Puri Jagannadh:அட்டர் பிளாப் ஆன ‘லைகர்’; பூரி ஜெகன்நாத்திற்கு பான் இந்தியா படத்தை தூக்கி கொடுத்த ஹீரோ..யார் அவர்?
உஸ்தாத் ராம் பொதினேனி பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் Puri Connects இணையும் பான் இந்தியா திரைப்படத்திற்கு "டபுள் இஸ்மார்ட்" என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிகர் உஸ்தாத் ராம் பொத்தினேனி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘இஸ்மார்ட் ஷங்கர்'. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்தத்திரைப்படம் வெளியான நான்கு வருடங்கள் கழிந்த நிலையில் இந்தக்கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் இணைந்து இப்படத்தை Puri Connects நிறுவனம் சார்பில் தயாரிக்கின்றனர். விசு ரெட்டி தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றவுள்ளார்.
உஸ்தாத் ராம் பொத்தினேனி பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக (மே 15) படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இஸ்மார்ட் ஷங்கரின் தொடர்ச்சியாக அடுத்த பாகமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு "டபுள் இஸ்மார்ட்" என்று பெயரிடப்பட்டுள்ளது, இந்த புதிய பாகம் முதல் பாகத்தை காட்டிலும், இரட்டிப்பு மாஸ் மற்றும் இரட்டிப்பு பொழுதுபோக்கைக் கொண்டிருக்கும் வகையில் இருக்கும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது மிகப் பிரமாண்டமாக மிகப்பெரும் பட்ஜெட்டில் உயர்தர தொழில்நுட்ப தரத்துடன் தயாரிக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
டபுள் இஸ்மார்ட் திரைப்படம் பான் இந்தியா வெளியீடாக, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் மகா சிவராத்திரிக்கு மார்ச் 8, 2024 அன்று வெளியிடப்படவுள்ளது.
படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இறுதியாக பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘ லைகர்’ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்