Pallikoodam: “மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’’: மூடும்நிலையிலுள்ள பள்ளியை மீட்டெடுக்கும் மாணவர்களின் கதை ‘பள்ளிக்கூடம்’!
Pallikoodam: மீண்டும் பள்ளிக்குப் போகலாம்.. மூடும்நிலையிலுள்ள பள்ளியை மீட்டெடுக்கும் மாணவர்களின் கதை ‘பள்ளிக்கூடம்’. பள்ளிக்கூடம் திரைப்படம் வெளியாகி 17ஆண்டுகள் ஆனது தொடர்பான கட்டுரை!
Pallikoodam: தங்கர் பச்சான் எழுதி இயக்கிய ஒளிப்பதிவு செய்து 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான திரைப்படம், பள்ளிக்கூடம். இப்படத்தில் நரைன், சினேகா, ஸ்ரேயா ரெட்டி, சீமான், தங்கர் பச்சான், மீனாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அழகிக்கு பின்பு, தங்கர் பச்சான் இயக்கிய திரைப்படம் இயக்கிய படம் என்பதால், இதற்கும் ஒரு நல்ல எதிர்பார்ப்பு வெளியாகும்போது இருந்தது. பாஸிட்டிவ் ஆன விமர்சனங்களைப் பெற்ற பள்ளிக் கூடம் திரைப்படத்தை இயக்கிய தங்கர் பச்சானுக்கு மாநில அரசின் சார்பில், சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்தது.
பள்ளிக்கூடம் திரைப்படத்தின் கதை என்ன?:
கடலூர் மாவட்டத்தில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியை, அதன் வாரிசுதாரர்கள் இடிக்க முயற்சிப்பதும், அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சிலரின் முயற்சியால் அம்முயற்சி தடுத்து நிறுத்தப்படுவதும் தான், ‘பள்ளிக்கூடம்’ திரைப்படத்தின் கதை.
குமாரசாமி, கோகிலா, வெற்றிவேல், முத்து ஆகிய அனைவரும் ஒரே வகுப்பில் படித்த வகுப்புத்தோழர்கள். இதில் இவர்கள் அனைவரும் படிக்கும் பள்ளியைக் கட்டியது கோகிலாவின் தாத்தா. மீதியிருக்கும் அனைவரும் ஒரு எளிமையான குடும்பப்பின்னணியைக் கொண்டவர்கள். குமாரசாமி என்கிற குமார் தற்காலத்தில் விவசாயியாகவும், வெற்றிவேல் மாவட்ட ஆட்சியராகவும், முத்து திரைப்பட இயக்குநராகவும், கோகிலா தான் படித்த பள்ளியில் ஆசிரியையாகவும் உள்ளார்.
கோகிலாவின் மாமா, பள்ளியின் பழமையான தோற்றத்தைக் காரணம்காட்டி, மூடிவிட்டு, அதனை இடித்து விட்டு, பிளாட் போட்டு விற்றுவிட திட்டம் தீட்டுகிறார். பள்ளி ஆசிரியர்கள் எப்படியாவது பள்ளியைக் காப்பாற்ற நினைக்கின்றனர். எனவே, பள்ளியின் முன்னாள் மாணவர்களுக்கான கூட்டத்தை நடத்த முயற்சிக்கின்றனர்.
பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பற்றிய சந்திப்பு குறித்து தகவல் தெரிவிக்க குமாரசாமி சென்னை மற்றும் காஞ்சிபுரத்திற்குப் பயணப்படுகிறார். பின்,காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெற்றிவேலிடமும் திரைப்பட இயக்குநர் முத்துவிடமும் குமாரசாமிக்கு சந்திப்பு நடக்கிறது. அனைவரும் வெகுநாட்களுக்குப் பின், பழைய கதைகளைப் பேசுகின்றனர்.
ஃபிளாஷ் பேக் விரிகிறது. அதில் பள்ளிக்காலத்தில் வெற்றிவேல் - கோகிலாவை காதலிக்கிறார். பின் அது டபுள் சைட் காதல் ஆகிறது. அப்போது மருத்துவ செவிலித் தாயாக ஊருக்கு வரும் ஜான்ஸியுடன் வெற்றிவேல், குமாரசாமி,முத்து ஆகிய அனைவரும் மிகப் பாசமாகப் பழகுகின்றனர்.
