Suman: ரஜினியின் வலுவான வில்லன்.. 80-களில் காதல் நாயகன்.. நடிகர் சுமனின் பிறந்த நாள் சிறப்புப்பகிர்வு
Suman: ரஜினியின் வலுவான வில்லன்.. 80-களில் காதல் நாயகன்.. நடிகர் சுமனின் பிறந்த நாள் தொடர்பான சிறப்புக்கட்டுரையினைக் காண்போம்.

Suman - நடிகர் சுமனுக்கு அறிமுகம் தேவை இல்லை. தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர். நடிகர் சுமன் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 700-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, பிரபலமானவர். தமிழ் மற்றும் தெலுங்கு தவிர, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழி படங்களிலும் சுமன் படம் நடிக்க ஆர்வம் காட்டினார். 1980 மற்றும் 1990களை ஒட்டிய காலங்களில் தெலுங்கு சினிமாவில் நடித்ததற்காக, சுமன் தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தார்.
இவர் பெரும்பாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் கதாநாயகனாக மட்டுமின்றி, குணச்சித்திர நடிகராகவும் நடித்து அசத்தினார்.
யார் இந்த சுமன், அவரின் குடும்பப்பின்னணி என்ன?:
சுமன் சென்னையில் துளு மொழி பேசும் பிள்ளைவா குடும்பத்தில் ஆகஸ்ட் 28, 1959இல் பிறந்தார். இவரது தாயார் கேசரி சந்திரா, சென்னையில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியின் முதல்வராக இருந்தார். இவரது தந்தை சுஷீல் சந்திரா சென்னை ஐ.ஓ.சி.யில் பணிபுரிந்தார். சென்னை பெசன்ட் தியோசாபிகல் உயர்நிலைப் பள்ளியில் பயின்று ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற சுமன் எச்.ஏ.எஸ் சாஸ்திரியிடம் இசை மற்றும் சமஸ்கிருதம் கற்றார்.