என் நீண்ட கால நண்பர் விஜய்!உதயநிதி முதல் சிவகார்த்திகேயன் வரை பிரபலங்கள் வாழ்த்து!
தவெக மாநாட்டிற்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி மற்றும் பல திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட பல சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'விஜய் எனக்கு நீண்ட கால நண்பர். சிறு வயதில் இருந்தே அவரைத் தெரியும். ஒரு தயாரிப்பாளராக எனது முதல் தயாரிப்பு அவருடைய படத்தை தான் தயாரித்தேன். அவருடைய புதிய முயற்சிக்கு வாழ்த்துகள். அரசியல் கட்சி தொடங்க அனைவருக்கும் உரிமை உள்ளது. 75 ஆண்டுகளில் பல கட்சிகள் வந்துள்ளன, பல கட்சிகள் காணாமல் போய்விட்டன. மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்கள், கொள்கைகள், மக்கள் பணி செய்வது தான் மிக மிக முக்கியம். இவ்வாறு உதயநிதி தெரிவித்தார்.
நடிகர் விஜய் சேதுபதி அவரது X தளத்தில், 'தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு சிறக்க,. தவெக தலைவர் விஜய் சாருக்கும், தொண்டர்களுக்கு வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.