ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க உள்ள சிவகார்த்திகேயன்.. புறநானூறு படப்பிடிப்பு டிசம்பரில் ஆரம்பமாம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க உள்ள சிவகார்த்திகேயன்.. புறநானூறு படப்பிடிப்பு டிசம்பரில் ஆரம்பமாம்!

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க உள்ள சிவகார்த்திகேயன்.. புறநானூறு படப்பிடிப்பு டிசம்பரில் ஆரம்பமாம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Published Oct 29, 2024 10:23 AM IST

சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ள படத்திலும், சுதா கொங்கரா இயக்க உள்ள படத்திலும் ஒரே நேரத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க உள்ள சிவகார்த்திகேயன்.. புறநானூறு படப்பிடிப்பு டிசம்பரில் ஆரம்பமாம்!
ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க உள்ள சிவகார்த்திகேயன்.. புறநானூறு படப்பிடிப்பு டிசம்பரில் ஆரம்பமாம்!

இதற்கிடையில் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தை வரும் 2026ம் ஆண்டு நடை பெற உள்ள சட்ட மன்ற தேர்தலுக்கு முன்பாகவே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையல் சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ள படத்திலும், சுதா கொங்கரா இயக்க உள்ள படத்திலும் ஒரே நேரத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிவ கார்த்திகேயன் தற்போது முருகதாஸ் இயத்தில் தனது 23ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு ஆகியோர் இயக்கத்தில் தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தம் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விலகிய சூர்யா

முன்னதாக சூர்யாவுடன் சுதா கொங்கரா இருவரும் சூரரைப்போற்று திரைப்படத்தில் இணைந்திருந்தனர். அந்தப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றது. மேலும் தேசிய விருதைகளையும் வென்றது குறிப்பிடத்தக்கது.இதைத்தொடர்ந்து சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சுதா கொங்கரா சூர்யா கூட்டணியில் புறநானூறு படத்திற்கான வேலைகள் தொடங்கின.

மதுரையில் சூர்யா மாணவராக வரும் தோற்றம் தொடர்பான காட்சிகள் எடுக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. மாணவராக வரும் சூர்யா அரசியலுக்குள் இறங்குவது தொடர்பான காட்சிகளும் இதில் இடம் பெரும் என எதிர்பார்க்கப்பட்டது.

காரணம் இந்த படத்தின் கதை 1950 முதல் 1965 வரையிலான காலக்கட்டத்தில் நடக்ககூடியதாம். அப்போது தமிழ்நாட்டில் நிலவிய ஹிந்தி எதிர்ப்பு சம்பவங்களை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகின.

படத்தில் சூர்யா படிப்பின் முக்கியத்துவதை பேசும் கதாபாத்திரமாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. சென்னையிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கும் நிலையில், அந்த கால சென்னையை தத்ரூபமாக கொண்டு வருவதற்கான வேலைகள் மும்மரமாக நடந்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் திடீரென சில அரசியல் காரணங்களால் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார்.

இதனால் இயக்குநர் சுதா கொங்கரா சிவகார்த்திகேயனை வைத்து படத்தை உருவாகும் முயற்சியில் தற்போது மும்முரமாக உள்ளார். அதே சமயம் நடிகர் சூர்யா படத்தில் இருந்து விலகி உள்ளதால் புறநானூறு என்ற படத்தின் பெயரும் மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.