Jayam Ravi : திடீர் ட்விஸ்ட்.. மனைவி மீது போலீசில் ஜெயம் ரவி பரபரப்பு புகார்.. வீட்டை விட்டு துரத்தினாரா ஆர்த்தி!-jayam ravi filed a complaint against his wife aarthi in the police - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jayam Ravi : திடீர் ட்விஸ்ட்.. மனைவி மீது போலீசில் ஜெயம் ரவி பரபரப்பு புகார்.. வீட்டை விட்டு துரத்தினாரா ஆர்த்தி!

Jayam Ravi : திடீர் ட்விஸ்ட்.. மனைவி மீது போலீசில் ஜெயம் ரவி பரபரப்பு புகார்.. வீட்டை விட்டு துரத்தினாரா ஆர்த்தி!

Divya Sekar HT Tamil
Sep 25, 2024 08:05 AM IST

Jayam Ravi: நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தி மீது அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் நேற்று (செப்டம்பர் 24) புகார் அளித்துள்ளார்.

Jayam Ravi : திடீர் ட்விஸ்ட்.. மனைவி மீது போலீசில் ஜெயம் ரவி பரபரப்பு புகார்.. வீட்டை விட்டு துரத்தினாரா ஆர்த்தி!
Jayam Ravi : திடீர் ட்விஸ்ட்.. மனைவி மீது போலீசில் ஜெயம் ரவி பரபரப்பு புகார்.. வீட்டை விட்டு துரத்தினாரா ஆர்த்தி!

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனிடையே நடிகர் ஜெயம் ரவி தான் எதனால் மனைவியை பிரிந்தேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் முதல் முறையாக பேசி உள்ளார்.

ஆர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தேன்

அதில்,“என் மனைவி விவாகரத்து தொடர்பாக சொல்லி இருக்கும் கருத்து தவறானது. அவருக்குத் தெரியாமல் இது நடக்கவில்லை. நான், சமூக வலைத்தளத்தில் அறிவிப்பதற்கு முன்பே இரண்டு முறை ஆர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தேன்.

அதற்கு பிறகு தான் சமூக வலைத்தளத்தில் இந்த தகவலை முறைப்படி வெளியிட்டேன். எந்த முடிவு எடுத்தாலும் நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே எனது பெற்றோர்களின் ஆசை. இந்த விஷயத்திலும் அவர்கள் அப்படி தான் நினைக்கிறார்கள். எனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

என்றைக்கும் கைவிடும் எண்ணம் இல்லை

அதில் முதல் மகன் சற்று வளர்ந்து இருப்பதால் நான் ஏற்கனவே அவனிடம் விவாகரத்து குறித்து சொல்லி இருக்கிறேன். இருப்பினும் தன் தாய் ஆர்த்தியை நான் பிரிவது அவர்களுக்கு விருப்பம் இல்லை. ஆனால் ஒன்றும் செய்ய முடியது. கால சூழல் காரணமாக நான் ஆர்த்தியை பிரிய முடிவு செய்து உள்ளேன்.

இதனால் நான் எனது மகன்களை பார்க்க மாட்டேன் என்று அர்த்தம் இல்லை. அவர்களை என்றைக்கும் கைவிடும் எண்ணம் இல்லை. சமீபத்தில் கூட எனது மகனின் பிறந்தநாளை குடும்பத்துடன் சேர்ந்தே கொண்டாடினோம். அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை நீதிமன்றம் பார்த்து கொள்ளும், அப்போது பல உண்மைகளும் தெரியவரும். வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு செய்து என்னை பேசுவதை ஏற்று கொள்ள முடியவில்லை. ” என்றார்.

மனைவி ஆர்த்தி மீது போலீசில் பரபரப்பு புகார்

ஆனால் ஆர்த்தியோ தான் ஜெயம் ரவியை விவாகரத்து செய்யவில்லை எனவும் என்னிடம் கலந்தாலோசனை செய்யாமலேயே ரவி இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தி மீது போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தி மீது அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் நேற்று (செப்டம்பர் 24) புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், சென்னை ஈ.சி.ஆர். சாலையில் உள்ள ஆர்த்தி வீட்டில் உள்ள தனது உடைமைகளை மீட்டுத்தர வேண்டும் ஜெயம் ரவி கோரிக்கை விடுத்துள்ளார்.

உடைமைகளை மீட்டுத்தர வேண்டும்

அதாவது தன்னை வீட்டை விட்டு ஆர்த்தி வெளியேற்றி விட்டதாக ஜெயம் ரவி புகார் தெரிவித்துள்ளார். ஆனால் ஆர்த்தி இது உங்கள் வீடு. எப்போது வேண்டுமானாலும் நீங்கள் இந்த வீட்டுக்கு வரலாம் என்று ஜெயம் ரவியிடம் கூறியதாக ஆர்த்தி போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஜெயம் ரவி ஆர்த்தி தன்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் அவரிடமிருந்து உடமையை  மீட்டுக் கொடுக்கும் படியும் கேட்டுள்ளார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.