பயத்தில் இருக்கும் அன்பு.. பட்டென சொன்ன ஆனந்தி.. கோவத்தில் மகேஷ்.. சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று..
வெளிநாடு செல்லும் அன்புவிடம் என் அழகனைத் திருப்பி தருமாறு ஆனந்தி கேட்கிறாள். இதுகுறித்த ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
ஆனந்தி, தன்னை கடிதம் மூலம் காதலித்து வந்த அழகன் யார் என்பதைக் கண்டுபிடிக்க தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், அன்பு தான் அழகனாக மாறி ஆனந்தியை இத்தனை நாள் காதலித்து வந்துள்ளார் என்பதை மகேஷே் கண்டுபிடித்து விட்டார். இதனால், இனியும் அன்பு வீட்டில் ஆனந்தியை தங்க வைப்பது சரியானது அல்ல என மகேஷ் முடிவெடுத்து ஆனந்திக்காக புது ஹாஸ்டலை தயார் செய்துள்ளார்,
சொல்லாமல் கிளம்பிய ஆனந்தி
புது ஹாஸ்டலுக்கு ஆனந்தியை கூட்டிச் செல்வதற்காக கார்மெண்ட்ஸ் வாசலிலேயே காத்திருக்கிறார். ஆனால், ஆனந்தி அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே கிளம்பி சென்றுவிட்டதாக வாட்ச் மேன் மகேஷிடம் கூறினார். இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த மகேஷ், ஆனந்தி எங்கு சென்றார் எனத் தெரிந்து கொள்ள அவருக்கு போன் செய்கிறார். ஆனால் அவரது போன் சுவிட்ச் ஆஃப் ஆனதால் மேலும் கோபப்படுகிறார்.
பிடிவாதம் பிடிக்கும் அன்பு
இந்நிலையில், ஆனந்தி, ஹாஸ்டலுக்கு செல்லாமல் அன்பு வீட்டிற்கு வந்து ஷாக் கொடுக்கிறார். இதைக் கண்ட அன்பு ஆனந்தியிடம் மகேஷ் சாருடன் ஹாஸ்டலுக்கு போகுமாறு வற்புறுத்தி வருகிறார். ஆனால், ஆனந்தி இன்று இங்கு தான் இரு்ககப் போகிறேன் என திட்டவட்டமாக கூறுகிறார்.
அதற்குள் மகேஷ் அன்புவிற்கு போன் செய்து, ஆனந்தி அங்கு இருக்கிறாரா எனக் கேட்கிறார். மேலும் மகேஷ் எவ்வளவு வற்புறுத்தியும் ஆனந்தி ஹாஸ்டலுக்கு வர மறுக்கிறார். இந்நிலையில், அன்புவை எப்படியாவது வெளிநாடு செல்ல விடாமல் தடுக்க ஆனந்தி முயற்சி செய்து வருகிறார்.
புலம்பும் அன்பு
ஆனால், அன்பு தான் நிச்சயம் வெளிநாடு சென்று விடுவேன். நான் தான் அழகன் என்பதை நீ எப்படியும் கண்டுபிடித்து விடுவாய் என அன்பு ஆனந்தி தூங்கிக் கொண்டிருக்கும் போது புலம்புகிறார். இதற்கிடையில், அன்புவின் தங்கை கொஞ்ச நாளா எனக்கு உங்கள பிடிச்சிருந்தது. இப்போ நீங்களும் வீட்டை விட்டு போறீங்க, அண்ணனும் வீட்டை விட்டு போறாங்க என மிகவும் சோகமாக பேசினார். இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஆனந்தி அழுகிறார்.
அழகனைத் திரும்ப கேட்கும் ஆனந்தி
இதையடுத்து, அன்பு வெளிநாடு போவதற்கு முடிவு கட்ட நினைத்த ஆனந்தி, என் அழகனை என்னிடம் திருப்பி தந்து விட்டு செல்லுமாறு கூறுகிறார். இதைக் கேட்டு ஆடிப்போன அன்பு, ஆனந்திக்கு மொத்த உண்மையும் தெரிந்து விட்டதா என அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். இதுகுறித்த ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
மித்ராவால் மகேஷ் போடும் திட்டம்
முன்னதாக, அன்பு தான் இத்தனை நாள் வரை அழகனாக கடிதம் எழுதி ஆனந்தியை காதலித்து வந்துள்ளது மகேஷிற்கு தெரியவந்துள்ளது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய மித்ரா, அன்புவை நம்பி ஆனந்தியை இத்தனை நாள் அவர் வீட்டில் தங்கவைப்பதா என கேள்வி கேட்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மகேஷ், ஆனந்தியை தங்க வைப்பதற்காக புதிய ஹாஸ்டலை தேடி கண்டுபிடித்துவிட்டார். புது ஹாஸ்டல் குறித்து மகேஷ் ஆனந்தியிடம் கூறியும் ஆனந்தி அன்பு வீட்டில் இருந்து வர மறுக்கிறார்.
கதறி அழும் அன்பு
அன்புவின் இந்த பிடிவாதத்தால் ஆனந்தி, மிகவும் மனம் நொறுங்கி போன நிலையில், ஆனந்தி தூங்கிய சமயத்தில், அன்பு தன் மனதில் வைத்திருக்கும் காதலை வெளிப்படுத்த முடியாமல் தவித்து அழுகிறார். அழகன் உன் வாழ்க்கையை கெடுக்க நினைத்தவன் அல்ல எனவும் கூறி கதறி அழுகிறார்.
டாபிக்ஸ்