Kayal Serial: மீண்டும், மீண்டும் அவமானப்படும் கயல்.. இந்த முறை யார் என்று பாருங்கள் - கயல் ப்ரோமோ!
Kayal Serial: காரில் தனம், மூர்த்தி, எழில், கயல் சென்று கொண்டு இருக்கிறார்கள். அப்போது கயல், “ அம்மா ஆசைப்பட்டு என்னிடம் கேட்ட ஒன்றே ஒன்று, என் திருமணத்திற்கு அனைவரும் வர வேண்டும், என்று தான் . எனக்கு அது தான் முக்கியம். அதை நான் செய்வேன்” என்றார்.
Kayal Serial: சன் தொலைக்காட்சியில் தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலின் இன்றைய ( ஆகஸ்ட் 15 ) எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இன்றைய எபிசோட்
காரில் தனம், மூர்த்தி, எழில், கயல் சென்று கொண்டு இருக்கிறார்கள். அப்போது கயல், “ அம்மா ஆசைப்பட்டு என்னிடம் கேட்ட ஒன்றே ஒன்று, என் திருமணத்திற்கு அனைவரும் வர வேண்டும், என்று தான் . எனக்கு அது தான் முக்கியம். அதை நான் செய்வேன்” என்றார்.
அதற்கு கயல், “ ஆனால் அதற்கு நீ அனைவரிடமும் அவமானம் அடைவது எனக்கு வேதனையாக இருக்கிறது “ என சொல்கிறார்.
அரைமணி நேரம்
இரண்டாவதாக பத்திரிக்கை வைக்க அத்தையை தேடி கயல் குடும்பம் அவரின் கடைக்கு செல்கிறார்கள். அதை தெரிந்து கொண்ட அவர், தன்னிடம் இருக்கும் வேலை ஆட்களை வைத்து, பிஸியாக இருப்பதாகவும் இப்போதைக்கு வர முடியாது, மீட்டிங் முடியவே, அரைமணி நேரம் மேல் ஆகிவிடும். அதனால் காத்திருந்தாலும் ஓகே, கிளம்பினாலும் ஓகே ” என சொல்கிறார். என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் முழித்து கொண்டு இருக்கிறார்கள்.
அத்துடன் இன்றைய ( ஆகஸ்ட் 15 ) எபிசோட்டிற்கான ப்ரோமோ முடிந்தது.
நேற்றைய எபிசோட்
அதில், அன்பு “ பெரியப்பா, பெரியம்மாவிற்கு தானே முதல் பத்திரிக்கை வைக்க போறீங்க என கேட்க, மூர்த்தி, அவங்க கண்டிப்பாக அவமானப்படுத்த போகிறார்கள். அதை நினைக்கும் போது தான் சற்று பயமாக இருக்கிறது “ என்றார்.
உடனே கயல், ” அதில் எனக்கு ஒரு பிரச்னையுமே இல்லை. அம்மாவின் ஆசை தான் என் கண்களுக்கு இப்போது முக்கியமாக தெரிகிறது “ என சொல்லிவிட்டார்.
மறுபக்கம் மூர்த்தி, தனம், கயல், எழில் உள்ளிட்டோர் பத்திரிக்கை எடுத்து கொண்டு பெரியப்பா, பெரியம்மாவை பார்க்க அவர்கள் வீட்டிற்கு சென்றனர்.
கடும் கோபத்தில் எழில்
மூர்த்தி, ” இரண்டு பேரும் சேர்ந்து நின்று பத்திரிக்கை வாங்கி கொள்ளுங்கள் என சொல்ல அதற்கு பெரியப்பா, கயலினால் நான் பட்ட அவமானங்கள் போதும்.. கிளம்பு ” என சொல்கிறார். இப்படி பேசி கொண்டே இருக்கும் போது பெரியம்மா வடிவு தட்டை வாங்கி தூக்கி எரிந்து விடுகிறார்.
இதனால் கடும் கோபத்திற்கு செல்கிறார் எழில். ஆனாலும் கயல் விடாமல் தன் திருமணத்திற்கு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து கொண்டே இருந்தார். ஆனால் பெரியப்பா, பெரியம்மா இது தான் சரியான நேரம் கயல் இன்னும் கீழ் இறங்கி வர வேண்டும் என்று நினைத்து பழி வாங்கிறார்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்