மகேஷை புறக்கணிக்கும் ஆனந்தி.. அன்பு தங்கை கொடுத்த லவ் ஐடியா! கதறி அழும் அன்பு.. பரபரப்பான கட்டத்தில் சிங்கப்பெண்ணே
வெளிநாடு செல்ல இருக்கும் அன்புவைத் தடுக்க ஆனந்தியின் காதலால் மட்டும் தான் முடியும் என அன்புவின் தங்கை, ஆனந்தியிடம் ஐடியா கொடுக்கிறார்.
அன்பு தான் இத்தனை நாள் வரை அழகனாக கடிதம் எழுதி ஆனந்தியை காதலித்து வந்துள்ளது மகேஷிற்கு தெரியவந்துள்ளது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய மித்ரா, அன்புவை நம்பி ஆனந்தியை இத்தனை நாள் அவர் வீட்டில் தங்கவைப்பதா என கேள்வி கேட்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மகேஷ், ஆனந்தியை தங்க வைப்பதற்காக புதிய ஹாஸ்டலை தேடி கண்டுபிடித்துவிட்டார்.
அன்புவை விட்டு வர மறுக்கும் ஆனந்தி
புது ஹாஸ்டல் குறித்து மகேஷ் ஆனந்தியிடம் கூறியும் ஆனந்தி அன்பு வீட்டில் இருந்து வர மறுக்கிறார். அத்துடன் அன்பு வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்கிறார். அவர் போவது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எப்படியாவது அவரை நீங்கள் தான் தடுக்க வேண்டும் என ஆனந்தி மகேஷிடமே கோரிக்கை விடுக்கிறார்.
இதைக் கேட்ட மகேஷிற்கு கோபம் தாங்க முடியவில்லை. அத்துடன், எனக்கு எந்த காரணமும் தேவையில்லை, இன்று சாயங்காலம் நான் வருவேன். நீ புது ஹாஸ்டலுக்கு கண்டிப்பாக போய் தான் ஆகணும் என மகேஷ் கட்டாயப்படுத்துகிறார்.
ஆனந்தியிடம் சண்டை போடும் அன்பு
இதற்கிடையில், எங்களை எல்லாம் விட்டு வெளிநாடு போக வேண்டாம் என அன்புவிடம் ஆனந்தி மன்றாடுகிறார். ஆனால், அன்புவோ தன் முடிவில் உறுதியாக இருக்கிறார். தன் மனதில் உள்ள காதலை விட ஆனந்திக்கு நல்ல வாழ்க்கை அமைவதே சிறந்தது என நினைத்து அன்பு இத்தனையையும் செய்து வருகிறார்.
கதறி அழும் அன்பு
அன்புவின் இந்த பிடிவாதத்தால் ஆனந்தி, மிகவும் மனம் நொறுங்கி போன நிலையில், ஆனந்தி தூங்கிய சமயத்தில், அன்பு தன் மனதில் வைத்திருக்கும் காதலை வெளிப்படுத்த முடியாமல் தவித்து அழுகிறார். அழகன் உன் வாழ்க்கையை கெடுக்க நினைத்தவன் அல்ல எனவும் கூறி கதறி அழுகிறார்.
அன்பு தங்கை கொடுக்கும் பிளான்
இதுபற்றி எதுவுமே தெரியாத ஆனந்தி, அன்புவின் தங்கையிடம் சென்று, அன்புவை வெளிநாட்டிற்கு போகவிடாமல் எப்படியாவது தடுக்க வேண்டும் எனக் கூறுகிறார். இதைக் கேட்டு கோபமடைந்த அன்புவின் தங்கை, ஆனந்தியிடம் நேரடியாகவே, நீங்கள் அன்புவை காதலிக்கிறீர்களா? எனக் கேட்பார். அத்துடன், ஒருவரை மனதார காதலிக்க வில்லை என்றால் எப்படி அவரை நம்பி தனி அறையில் இத்தனை நாள் ஒன்றாக இருக்க முடியும் எனக் கேள்வி கேட்பார்.
ஷாக்கான ஆனந்தி
அன்பு தங்கையின் கேள்வியை எதிர்பார்க்காத ஆனந்தி, அதைக் கேட்டு ஷாக் ஆவார். அத்துடன், அன்புவை வெளிநாடு செல்ல விடாமல் தடுக்க உங்களால் மட்டும் தான் முடியும். நீங்கள் அன்புவை காதலிப்பதாக சொன்னால், அன்புவால் இங்கிருந்து செல்ல முடியாது எனக் கூறுவாள். இதைக் கேட்ட ஆனந்தி, எந்த முடிவும் எடுக்க முடியாமல் தவித்து நிற்பார்.
இதற்கிடையில், மகேஷ் ஆனந்தியை புது ஹாஸ்டலுக்கு மாற்ற தீவிரம் காட்டியும், தன்னால் அன்பு வீட்டில் இருந்து வர முடியாது என மிகவும் கறாராக கூறியுள்ளார். இதுகுறித்த ப்ரோமோவை சன்
டிவி வெளியிட்டுள்ளது. மேலும், இந்த சீரியலில் என்ன நடக்கிறது என்பதை முழுமையாகத் தெரிந்து கொள்ள திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு சன் டிவியைப் பாருங்க.
டாபிக்ஸ்