தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Tamil Actress Devayani Shared Her Azhagi Movie Memories

Azhagi Devayani: 'தங்கர்பச்சான் சாரால் தான்.. கல்யாணத்துக்கப்புறம்..’: அழகி திரைப்படத்தை நினைவுகூர்ந்த தேவயானி

Marimuthu M HT Tamil
Mar 25, 2024 03:29 PM IST

Azhagi Devayani: அழகி திரைப்பட நினைவுகளை, நடிகை தேவயானி பகிர்ந்துள்ளார்.

தேவயானி .
தேவயானி .

ட்ரெண்டிங் செய்திகள்

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ரிலீஸாகும் புதுப்படங்களுக்கு வரவேற்பு குறைவாகவே கிடைத்து வருகிறது. அதனை ஈடுசெய்ய பிறமாநிலப் படங்கள் டப் செய்யப்பட்டும், சில முக்கியப் படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டும் திரையரங்கில் திரையிடப்படுகின்றன. இப்படி ரிலீஸ் ஆகும் படங்களுக்கு, மக்கள் கூட்டம் அதிகமாகவுள்ளது.

சமீபத்தில் கூட, காதலுக்கு மரியாதை, வாலி, யாரனி நீ மோகினி ஆகியத் திரைப்படங்கள் ரீரிலீஸ் ஆகி தியேட்டர்களில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடின.

அப்படி, கடந்த 2002ஆம் ஆண்டு, தங்கர் பச்சான் இயக்கத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி ஆகியோர் நடித்து ரிலீஸான படமான ‘அழகி’ மீண்டும் ரீ- ரிலீஸ் செய்யப்படவுள்ளது. அதன்படி, வரும் மார்ச் 29ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.

இதுதொடர்பாக ‘’அழகி'' திரைப்படத்தில் நடித்துள்ள தேவயானி கூறுகையில், ‘’அழகி திரைப்படம் மீண்டும் ரீரிலீஸ் ஆகப் போகிறது. 2002ஆம் ஆண்டு ரிலீஸான படம், அழகி. அந்தப் படம் மறுபடியும் 22 வருடங்கள் கழித்து ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது, உங்களுக்காக.

அழகி திரைப்படம், ட்ரெண்ட் செட்டிங் திரைப்படம். எனக்கு இப்பயும் ஞாபகம் இருக்குது. நான் கல்யாணத்துக்கப்புறம் முதன்முதலாக நடித்த படம் அழகி தான். இயக்குநர் தங்கர் பச்சான் சார் கூட ஏற்கனவே நிறையப் படங்களில் வொர்க் செய்திருக்கிறேன். கஷ்டப்பட்டு வேலை செய்யும் கேமராமேன்னு சொல்லலாம். மேலும் நல்ல டைரக்டர். அழகி படத்தில் நீங்கள் கண்டிப்பாக நடிக்கணும்னு சொல்லி, தங்கர் பச்சான் சார் வந்து பேசினார். ரொம்ப அருமையான லவ் ஸ்டோரியாக இருந்தது. இந்தப் படத்தில் எனக்கு அருமையான கதாபாத்திரம் கொடுத்திருந்தாங்க. பார்த்திபன் சார், நந்திதா தாஸ் மேடம் இருவரும் இந்தப் படத்தில் இருந்தாங்க. நான் பார்த்திபன் சாரின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். விவேக் சார் நடித்திருந்தார். பிரமீட் நடராஜன் சார் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த மாதிரி நிறைய நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்து இருந்தார்கள். என்னோட கேரியரில் அழகி படம், மிக முக்கியமான படம் ஆகும்'' என்றார்.

அழகி திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான ஃபிலிம்பேர் விருதை வென்றது. மேலும் இப்படம் லேதா மனசுலு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் இளையராஜாவின் இசையில் ஹிட்டடித்தன. இப்படத்தில் பாட்டுச் சொல்லி பாடச்சொல்லி என்னும்பாடலை பாடிய, சாதனா சர்கம், 49ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை வென்றார். 

முன்னதாக, இயக்குநர் ராஜகுமாரனை தேவயானி காதலித்துக் கொண்டு இருக்கும்போது அதனை தன் வீட்டில் சொல்லியிருக்கிறார். ஆனால், கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ராஜகுமாரன் வீட்டில் பெரியளவில் எதிர்ப்பு இல்லை. தேவயானியை வீட்டுச்சிறையில் வைக்க அவர்களது பெற்றோர் முடிவு செய்தநிலையில், வீட்டைவிட்டு வெளியேறிய தேவயானி, ராஜகுமாரனுடன் சென்றுவிட்டார். இதனையறிந்த தேவயானியின் பெற்றோர், இவர்களது திருமணம் திருப்பதியில் நடக்கிறது என பரவிய தகவலையறிந்து அங்கு முகாமிட்டு தேடியுள்ளனர். ஆனால், தேவயானி - ராஜகுமாரன் திருமணம் திருத்தணியில் ரகசியமாக நடைபெற்றது. இந்த அந்நியோயன்ய தம்பதிகளின் அன்புக்குப் பரிசாய் இனியா, பிரியங்கா என இருபெண் குழந்தைகள் உள்ளனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்