கையும் களவுமாக சிக்கிய அன்பு.. உச்சகட்ட கோவத்தில் தவிக்கும் மகேஷ்.. அழகனை கண்டுபிடித்தாரா ஆனந்தி?
அழகனாக மாறி ஆனந்திக்கு கடிதம் எழுதியது அன்பு தான் என்பதை மகேஷ் கண்டுபிடித்து விட்டார். இனி ஆனந்திக்காக மகேஷ் எடுக்கும் முடிவு என்ன என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

தான் காதலித்த அழகன் யார் என்பதைக் கண்டுபிடித்தே தீருவேன் என ஆனந்தி கங்கணமிட்டு வர ஆனந்திக்கு ஆதரவாக மகேஷ், காரமெண்ட்சில் வேலை செய்யும் அனைவரையும் கம்பெனி குறித்து கடிதம் எழுதி கண்ணாடி பெட்டிக்குள் போடுமாறு கூறியுள்ளார்.
மித்ராவின் சதித்திட்டம்
இந்த சமயத்தில், மகேஷையும் அன்புவையும் பிரித்து மகேஷ் வாழ்க்கையில் இருந்து ஆனந்தியை நிரந்தரமாக தள்ளி வைக்க நினைத்த மித்ரா, அன்பு தான் அழகனாக இருக்க முடியும் என மகேஷிடம் தூண்டி விடுகிறார்.
அழகன் இந்த கார்மெண்ட்சில் வேலை செய்பவராகத் தான் இருக்க முடியும். ஏனென்றால், இங்குள்ளவர்களுக்குத் தான் ஆனந்தியைப் பற்றி அனைத்து தகவல்களும் தெரியும் என்றார் மித்ரா. அதற்கு மகேஷ் அப்படி எல்லாம் இருக்காது என மறுப்பு தெரிவித்த நிலையில், தன்னுடைய சதித் திட்டத்தை நிறைவேற்ற துடிக்கும் மித்ரா, இங்குள்ளவர்களில் யாரும் அழகன் இல்லை என்றால் ஆனந்தியைப் பற்றிய அனைத்து விஷயங்களும் தெரிந்தவர் அன்பு தான். அப்போது, அன்பு ஏன் அழகனாக இரு்ககக் கூடாது என மகேஷ் மனதில் சந்தேகத்தை விதைக்கிறார்.
