Shiva Rajkumar: கன்னட சூப்பர் ஸ்டாரின் மகன் முதல் காவிரியின் மைந்தன் வரை.. யார் இந்த சிவ ராஜ்குமார்?
- சிவராஜ்குமார் கடந்து வந்த திரையுலகப் பாதை, அவரது பெர்ஷனல் பக்கங்களைக் காணலாம்.
- சிவராஜ்குமார் கடந்து வந்த திரையுலகப் பாதை, அவரது பெர்ஷனல் பக்கங்களைக் காணலாம்.
(1 / 6)
சிவாண்ணா என கன்னட மக்களால் அன்புடன் அழைக்கப்படும் சிவ ராஜ்குமாரின் இயற்பெயர், நாகராஜூ சிவ புட்டசாமி ஆகும்.
(2 / 6)
சிவராஜ் குமார், 1962ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருக்கும் தயாரிப்பாளர் பர்வதம்மாவுக்கும் மூத்த மகனாகப் பிறந்தவர்.
(3 / 6)
சிவ ராஜ்குமார் சென்னையில் பிறந்து, தி.நகரில் பள்ளிப் படிப்பையும், புதுக்கல்லூரியில் கல்லூரிப் படிப்பையும் படித்தார். கல்லூரி காலங்களில் வேம்பட்டி சின்னி சத்யம் என்பவரிடம் குச்சிப்படி நடனப் பயிற்சி எடுத்தார். அதனால் அவருக்கு நன்கு தமிழ் தெரியும். சிவராஜ்குமாருக்கு ராகவேந்திர ராஜ்குமார், புனீத் ராஜ்குமார் ஆகிய சகோதரர்களும் பூர்ணிமா, லட்சுமி ஆகிய சகோதரிகளும் உள்ளனர். இவரது கடைசி சகோதரரான புனீத் ராஜ்குமார் தான் சமீபத்தில் மாரடைப்புக் காரணமாக மறைந்தார். அவருக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
(4 / 6)
கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் ஆனந்த் என்னும் படத்தின் மூலம், கன்னடத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். இப்படம் 38 வாரங்கள் ஓடி மிகப்பெரிய ஹிட்டடித்தது.
(5 / 6)
சிவராஜ்குமார் தொடர்ச்சியாகப் பல்வேறு படங்களில் கன்னட மொழியில் நடிக்கத்தொடங்கினார். இவரது நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளியான ஓம், 2005ஆம் ஆண்டு வெளியான ஜோகி தி கிங், 2003ஆம் ஆண்டு வெளியான சிகுரிட கனசு, 2017ஆம் ஆண்டு வெளியான மஃப்டி, 2013ஆம் ஆண்டு வெளியான பஜராங்கி, 2018ஆம் ஆண்டு வெளியான டகரு, 2016ஆம் ஆண்டு வெளியான கில்லிங் வீரப்பன், 1999ஆம் ஆண்டு வெளியான ஏகே 47 ஆகியப் படங்கள் இவரது சினிமா கேரியரில் முக்கியமான படங்களாகும்.
மற்ற கேலரிக்கள்