HBD AR Murugadoss: கோலிவுட் முதல் பாலிவுட் வரை சாதித்தது எப்படி?.. ஏஆர் முருகதாஸ் பிறந்தநாள் ஸ்பெஷல்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Ar Murugadoss: கோலிவுட் முதல் பாலிவுட் வரை சாதித்தது எப்படி?.. ஏஆர் முருகதாஸ் பிறந்தநாள் ஸ்பெஷல்!

HBD AR Murugadoss: கோலிவுட் முதல் பாலிவுட் வரை சாதித்தது எப்படி?.. ஏஆர் முருகதாஸ் பிறந்தநாள் ஸ்பெஷல்!

Karthikeyan S HT Tamil
Sep 25, 2024 06:54 AM IST

HBD AR Murugadoss: ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு கருப்பொருள், ஒருவிதமான புதிய சிந்தனை, தொழில்நுட்பம் என படத்துக்கு படம் வித்தியாசத்தை காட்டிக்கொண்டே இருந்தார் ஏஆர் முருகதாஸ்.

HBD AR Murugadoss: கோலிவுட் முதல் பாலிவுட் வரை சாதித்தது எப்படி?.. ஏஆர் முருகதாஸ் பிறந்தநாள் ஸ்பெஷல்!
HBD AR Murugadoss: கோலிவுட் முதல் பாலிவுட் வரை சாதித்தது எப்படி?.. ஏஆர் முருகதாஸ் பிறந்தநாள் ஸ்பெஷல்!

அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவின் 'குஷி' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இவருடைய திறமையாலும் உழைப்பாலும் கவரப்பட்ட எஸ்.ஜே.சூர்யா இவரை அஜித்துக்கு அறிமுகப்படுத்தினார். அதன் மூலம் அஜித் நடித்த 'தீனா' படத்தை இயக்கும் வாய்ப்பு முருகதாஸூக்கு கிடைத்தது.

அஜித் தலயாக மாறியது

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட முருகதாஸ், அஜித்தையும் ஆக்‌ஷன் நாயகன் இமேஜுக்கு உயர்த்தினார். பரபரப்பான ஆக்‌ஷன். உணர்வுபூர்வமான சென்டிமென்ட், அழகான காதல், அதிரடியான பாடல்கள் என அஜித்தின் திரைவாழ்வில் மிக முக்கியமான வெற்றிப் படமாக இது அமைந்தது . தீனா வெளியாவதற்கு முன்பு வரை அல்டிமேட் ஸ்டாராக இருந்த அஜித் 'தல' ஆனது இந்தப் படத்தின் மூலமாகத்தான்.

மிகப்பெரிய வெற்றி பெற்ற ரமணா

இதைத் தொடர்ந்து கேப்டன் விஜயகாந்தை வைத்து முருகதாஸ் இயக்கிய 'ரமணா' மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து கஜினி, ஏழாம் அறிவு என தனது எல்லைகளை விரிவுபடுத்தினார் முருகதாஸ். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு கருப்பொருள், ஒருவிதமான புதிய சிந்தனை, தொழில்நுட்பம் என படத்துக்கு படம் வித்தியாசத்தை காட்டிக்கொண்டே இருந்தார் ஏஆர் முருகதாஸ். சூர்யாவை வைத்து அவர் இயக்கியிருந்த 'ஏழாம் அறிவு' படத்தில் கூட தமிழ் இனத்தின் தொன்மையையும் பெருமிதங்களையும் குறித்து நாம் அறியாத பல தகவல்களை விரிவாகப் பதிவு செய்திருந்தார்.

திருப்புமுனையை ஏற்படுத்திய துப்பாக்கி

விஜயின் கேரியர் அதளபாதளத்தில் தொங்கி கொண்டிருந்த போது 'துப்பாக்கி' என்ற படத்தை கொடுத்து தூக்கிபிடித்தவர், அடுத்ததாக 'கத்தி' படத்தில் விஜயை இன்னும் ஷார்ப் செய்து அவர் இழந்த இடத்தை மீட்டுக்கொடுத்தார். கத்தியில் விவசாயிகள் தற்கொலைக்குப் பின்னால் இயங்கும் கார்ப்பரேட் சதியை அப்பலப்படுத்தியது ரசிகர்களை தாண்டி விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது.

மீண்டும் விஜயுடன் இணைந்த ஏஆர்

மீண்டும் விஜயுடன் 'சர்கார்', ரஜினியின் 'தர்பார்' என முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கினார் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் தயாரிப்பாளராகவும் 'எங்கேயும் எப்போதும்', 'வத்திக்குச்சி', 'ராஜா ராணி', 'மான் கராத்தே', '10 எண்றதுகுள்ள', 'ரங்கூன்' என பல படங்களை தயாரித்துள்ளார். த்ரிஷா நாயகியாக நடித்த'ராங்கி' திரைப்படத்துக்குக் கதை எழுதித் தயாரித்திருந்தார். 

கோலிவுட் டூ பாலிவுட்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் 'கஜினி' படத்தை ரீமேக் செய்ததன் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. தொடர்ந்து அக்‌ஷய் குமாரை வைத்து 'துப்பாக்கி' படத்தை 'ஹாலிடே' என்ற பெயரில் ரீமேக் செய்தார். கடைசியாக அவர் பாலிவுட்டில் சோனாக்‌ஷி சின்ஹாவை வைத்து 'அகிரா' என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் அருள்நிதி நடிப்பில் வெளியான 'மௌன குரு' படத்தின் ரீமேக். தற்போது சல்மான்கான் நடிக்கும் படத்தையும் இயக்க ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்பந்தமானார். ‘சிக்கந்தர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

பெரிய நாயகர்களை வைத்து சமூக பிரச்னை சார்ந்த கதைகளை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இன்னும் பல வெற்றிகளையும் விருதுகளையும் குவித்து இன்னும் பெரிய சாதனைகளை நிகழ்த்த மனதார வாழ்த்துவோம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.