Music Album: சுதா கொங்கரா வெளியிட்ட ‘திமிருக்காரியே’.. சமூக வலைதளங்களில் இன்டீ வீடியோ வைரல்-thimirukariye song released by director sudha kongra - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Music Album: சுதா கொங்கரா வெளியிட்ட ‘திமிருக்காரியே’.. சமூக வலைதளங்களில் இன்டீ வீடியோ வைரல்

Music Album: சுதா கொங்கரா வெளியிட்ட ‘திமிருக்காரியே’.. சமூக வலைதளங்களில் இன்டீ வீடியோ வைரல்

Aarthi Balaji HT Tamil
Sep 29, 2024 11:01 AM IST

டிரெண்டிங் தீவிரவாதி கௌதம், பிரிகிடா சாகாவின் 'திமிருக்காரியே' பாடல் வீடியோ வெளியாகியுள்ளது

Music Album: சுதா கொங்கரா வெளியிட்ட ‘திமிருக்காரியே’.. சமூக வலைதளங்களில் இன்டீ வீடியோ வைரல்
Music Album: சுதா கொங்கரா வெளியிட்ட ‘திமிருக்காரியே’.. சமூக வலைதளங்களில் இன்டீ வீடியோ வைரல்

தமிழ் இசைத் துறையில் சமீப காலங்களில் இன்டீ பாடல்கள் என்ற புதுவகை ஆல்பங்கள் மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றன. சொல்லப் போனால், இன்டீ பாடல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு என்றும் கூறலாம். இந்தப் பட்டியலில் புதுவரவு இன்டீ பாடலாக இணைந்துள்ளது தான், 'திமிருக்காரியே.' கோவில் திருவிழா பின்னணியில் இந்தப் பாடல் உருவாகி இருக்கிறது.

கௌதம் மற்றும் பிரிகிடா சாகா

முன்னணி இயக்குநர் சுதா கொங்கரா இந்தப் பாடலை சமீபத்தில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் வெளியிட்டார். ஏ.கே. சசிதரன் இசமையமைத்துள்ள இந்தப் பாடலை அந்தோனி தாசன் பாடியுள்ளார். பிரபல யூடியூபர்களான டிரெண்டிங் தீவிரவாதி கௌதம் மற்றும் பிரிகிடா சாகா இணைந்துள்ள இந்தப் பாடலை ருத்ரா ஜித் இயக்கியுள்ளார்.

ஏற்கனவே இந்தப் பாடலின் அறிவிப்பு மற்றும் டீசர், இதற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. இதோடு அந்தோனி தாசனின் குரல் மற்றும் ஏ.கே. சசிதரனின் இசை இந்தப் பாடல் அனைவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. ஸ்ரீதர் மாஸ்டர் நடன அமைப்பில் டிரெண்டிங் தீவிரவாதி கௌதம் மற்றும் பிரிகிடா சாகாவின் கெமிஸ்ட்ரி சிறப்பாக வேலை செய்துள்ளது.

அசத்தல் நடன அசைவுகள்

இதுதவிர ஸ்ரீதர் மாஸ்டரின் அசத்தல் நடன அசைவுகள் பாடலுக்கு கூடுதல் உற்சாகம் மற்றும் எனர்ஜியை சேர்த்துள்ளது. இந்தப் பாடல் யூடியூப் மற்றும் முன்னணி இசை தளங்களில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் பாடல் வீடியோவுக்கு மல்லிகா அர்ஜூன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள ஆதித் மாறன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்தப் பாடலை டிரெண்டிங் தீவிரவாதி கௌதம் புரொடெக்ஷன்ஸ் தயாரிக்க செந்தில்குமார் சரிதா சார்பில் எஸ்.எஸ். அன்ட் கோ இணைந்து தயாரித்துள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.