இது தான் இந்தியன் ஆர்மியின் முகம்.. யூ ஆர் சூஸன் ஓன்ஸ்.. அமரன் டீம் சொன்ன சூப்பர் தகவல்..
ராணுவ வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய்ப்பல்லவி நடித்துள்ள அமரன் படத்தின் ட்ரெயிலர் நாளை வெளியாகும்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ள திரைப்படம் அமரன். ராணுவ வீரர் முகுந்த் வரதராஜின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சாய் பல்லவி இந்து ரேபேகா வர்கீஸாக நடித்துள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்தப் படத்தை நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
காதல் காவியம்
இந்தப் படம் தீபாவளியை ஒட்டி வரும் அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்களைக் கவர்ந்தது. ஒரு ராணுவ வீரனின் அழகான காதல் கதையில், சிவகார்த்திகேயனும் சாய் பல்லவியும் இணைந்து நடித்து அந்த காதலை உயிர்பித்துள்ளனர்.
இந்தப் படத்தின் டீசரே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நாளை அக்டோபர் 23ம் தேதி மாலை 6 மணிக்கு அமரன் படத்தின் ட்ரெயிலர் ரிலஸாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.
மெனக்கெடல்
உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கபடும் படம் என்பதால், இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் முறையாக துப்பாக்கியை கையாளுவது குறித்து பயிற்சி எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, ராணுவ வீரர்கள் மேற்கொள்ளும் பல பயிற்சிகளையும் செய்துள்ளார். காஷ்மீரின் உறைய வைக்கும் பணியிலும் அதிக மெனக்கெடல்களை எடுத்துக் கொண்டார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் தேர்வு
முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நான் யாரை வேண்டுமென்றாலும் நடிக்க வைத்திருக்கலாம். ஆனால் எனக்கு ஒரு சராசரி மனிதனின் முகம் தேவைப்பட்டது. சிவகார்த்திகேயன் ஒரு சராசரி மனிதனுக்கான அடையாளத்தை அவர் பிரதிபலித்ததால் அவரை அந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தேன்.
இன்னும் 10 வருடம் கழித்து, இன்னும் பெரிய நட்சத்திர அந்தஸ்தில் சிவா இருந்தாலும் கூட, அவருக்கு அந்த சராசரி மனிதனுக்கான அடையாளம் இருக்கும் எனக் கூறி இயக்குநர் ராஜ்குமார் கூறியிருக்கிறார்.
முகுந்தனின் கதை
இப்படம் ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய மேஜர் முகுந்த் வரதராஜனின், இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ் என்ற புத்தகத்தில் இருந்து, இக்கதையை எழுதி, திரைக்கதை அமைத்துள்ளார், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. இப்படம் ரூ. 150 கோடி முதல் 200 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.20 கோடி வரை பெற்றதாக தெரியவருகிறது.
அமரன்
நடிகர் கார்த்திக் நடிப்பில் ஏற்கனவே அமரன் என ஒரு திரைப்படம் வெளியான நிலையில், அந்தப் படக்குழுவிடம் முறையான அனுமதி பெற்ற பின்னே ராஜ்குமார் பெரியசாமி படத்தின் டைட்டிலை உறுதி செய்துள்ளார். காரணம், இந்தப் படத்தை அவர் எடுக்க வேண்டும் என நினைத்து அமர்ந்த போது முதலில் எழுதிய வார்த்தை அமரன். இது எப்படி வந்தது என எனக்கு நினைவில்லை. இப்படத்தின் ஆரம்பமாக இந்த வார்த்தை அமைந்ததால் அதே பெயரை படத்திற்கு வைக்க வேண்டும் என முடிவு செய்ததாக கூறியிருக்கிறார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்