Kayal Serial: எழில் திருமண ஆசை நிறைவேறுமா.. பக்கவாக பிளான் போடும் தாய் - கயல் ப்ரோமோ
Kayal Serial: மறுபக்கம் எழிலின் தாய், தீபிகாவிடம், “ எழில் இப்போது கயல் என்ற சைக்கிள் மீது ஆசைப்படுகிறான். ஆனால், நான் தீபிகா என்ற விலை உயர்ந்த காரை வாங்கி கொடுக்க போகிறேன் “ என சொல்கிறார்.
Kayal Serial: சன் தொலைக்காட்சியில் தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலின் இன்றைய ( ஆகஸ்ட் 13 ) எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இன்றைய ப்ரோமோ
கயல், எழிலின் திருமண ஏற்பாடு படு பயங்கரமாக நடக்கிறது. என்ன தான் கயல் வீடு ஏறி சென்று தன் பெரியப்பா, பெரியம்மா, அத்தை ராஜலட்சுமியை அழைத்தாலும் அவர்கள் மனம் இன்னும் மாறவே இல்லை.
ராஜலட்சுமி ஏதோ பிளான் போட, அவரின் கணவர், ” நீ செய்வது எல்லாம் தவறான ஒன்று “ என எச்சரித்தார். இருப்பினும் அவர் தனது கணவரின் குரலுக்கு செவி சாய்க்கவில்லை. மறுபக்கம் பெரியப்பா, பெரியம்மாவும் வழக்கம் போல் ராஜலட்சுமியை ஏத்திவிட்டார்கள்.
பெரியப்பா, பெரியம்மா, அத்தை ராஜலட்சுமிக்கு திருமணத்திற்கு ஸ்பெஷலாக கொடுக்க கயல் ஏதோ ஒரு பொருளை வாங்கி உள்ளார். அதை பார்த்த அவரின் தங்கை யாருக்கு அக்கா, இது எல்லாம் என கேட்க. முக்கியமான நம் சொந்தக்காரங்களுக்கு எடுத்து வைத்து இருக்கிறேன் என சொல்கிறார்.
மறுபக்கம் எழிலின் தாய், தீபிகாவிடம், “ எழில் இப்போது கயல் என்ற சைக்கிள் மீது ஆசைப்படுகிறான். ஆனால், நான் தீபிகா என்ற விலை உயர்ந்த காரை வாங்கி கொடுக்க போகிறேன் “ என சொல்கிறார். அத்துடன் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ முடிந்தது. ஒரு பக்கம் கயல், எழில் திருமண ஏற்பாடு நடக்க அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று மற்றொரு கும்பல் கிளம்பி உள்ளது.
நேற்றைய எபிசோட்
கயலுக்கு எழிலுக்கும் திருமணம் நடக்கப்போகிறது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க, கயலின் தாயின் முகத்தில் சோகம் இருக்கிறது.
இதை யாரும் கவனிக்காத நிலையில் வழக்கம் போல் கயல் கண்டு பிடித்தார். அதற்கான காரணம் குறித்து கேட்கும் கயலிடம் அவரது தாய், ‘’உன்னுடைய கல்யாணத்தில் ராஜலட்சுமி, மாமா எல்லோரும் இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன்’’ என்கிறார். மேலும் ‘நீ அவர்களிடம் எப்படி பேசுவீயோ எனக்கு தெரியாது. உன் கல்யாணத்துக்கு எல்லோரும் வரவேண்டும்’’ எனக் கேட்கிறார்.
அதற்குப் பதிலளிக்கும் கயல்,'' பெரியப்பா, பெரியம்மா, அத்தை, வேதவள்ளி எல்லோரையும் வரவைக்கிறோம்’’என்று கூறுகிறார். அப்போது தன் கோபத்தை அடக்கிக்கொண்டு, தன் அம்மாவின் ஆசையை நிறைவேற்ற, பெரியப்பா வீட்டுக்குச் செல்லும் கயல் அவர்களிடம் பத்திரிகை வைத்து திருமணத்துக்கு வரும்படி கனிவாக அழைக்கிறார்.
அடுத்து அவரது அத்தையையும் நேரில் பார்த்து பணிவன்புடன் தனது திருமணத்திற்கு வரும்படி அழைக்கிறார், கயல். பின் அனைவரது ஆசைப்படியும் திருமணம் நல்லமுறையில் திருமணம் நடக்கவேண்டும் என நினைக்கிறார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்