கங்குவா இரண்டாம் நாள் வசூல் எவ்வளவு.. அதிகாரப்பூர்வ கணக்கை வெளியிட்ட ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கங்குவா இரண்டாம் நாள் வசூல் எவ்வளவு.. அதிகாரப்பூர்வ கணக்கை வெளியிட்ட ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்

கங்குவா இரண்டாம் நாள் வசூல் எவ்வளவு.. அதிகாரப்பூர்வ கணக்கை வெளியிட்ட ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்

Marimuthu M HT Tamil
Nov 17, 2024 12:15 AM IST

கங்குவா இரண்டாம் நாள் வசூல் எவ்வளவு.. அதிகாரப்பூர்வ கணக்கை வெளியிட்ட ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் குறித்த தகவலைப் பார்ப்போம்.

கங்குவா இரண்டாம் நாள் வசூல் எவ்வளவு.. அதிகாரப்பூர்வ கணக்கை வெளியிட்ட ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்
கங்குவா இரண்டாம் நாள் வசூல் எவ்வளவு.. அதிகாரப்பூர்வ கணக்கை வெளியிட்ட ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்

இவர்களுடன் பாலிவுட் நடிகர் பாபி தியோல், நடராஜன் சுப்ரமணியம், கருணாஸ், போஸ் வெங்கட், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்நிலையில் இப்படம் நவம்பர் 14ஆம் தேதி உலகெங்கும் 11,500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானதாகக் கூறப்படுகிறது.

கங்குவா படம் எத்தகையது?

ரூ.350 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இதுவரை தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்களில் ஒன்று, கங்குவா. ஏழுக்கும் மேற்பட்ட நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் 35 மொழிகளில் வெளியாகியுள்ளது. கங்குவா திரைப்படத்தில் இந்திய சினிமாவின் மிகப்பெரிய போர்க் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. இதில் 10,000-க்கும் மேற்பட்டோர் போர் புரிவதுபோல் நடித்துள்ளனர்.

கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவா, எண்ணூர் துறைமுகம், பிஜி தீவுகள், கொடைக்கானல், ஆந்திர மாநிலத்தின் ராஜமுந்திரி மற்றும் பல்வேறு வெளிநாடு பகுதிகளில் நடைபெற்றது.

முன்னதாக படம் குறித்து பேசிய இயக்குநர் சிறுத்தை சிவா, “உண்மையில் கங்குவன் என்பது ஒரு மொழி. படத்தின் போஸ்டரில் கங்குவன் என்ற பெயருக்கு மேலே இடம் பெற்றுள்ள எழுத்தானது வட்டெழுத்து என்று அழைக்கப்படும் பழங்காலத் தமிழ் ஆகும். இது 3ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு வழக்கத்தில் இருந்தது. கங்கு என்றால் ’நெருப்பு’ என்று பொருள். கங்குவா என்றால் நெருப்பு சக்தி கொண்ட மனிதன் என்று பொருள்படும்” என்று பேசியிருக்கிறார், சிறுத்தை சிவா.

கங்குவா எத்தனை கோடி வசூலிக்கும்?:

கங்குவா திரைப்படத்தைப் பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் ஓடிடி தளம் 80 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கே.ஜி.எஃப் 2 மற்றும் இந்தி, தெலுங்கு மொழிப் படங்கள் மட்டுமே இந்தச் சாதனையைச் செய்துள்ளன. இதுவரை எந்த தமிழ்ப் படமும் அந்த சாதனையை எட்டியதில்லை.

கங்குவாவால் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை எட்ட முடியுமா என்று படத்தின் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜாவிடம் செய்தியாளர்கல் கேட்டபோது, "நான் ரூ.2000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை எதிர்பார்க்கிறேன். அதை ஏன் ரூ.1000 கோடி என்று குறைத்து மதிப்பிடுகிறீர்கள்" என்று நம்பிக்கையுடன் பதிலளித்தார்.

கங்குவா படத்தின் கதை என்ன?

நிகழ்காலத்தில் இருக்கும் பிரான்சிஸிக்கு ஜூடா மூலம் தான் யார் என்பது தெரிய வருகிறது. அங்கே ஆரம்பிக்கிறது கங்குவாவின் கதை. ஐந்து தீவுகளில், பெருமாச்சி தீவின் ஆதர்ச நாயகனாக வலம் வரும் கங்குவாவுக்கும் அவனது குழுவுக்கும், போர் தான் குலத்தொழில் ஆகும்.

வீரமும், இயற்கையும் விளைந்த அந்த மண்ணை தன் வசப்படுத்த நினைக்கிறது ரோமானிய அரசு. அவர்கள் அதற்காக கொடுவனுக்கு பணத்தாசைக் காட்டி அவனை தங்களது வலைக்குள் கொண்டு வருகின்றனர். அவனும் ஆசைகொண்டு, பெருமாச்சி இன மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்கிறான்.

இதைக்கண்டு பொங்கிய கங்குவாவும், அவனது இனமும் அவனை தீ வைத்து கொழுத்த, அவன் மனைவி மற்றும் மகனையும் கொல்ல வேண்டும் என்று நினைக்கின்றனர். அதற்கு கங்குவா எதிராக நிற்க, ’என் மகன் இனி உன் மகன்’ என்று சொல்லி, ’கங்குவன் கையில் மகனை ஒப்படைத்துவிட்டு உடன்கட்டை ஏறுகிறார் கொடுவாவின் மனைவி’.. அதன் பின்னர் என்ன ஆனது?

உதிரன் என்பவர் பெருமாச்சி மீது போர் தொடுக்க காரணம் என்ன? அப்பாவை கொன்ற கங்குவாவை கொல்லத்துடிக்கும் கொடுவாவின் மகனின் கதை என்ன ஆனது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே படத்தின் கதை ஆகும்.

விமர்சனங்களும் தயாரிப்பாளரின் அதிரடி முடிவும்:

இந்நிலையில் படத்தில் நடிகர் சூர்யா கத்திக்கொண்டே இருப்பதாகவும் பெரும்பாலான விமர்சனங்கள் எழுந்தன. இதனால் கங்குவா திரையரங்கு உரிமையாளர்களிடம் வால்யூமை இரண்டு புள்ளிகள் குறைக்கச் சொல்லி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பில் சொல்லியிருக்கின்றனர்.

இத்தகைய கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் கங்குவா படமானது இரண்டாம் நாள் வரை, உலகளவில் ரூ.89.32 கோடி வசூலை பெற்றுள்ளதாக ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.