வார்டனுக்கு தெரியவரும் உண்மை.. 'அழகனை தூக்கிப் போடச் சொல்லாதீங்க..' கண்ணீர் விட்டு கதறிய ஆனந்தி.. சிங்கப்பெண்ணே அப்டேட்
அழகன் யார் என்பதை அறிந்த மகேஷ், அவரை நியாபகப்படுத்தும் விதமாக ஆனந்தி வைத்திருந்த பொருட்களை தூக்கி வீசுகிறார். இதனால், ஆனந்தி கண்ணீர் விட்டு அழுதாள்.

வார்டனுக்கு தெரியவரும் உண்மை.. 'அழகனை தூக்கிப் போடச் சொல்லாதீங்க..' கண்ணீர் விட்டு கதறிய ஆனந்தி.. சிங்கப்பெண்ணே அப்டேட்
மகேஷ், ஆனந்தியிடம் அழகன் என்ற பெயரில் கடிதம் எழுதி பழகி வருவது அன்பு தான் என்பதை கண்டு பிடித்து விட்டார். இதனால், தன் ஆத்திரத்தை அடக்க முடியாமல், அன்பு வீட்டில் இனியும் ஆனந்தி தங்கி இருப்பது ஆபத்து என்பதை அறிந்து அவரை வேறு ஹாஸ்டலுக்கு மாற்ற எண்ணுகிறார்.
மகேஷை எதிர்த்து நிற்கும் ஆனந்தி
அந்த சமயத்தில், அன்பு இங்கேயே இருந்தால், தான் தான் அழகன் என்பதை ஆனந்தி கண்டுபிடித்து விடுவாள் என நினைத்து, அன்பு வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல திட்டமிட்டுள்ளான்.
இதையடுத்து, ஆனந்தியும், அன்பு வெளிநாடு போகாமல் இருக்க தன்னால் முயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறார். அத்தோடு நில்லாமல், அன்புவிற்காக மகேஷை எதிர்த்து நிற்கிறாள்.