Kayal Serial: கயலின் கல்யாணத்தை நிறுத்த துடிக்கும் கவுதம்.. எச்சரிக்கும் எழில்.. கயல் சீரியலில் நடக்கப்போவது என்ன?-sun tv kayal serial today promo on august 17th and 2024 reveals ezhil warning to gautham - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Serial: கயலின் கல்யாணத்தை நிறுத்த துடிக்கும் கவுதம்.. எச்சரிக்கும் எழில்.. கயல் சீரியலில் நடக்கப்போவது என்ன?

Kayal Serial: கயலின் கல்யாணத்தை நிறுத்த துடிக்கும் கவுதம்.. எச்சரிக்கும் எழில்.. கயல் சீரியலில் நடக்கப்போவது என்ன?

Marimuthu M HT Tamil
Aug 17, 2024 10:46 AM IST

Kayal Serial: கயலின் கல்யாணத்தை நிறுத்த துடிக்கும் கவுதம் மற்றும் எச்சரிக்கும் எழில் மற்றும் கயல் சீரியலில் நடக்கப்போவது என்ன என்பது குறித்துப் பார்ப்போம்.

Kayal Serial: கயலின் கல்யாணத்தை நிறுத்த துடிக்கும் கவுதம்.. எச்சரிக்கும் எழில்.. கயல் சீரியலில் நடக்கப்போவது என்ன?
Kayal Serial: கயலின் கல்யாணத்தை நிறுத்த துடிக்கும் கவுதம்.. எச்சரிக்கும் எழில்.. கயல் சீரியலில் நடக்கப்போவது என்ன?

வெளியாகியுள்ள இன்றைய புரோமோ:

அந்த புரோமோவில், கயல் தன் தாயிடம், பெரியப்பா மற்றும் பெரியம்மாவின் மனதை மாற்றி தன் திருமணத்திற்கு அழைத்து வர தனக்குத் தானே சவால் செய்துள்ளதாகக் கூறுகிறார். அதைக்கேட்டு கயலின் அம்மா கண்கலங்குகிறார்.

அதன்பின், கயல் தான் பணிசெய்யும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் தனது திருமண அழைப்பிதழை வழங்கும் காட்சி காட்டப்படுகிறது.

அடுத்து மருத்துவர் கவுதமை பார்க்கும் கயலின் வருங்கால கணவர் எழில், கவுதமைப் பார்த்து பேசுகிறார். அதில், ’உனக்கு எங்களோட கல்யாணத்தை நிறுத்தணும் என்கிற எண்ணம் இருந்துச்சுன்னா, அதை குழி தோண்டி புதைச்சிடு. இல்லைன்னா!’ என்று மிரட்டுகிறார்.

அதன்பின், கயலுடன் பணிசெய்யும் ஒரு செவிலித்தாயிடம் பேசும் எழில், கவுதம் மீது கயலுக்கு அப்படி என்ன கோபம் என்று கேட்கிறார். அப்போது பதில் சொல்லும் அந்த செவிலித்தாய், ‘கவுதமின் ஆசைக்கு கயல் வளைந்து கொடுத்து போகவில்லை’ என்கிறார்.உடனே எழிலுக்கு கண்கள் சிவக்கிறது.

மற்றொரு ஸ்பெஷல் புரோமோவில், ‘’ என் அம்மா என்னை தனிமரமாக நின்னு எங்களை வளர்த்திருக்காங்க. அவங்களோட சின்ன ஆசை சொந்த பந்தங்கள் சூழ நடக்கணும் என்பது தான். என் அம்மாவோட ஆசைக்கு முன்னாடி, என் தன்மானம் ரொம்பப் பெரிசு இல்லை. எவ்வளவோ அவமானங்கள் ஏற்பட்டாலும் என் அம்மா ஆசைப்படி, சொந்தபந்தங்களோட ஆசீர்வாதப்படி தான்,எங்க கல்யாணம் நடக்கும்’ என மனதிற்குள் நினைத்துக்கொண்டு, தனது அத்தை மற்றும் பெரியப்பாவைப் போய் சந்தித்து, கல்யாணப் பத்திரிகையைக் கொடுக்கிறார். அப்போது அவரது பெரியப்பா, ‘’நானும் வடிவும் உன் கல்யாணத்துக்கு வரவே மாட்டோம்’’ என்கிறார். அப்போது பதிலுரைக்கும் கயல், ‘’நீங்களும் பெரியம்மாவும் எங்கள் கல்யாணத்துக்கு வருவீங்க. நான் வரவைப்பேன்’’ என்கிறார். மேலும் தன் குடும்ப கவுரவம் எந்த வகையிலும் குறையாமல் பார்த்துக்கொள்வது தான், தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் சவால் என மனதிற்குள் பேசிக்கொள்கிறார், கயல்.

முந்தைய எபிசோடில் நடந்தது என்ன?:

கயல் எழிலுடன் செய்ய இருக்கும் தன் காதல் திருமணத்துக்கு, தங்கள் குடும்பத்தை எதிரியாகப் பார்க்கும் அத்தை ராஜலட்சுமி மற்றும் பெரியப்பா தர்மலிங்கம் குடும்பத்தினரை அழைக்க முயற்சிக்கிறார். இதுதான், கயலுடைய அம்மாவின் ஆசை. ஆனால், கல்யாணப் பத்திரிகை வைக்கச் செல்லும் இடத்தில் எல்லாம் கயலுக்குப் புறக்கணிப்பே கிடைக்கிறது.

கயல் தரப்பு அத்தை ராஜேஸ்வரி கடைக்கு பத்திரிகை வைக்கச் செல்கிறது. அங்கு சென்ற அவர்கள், அங்கிருக்கும் மேனேஜரிடம் ராஜலட்சுமி அத்தையை பார்த்து பத்திரிக்கை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இதனையடுத்து அவர் ராஜலட்சுமியிடம் இந்த விஷயத்தை கொண்டு செல்கிறார்.

கயல் தன்னிடத்திற்கு வந்திருப்பதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் ராஜலட்சுமி, அவர்களை வேண்டுமென்றே காக்க விட திட்டமிடுகிறார். அதன்படி, தன்னுடைய உதவியாளரிடம் மேடம் ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருப்பதாகவும், அவரை பார்ப்பதற்கு தாமதமாகும் என்கிறார். கயலோ, எவ்வளவு நேரமானாலும் இருந்து பார்த்துவிட்டு, கல்யாண அழைப்பிதழை கொடுத்துவிட்டுச் செல்ல நினைக்கிறார்.

இதற்கிடையே அவர்களை வேண்டுமென்றே அவமானப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் ராஜலட்சுமி, மொய் பணமாக ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு கவருக்குள் வைத்து கொடுத்து அனுப்புகிறாள். அதை வாங்காமல் பொறுமையாக வெயிட் செய்கிறார், கயல்.

இதையடுத்து வெளியே வரும் ராஜலட்சுமி தாம்பூலத்தை கயலிடம் இருந்து வாங்குவார் என்று பார்த்தால், அவர் அவர்களை கண்டு கொள்ளாமல் கம்பெனி தொடர்பான வேலைகளை சாவகாசமாக கையாண்டு கொண்டிருந்தார். இது கயல் தரப்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.