பழைய பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுகளை அடித்து தூக்கிய கங்குவா! சூர்யாவின் பெஸ்ட்..முதல் நாளில் அள்ளிய வசூல் எவ்வளவு?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பழைய பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுகளை அடித்து தூக்கிய கங்குவா! சூர்யாவின் பெஸ்ட்..முதல் நாளில் அள்ளிய வசூல் எவ்வளவு?

பழைய பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுகளை அடித்து தூக்கிய கங்குவா! சூர்யாவின் பெஸ்ட்..முதல் நாளில் அள்ளிய வசூல் எவ்வளவு?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Nov 15, 2024 07:46 AM IST

சூர்யாவின் பழைய பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுகளை அடித்து தூக்கிய கங்குவா, முதல் நாளில் அவரது சிங்கம் 2 படத்தை விட அதிக வசூலை பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் படம் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடியுள்ளது.

பழைய பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுகளை அடித்து தூக்கிய கங்குவா! சூரியாவின் பெஸ்ட்..முதல் நாளில் அள்ளிய வசூல் எவ்வளவு?
பழைய பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுகளை அடித்து தூக்கிய கங்குவா! சூரியாவின் பெஸ்ட்..முதல் நாளில் அள்ளிய வசூல் எவ்வளவு?

படம் அட்வான்ஸ் புக்கிங்கிலேயே கணிசமான தொகை வசூலாக அள்ளும் என கணிக்கப்பட்டிருந்தது. அது பொய்யாகவில்லை என்றாலும் எதிர்பார்ப்பை விட சற்று குறைவான வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

கங்குவா முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

சினிமாக்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை வெளிப்படுத்தும் Sacnilk.comஇன் ஆரம்ப மதிப்பீடுகளின்படி, இந்தியாவில், அதன் தொடக்க கங்குவா முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ. 22 கோடியை ஈட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

படம் அனைத்து திரையரங்குகளிலும் நாள் முழுவதும் 30-40% பார்வையாளர்களுடன் ஓடியுள்ளது. இருப்பினும் சமீபத்தில் பெரிய தமிழ் படங்களின் சில ஓப்பனிங்குகளுக்கு இணையாக இல்லை எனவும் சொல்லப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் விஜய்யின் படங்கள் பெரும்பாலான இடங்களில் 50-60% ஆக்கிரமிப்பைப் பெற்றிருந்தன.

பழைய சாதனையை முறியடித்த கங்குவா

அதேபோல், சூர்யாவின் சிங்கம் 2 படம் முதல் நாளில் ரூ. 12 கோடி வசூலை பெற்றது. இதுதான் சூர்யாவின் முதல் நாள் வசூல் சாதனையாக இருந்து வந்த நிலையில், தற்போது அதை கங்குவா முறியடித்துள்ளது. இதன் மூலம் சூர்யாவின் சிறந்த ஓபனிங்காக கங்குவா படம் மாறியுள்ளது. அத்துடன் அவரது முதல் பான் இந்தியா படமாக கங்குவா இதை சாதித்துள்ளது.

நல்ல ஓபனிங்

கங்குவா இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் உருவான படமாக இருந்து வருகிறது. படம் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பார்த்தால் முதல் நாளில் ரூ. 22 கோடி ஓப்பனிங் என்பது குறைவு தான்.

இருப்பினும் தளபதி விஜய்யின் தி கோட் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் ஆகிய படங்களைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் நல்ல ஓபனிங் பெற்ற மூன்றாவது படமாக கங்குவா உள்ளது.

தீபாவளி ரிலீஸாக சிவகார்த்திகேயனின் அமரன் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பயோபிக் படமாக உருவாகியிருக்கும் அமரன் படத்துக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், கங்குவா படத்துக்கு எதிர்பார்த்த ஸ்கிரீன்கள் பெற முடியவில்லை. அத்துடன் அமரன் படத்துடன் போட்டி போட்டு பாக்ஸ் ஆபிஸில் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது

கங்குவா கதை

நிகழ்காலத்தில் இருக்கும் பிரான்சிஸிக்கு ஜூடா மூலம் தான் யார் என்பது தெரிய வருகிறது. அங்கே ஆரம்பிக்கிறது கங்குவாவின் கதை. ஐந்து தீவுகளில், பெருமாச்சி தீவின் ஆதர்ச நாயகனாக வலம் வரும் கங்குவாவுக்கும் அவனது குழுவுக்கும், போர்தான் குலத்தொழில்.

வீரமும், இயற்கையும் விளைந்த அந்த மண்ணை தன் வசப்படுத்த நினைக்கிறது ரோமானிய அரசு. அவர்கள் அதற்காக கொடுவாவிற்கு பணத்தாசைக் காட்டி அவனை தங்களது வலைக்குள் கொண்டு வருகின்றனர். அவனும் ஆசைகொண்டு, பெருமாச்சி இன மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்கிறான். இதைக்கண்டு பொங்கிய கங்குவாவும், அவனது இனமும் அவனை தீ வைத்து கொழுத்த, அவன் மனைவி மற்றும் மகனையும் கொல்ல வேண்டும் என்று இன மக்கள் கூறுகின்றனர்.

அதற்கு கங்குவா எதிராக நிற்க, என் மகன் இனி உன் மகன் என்று சொல்லி, கங்குவன் கையில் மகனை ஒப்படைத்து விட்டு உடன் கட்டை ஏறுகிறார் கொடுவாவின் மனைவி.. அதன் பின்னர் என்ன ஆனது? உதிரா பெருமாச்சி மீது போர் தொடுக்க காரணம் என்ன? அப்பாவை கொன்ற கங்குவாவை கொல்ல துடிக்கும் கொடுவாவின் பகை என்ன ஆனது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே படத்தின் கதை.