எல்லா இடத்திலும் ஹவுஸ் ஃபுல்! 3 நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி வசூலைக் கடந்த அமரன்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் வெளியான 3 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 51.6 கோடி வசூலித்துள்ளது.

ராணுவத்தில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் திரைப்படம் தான் அமரன். முகுந்த்தாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் நிலையில், அவரது மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவி நடித்து இருக்கிறார். ராஜ் குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரித்து இருக்கிறார்.
வசூலில் கெத்து காட்டும் அமரன்
அமரன் திரைப்படம் தீபாவளி பண்டிகை பண்டிகையன்று அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் வெளியாகும் முன்னரே ப்ரீ புக்கிங்கில் அதிக வசூலைப் பெற்ற நிலையில், வெளியான 3 நாட்களிலும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனால் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. படம் வெளியாகி 3 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 51.6 கோடி வசூலைப் பெற்றுள்ளது. இந்திய அளவில் பார்க்கும் போது படம் 3 நாட்களில் 62.25 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. மேலும், உலகளவில் 68.65 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளதாக sacnilk.com இணையதளம் கூறியுள்ளது.