ஜான்ஸி, கோகிலா மற்றும் வெற்றியின் காதலுக்கு உதவுகிறார். ஒரு கட்டத்தில் ஜான்ஸியை வெற்றி மற்றும் கோகிலாவின் காதலுக்கு உதவுகிறார்கள் எனக்குற்றம்சாட்டி, கோகிலாவின் குடும்பத்தினர் அவமானப்படுத்துகின்றனர். இதனால் ஊரை விட்டுச்செல்லும் ஜான்ஸியுடன் பாசமாகப் பழகிய முத்துவும் சென்றுவிடுகிறார்.
வெற்றி கல்லூரி படித்து, ஐ.ஏ.எஸ் தேர்வில் வென்றபின், கோகிலாவை மணமுடிக்க கிராமத்திற்குச் செல்கிறார். திருமணம்பற்றி கோகிலாவிடம் வெற்றி பேசுகிறார். அப்போது, கோகிலா, தன் குடும்பத்தினரின் சம்மதத்தோடு தான் திருமணம் நடக்கவேண்டும் என்று கூறி, வெற்றியை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். எனவே, வெற்றி தன் தந்தையை அழைத்துக்கொண்டு, கோகிலாவின் தந்தையிடம் முறைப்படி பெண் கேட்டுச்செல்கிறார். அப்போது கோகிலாவை பெண் தரமுடியாது என தடுத்த அவரது தந்தை, வெற்றிவேலின் தந்தையை அடித்துவிடுகிறார். அந்த கவலையில் வெற்றிவேலின் தந்தை மரணம் அடைந்துவிடுகின்றார். பின், வெற்றிவேல் கிராமத்தை விட்டு வெளியேறிவிடுகிறார்.
இதனால் மீண்டும் ஊருக்கு திரும்ப மனமில்லாமல் இருக்கிறார், வெற்றிவேல். தற்போது கதை நிகழ்காலத்துக்கு வருகிறது. குமாரசாமியும் முத்துவும் வெற்றியை சமாதானப்படுத்தி, பள்ளியின் 75ஆம் ஆண்டு விழாவுக்கு வரவைக்கின்றனர். முத்து மற்றும் குமாரசாமி ஆகிய இருவரும் திருமணம் ஆகி குடும்பஸ்தனாகிவிட்டனர். அந்நிகழ்வில் பங்கேற்கும் வெற்றிவேல் மற்றும் முன்னாள் மாணவர்கள், தங்களது பழைய பள்ளியைச் சீரமைக்க நன்கொடை வழங்குகின்றனர். மேலும், வெற்றிவேல், கோகிலாவின் மாமாவின் மீது பள்ளியை மீட்க வழக்குத் தொடுத்து, சாதகமான தீர்ப்பைப் பெறுகிறார்.
பின், நீண்டநாட்களாக திருமணம் செய்துகொள்ளாமல் கோகிலா நினைப்பில் இருக்கும் வெற்றிவேலும், வெற்றிவேல் நினைப்பில் இருக்கும் கோகிலாவும் இறுதியில் ஒன்று சேர்ந்து திருமணம் செய்துகொள்கின்றனர்.
பள்ளிக்கூடம் திரைப்படத்தில் நடித்தவர்கள் விவரம்:
இப்படத்தில் கோகிலாவாக நடிகை சினேகாவும், வெற்றிவேலாக நரைனும், முத்துவேலாக சீமானும் குமாரசாமியாக தங்கர்பச்சானும் நடித்துள்ளனர்.
பள்ளிக்கூடம் திரைப்படப் பாடல்கள்:
இப்படத்தில் பரத்வாஜ் இசையில் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக மீண்டும் பள்ளிக்குப் போகலாம் என்னும் பாடலும், இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே போகாத என்னும் பாடலும், ரோஸ்மேரி என்னும் பாடலும் ஹிட்டடித்தன.
பள்ளிக்கூடம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் ஆனாலும் எப்போது டிவியில் போட்டாலும் ரசிக்கலாம். அதுதான் பள்ளிக்கூடம் படத்தின் வெற்றி!
தொடர்புடையை செய்திகள்