Jayam Ravi: ஆர்த்தியின் கையை விட்டுப் போன கணக்கு... அன்ஃபாலோ செய்த ஜெயம் ரவி... இனி இது தான் பிளான்....
Jayam Ravi: நடிகர் ஜெயம் ரவி மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் மனைவி ஆர்த்தியை தற்போது அன்ஃபாலோ செய்துள்ளார்.
கோலிவுட்டின் க்யூட் ஆன தம்பதிகளாக வலம் வந்த ஜெயம்ரவியும் ஆர்த்தியும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய உள்ளேன் என நடிகர் ஜெயம் ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் பற்றி எரிந்து கொண்டிருந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் மனைவி ஆர்த்தியை அன்ஃபாலோ செய்துள்ளார் ஜெயம் ரவி. இதற்குப் பின் இத்தனை கதை உள்ளதா என ரசிகர்கள் தற்போது வாயைப் பிளந்துள்ளனர்.
ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஜெயம் ரவி. இவரது அண்ணன் ராஜா தமிழில் முன்னணி திரைப்பட இயக்குநர். இவரது தந்தை புரொடியூசர். இப்படி இருக்க கொஞ்சம் கொஞ்சமாக தனது நடிப்பின் மூலம் மக்களைக் கவர்ந்தார் ஜெயம் ரவி.
ஆர்த்தி- ஜெயம் ரவி திருமணம்
இவர், ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். பின், ஜெயம் ரவியின் திரைப்படப் பணிகளில் ஆர்த்தி மற்றும் அவரது குடும்பம் நுழைந்தது. ஜெயம்ரவியின் பெரும்பாலான படங்களை ஆர்த்தியிந் தாயார் தான் வெளியிட்டு வருகிறார் எனவும் தகவல்கள் உலா வரத் தொடங்கின.
விவாகரத்து
இந்த நிலையில் தான், ஜெயம் ரவிக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் இருவரும் சில நாட்கள் தனித்தனியே வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் கசிந்த நிலையில், ஜெயம்ரவி மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அனைவரின் நலன் கருதியே இந்த முடிவை எடுத்ததாகவும் கூறியிருந்தார்.
இவர் தான் காரணம்
இந்நிலையில், ஜெயம் ரவியின் இந்த முடிவுக்கு பாடகி கெனிஷா தான் காரணம் என்று ஒரு தரப்பும், தன்னிடம் ஆலோசிக்காமலே ஜெயம் ரவி விவாகரத்து முடிவை அறிவித்துள்ளார் என ஆர்த்தியும் தெரிவித்து வந்தனர்.
பின் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக பேசிய ஜெயம் ரவி, விவாகரத்து குறித்து ஆர்த்திக்கு 2 முறை நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். கெனிஷா எனது நண்பர். நாங்கள் இருவரும் இணைந்து ஹீலிங் சென்டர் ஆரம்பிக்க உள்ளோம் எனக் கூறினார்.
அன்ஃபாலோ செய்த ஜெயம் ரவி
இந்த நிலையில், ஜெயம்ரவி தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் தி நியூ மீ எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இதனை பலரும் விமர்சித்து வந்த நிலையில், ஜெயம் ரவியின் இன்ஸ்டாகிராமை இத்தனை நாள் மனைவி ஆர்த்தி தான் நிர்வகித்து வந்தார் எனவும், இதனால் தான் விவாகரத்து அறிவிப்புக்கு பின்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியின் புகைப்படங்கள் தொடர்ந்து இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இன்ஸ்டாகிராம் நிர்வாகத்திடம் பேசி, தற்போது ஜெயம்ரவி அவரது கணக்கை மீட்டெடுத்துள்ளாராம். இதைத் தொடர்ந்து தான் மனைவி ஆர்த்தியை அன்ஃபாலோ செய்துள்ளார். அதுமட்டுமின்றி ஆர்த்தி, மகன்களுடன் உள்ள புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். மேலும், தனது மகன்களின் கஸ்டடிக்காக நீதிமன்றத்தில் குரல் கொடுப்பேன் எனவும், மூத்த மகனை வைத்து படம் எடுக்கும் ஆசை உள்ளதாகவும் ஜெயம் ரவி கூறியுள்ளார்
பதிலடி தந்த ஆர்த்தி
ஜெயம் ரவியின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி தரும் விதமாக ஆர்த்தியும் தற்போது ஜெயம் ரவியை அன்ஃபாலோ செய்துள்ளார். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அன்ஃபாலோ செய்து வருவதை பலரும் விமர்சித்து வருகின்றனர். அன்ஃபாலோ செய்வதினாலோ, புகைப்படங்களை நீக்குவதினாலோ தன்னுடைய வாழ்க்கையிலிருந்து ஒருவரை நிரந்தரமாக நீக்கிவிட முடியாது. வாழ்க்கையின் ஒரு பகுதியை மாற்றி விடவும் முடியாது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.