தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Sivakarthikeyan And Srileela Visit The College Festival Stage In Trichy

Sreeleela - SK: ‘SK-உடன் மேடையைப் பகிர்ந்த ஸ்ரீலீலா.. எனக்கு அவங்களதான் பிடிக்கும்.. விடாமல் கடலைபோட்ட சிவகார்த்திகேயன்’

Marimuthu M HT Tamil
Mar 26, 2024 04:30 PM IST

Sreeleela - SK: திருச்சியில் கல்லூரி விழா மேடையில் சிவகார்த்திகேயனும் ஸ்ரீலீலாவும் வருகை புரிந்துள்ளது வைரல் ஆகிவருகிறது.

எஸ்.கே.வுடன் மேடையைப் பகிர்ந்த ஸ்ரீலீலா
எஸ்.கே.வுடன் மேடையைப் பகிர்ந்த ஸ்ரீலீலா

ட்ரெண்டிங் செய்திகள்

திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்வு ஒன்றில் நடிகை ஸ்ரீலீலா மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய நடிகை ஸ்ரீலீலா, ''நான் ரொம்ப ஹேப்பி, நிஜமாக. தமிழில் இதுவரை நான் ஒரு படம் கூட பண்ணவில்லை. தமிழ்நாட்டுக்கு நான் கல்லூரிக்கு விருந்தினராகப் போனால், என்னை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று சந்தேகம் இருந்தது. இப்போது, என் ரசிகர்களைப் பார்த்தவுடன் தமிழில் நான் படம் செய்யவேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது. லவ் யூ பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்’’ என்றார்.

அதனைத் தொடர்ந்து அவரிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது ஸ்ரீலீலாவிடம் நீங்கள் கமிட்டடா என்று கேட்கப்பட்டது. அதற்கு, அவர் ‘’கமிட்டட் டூ தி ஃபேன்ஸ்'' என்று பதில் உரைத்தார்.

அதன்பின், ‘’ரக்கட் பாய்ஸ் பிடிக்குமா? சாக்லேட் பாய்ஸ் பிடிக்குமா'' என்று நிகழ்ச்சி தொகுப்பாளினிகள் கேள்விகேட்டார்கள். அதற்குப் பதிலளித்த ஸ்ரீலீலா, ‘’ரக்கட் பாய்ஸ் தான் பிடிக்கும்’’என்றார். அதன்பின் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நடிகை ஸ்ரீலீலாவின் பதில்களின் தொகுப்பு, ‘’எனக்கு கிடைத்த புரோபோசல்களிலேயே மோசமான புரோபோசல் என்றால் அது லவ் யூ அக்கா என்று ஒருவர் சொன்னதுதான். எனக்கு லவ் பண்ணி, ஆரஞ்ச் மேரேஜ் பண்ணனும் என்ற ஆசைதான் இருக்கிறது’’என்றார்.

அதன்பின் மேடை ஏறிய சிவகார்த்திகேயன் அங்கு படிக்கும் தெலுங்கு மொழி பேசும் மாணவர்களுக்காக, ’’உங்களை திருச்சியில் பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது’’ என்று தெலுங்கு மொழியில் பேசினார்.

அதன்பின், சிவகார்த்திகேயனும் ஸ்ரீலீலாவும் சேர்ந்து டான்ஸ் ஆடுமாறு நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கேட்டனர். 

அப்போது பேசிய சிவகார்த்திகேயன், ‘அவர் லெவலுக்கு நம்மால் ஆட முடியாது. அவரது முதல் படப் பாடலைப்பார்த்திருக்கிறேன். அவருக்கு ஸ்ரீலீலா என்று கூப்பிடுவதற்குப் பதில் டான்ஸ் என்று பெயர் வைக்கலாம்’’ என்றார். அதன்பின் மேடை ஏறிய ஸ்ரீலீலா, ‘’தாங்கள் முன்பே சைமா விழாவில் சந்தித்துக்கொண்டோம்; என்னை முன்பே அங்கீகரித்தமைக்கு நன்றி’’ என்றார். 

அப்போது மைக்கை வாங்கிய நடிகர் சிவகார்த்திகேயன், ‘உங்களுடைய நடனம் மிகவும் அருமையாக உள்ளது. அதை நன்றாக செய்கிறீர்கள். நீங்கள் அற்புதமானவர்’என்று விடாமல் ஸ்ரீலீலாவிடம் பேசினார். உடனே அரங்கின்கீழ் அமர்ந்து இருந்த கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பரித்தனர். 

நடிகை ஸ்ரீலீலா இன்றைய 2கே கிட்ஸ்களின் கனவுக்கன்னி எனலாம்.

மருத்துவம் பயின்று வரும் நடிகை ஸ்ரீலீலா, 2019ஆம் ஆண்டு முதன்முதலாக கிஸ் என்னும் படத்தின் மூலம் கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். இயக்குநர் ஏ.பி.அர்ஜூன் ஸ்ரீலீலாவின் படங்களை பார்த்து இம்ப்ரஸ் ஆகி, கிஸ் படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

அதன்பின் நடிகை ஸ்ரீலீலா 'பெல்லி சண்டாடி’ எனும் திரைப்படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்ற ’மதுரா நகரிலோர்’ என்னும் பாடலில் ஸ்ரீலீலா ஆடிய நடன அசைவுகள் பலரால் ஈர்க்கப்பட்டன. நடிகை ஸ்ரீலீலா, நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் சேர்ந்து பகவந்த் கேசரி என்னும் படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் மகேஷ் பாபுவுடன் நடித்து வெளியான குண்டூர் காரம் திரைப்படம் வெகுமக்களால் பலரால் ரசிக்கப்பட்டது. இப்படத்தில் வரும் ‘குறிச்சி மாடத்துபெட்டி’ என்னும் பாடல், தெலுங்கு மொழியில் மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனைத்தொடர்ந்து நடிகை ஸ்ரீலீலா, ரவிதேஜாவுடன் தமாக்கா என்னும் படத்திலும், ராம் பொத்தினேனியுடன் ஸ்கந்தா படத்திலும் நடித்து வருகிறார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்