தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Villadhi Villain: 100 நாள் வெற்றி.. மூன்று பாத்திரத்தில் தன்னை நிலைநிறுத்திய சத்யராஜ்

Villadhi Villain: 100 நாள் வெற்றி.. மூன்று பாத்திரத்தில் தன்னை நிலைநிறுத்திய சத்யராஜ்

Aarthi Balaji HT Tamil
Jun 23, 2024 06:00 AM IST

Villadhi Villain: நடிகர் சத்யராஜ் இயக்கி நடித்த வில்லாதி வில்லன் திரைப்படம் இன்றுடன் வெளியாகி 29 ஆண்டுகள் ஆகின்றன.

100 நாள் வெற்றி.. மூன்று பாத்திரத்தில் தன்னை நிலைநிறுத்திய சத்யராஜ்
100 நாள் வெற்றி.. மூன்று பாத்திரத்தில் தன்னை நிலைநிறுத்திய சத்யராஜ்

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனால் ஒரு சில நாயகர்கள் மட்டுமே அனைத்து திறமைகளையும் தன்னில் வைத்து கொண்டு கடைசி வரை தமிழ் சினிமாவில் நாயகர்களாக வலம் வருகின்றனர். 

வெற்றி நாயகன் சத்யராஜ்

தமிழ் சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வெற்றி நாயகனாக வலம் வரக்கூடிய நடிகர்களில் ஒருவர் தான் சத்யராஜ்.

தன்னை இயக்குநராக அவர் அறிமுகப்படுத்திக் கொண்ட திரைப்படம் தான் வில்லாதி வில்லன். இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படமாக இது அமைந்தது. 

மூன்று வேடத்தில் சத்யராஜ்

முக்கியமாக இந்த திரைப்படத்தில் சத்யராஜ் மூன்று வேடத்தில் நடித்து அசத்தி இருப்பார். மூன்று கதாபாத்திரங்களுக்கும் வித்தியாசத்தைக் காட்டுவதற்காக அவர் கையாண்டிருந்த நடிப்பின் திறமை சொல்லினால் அடக்க முடியாது.

சற்று வித்தியாம்

சத்யராஜ் சிறந்த நடிகராக இருந்தாலும் திரைப்படத்தின் இயக்குநராக இருந்து கொண்டு மூன்று கதாபாத்திரங்களையும் வெவ்வேறு விதத்தில் நடித்து இருப்பது சினிமாவிலும் அவர் வில்லாதி வில்லன் என நிரூபித்திருக்கிறது. பணக்கார அரசியல்வாதிக்கும், ஏழை இளைஞனுக்கும் ஏற்படக்கூடிய சிக்கல்களை வைத்து கதைக்களம் அமைந்து இருந்தாலும் இயக்குநராக நடிகர் சத்யராஜ் திரைக்கதையைக் கையாண்ட விதம் சற்று வித்தியாசமாக இருக்கும்.

கவர்ச்சி காட்சியில் நக்மா

இந்த திரைப்படத்தில் நாயகியாக நடிகை நக்மா நடித்து இருப்பார். நக்மா நடித்திருந்த கவர்ச்சி காட்சிகளுக்காகவே ஏராளமான ரசிகர்கள் இந்த திரைப்படத்தைப் பார்த்தனர். அதிகார வர்க்கத்தினை சாமானியன் எதிர்த்தால் என்ன நிலைக்கு உள்ளாக்கப்படுவார் என்பதை இந்த கதையின் அடித்தளம் ஆகும்.

ஜாம்பவான்களின் பட்டியல்

இந்த திரைப்படத்தில் வயசு பத்திக்கிச்சு என்ற பாடலில் நக்மா நடித்திருந்த கவர்ச்சி காட்சிகள் மிகப்பெரிய ஹிட் அடித்தன. இசை ஜாம்பவான்களின் பட்டியலில் ஒருவராக விளங்கக்கூடிய வித்யாசாகர் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை

அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கும் சத்யராஜ் இயக்குநராக இந்த படத்திலும் நிரூபித்து வெற்றி வாகை சூடினார். 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடிய இந்த திரைப்படம் சத்யராஜின் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படம் இன்றுடன் வெளியாகி 28 ஆண்டுகள் ஆகின்றன. சிறந்த கலைஞனின் சிறந்த படைப்புகள் என்றுமே வரலாற்றின் சரித்திர குறியீடு ஆகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

 

WhatsApp channel

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.