள்ளாமல் தப்பிக்க முடியும்.
குழந்தைகளை நீங்கள் கவனிக்காமல் இணையதளம் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்
உங்களுக்கு சிறிய குழந்தைகள் இருந்தால், அவர்கள் இணையதளத்தை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். நீங்கள் பார்க்கும்போதுதான் அவர்கள் இணையம் பக்கம் செல்ல வேண்டும். அவர்களுக்கு பிரைவசி முக்கியம்தான். ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது குறித்து அவர்கள் கவனத்துடன் செயல்படவேண்டும்.
இணையதளத்தில் பார்க்கும் அனைத்தையும் நம்பாதீர்கள்
இந்த காலத்தில் தவறான தகவல்கள் அதிகளவில் பரப்பப்படுகிறது. எனவே நீங்கள் இணையதளத்தில் பார்க்கும் அனைத்து தகவல்களும் உண்மையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எப்போது அது எங்கிருந்து பகிரப்படுகிறது என்பதை பாருங்கள், கண்ணை மூடிக்கொண்டு அனைத்து விஷயங்களையும் நம்பாதீர்கள்.
இணையத்தில் என்ன பதிகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்
நீங்கள் சமூக வலைதளங்களில் எதையாவது பதிந்தால், அதை அனைவரும் பார்ப்பார்கள் என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள். அது பலகாலம் இருக்கக்கூடியது என்பதையும் நினைவில் கொள்ளங்கள். எனவே பதிந்துவிட்டோம் என்று பிற்காலத்தில் வருந்துவதற்கு பதில், என்ன பதிகிறோம் என்பதில் கவனமாக இருங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்