தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  புனீத் ராஜ்குமாரை நினைத்து கதறி அழுத பிரியா ஆனந்த்

புனீத் ராஜ்குமாரை நினைத்து கதறி அழுத பிரியா ஆனந்த்

Aarthi V HT Tamil
Mar 16, 2022 12:40 PM IST

நடிகை பிரியா ஆனந்த் மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருடனான நினைவை, நினைத்து கதறி அழுத சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புனீத் ராஜ்குமாரை நினைத்து கதறி அழுத பிரியா ஆனந்த்
புனீத் ராஜ்குமாரை நினைத்து கதறி அழுத பிரியா ஆனந்த்

ட்ரெண்டிங் செய்திகள்

இதனிடையே புனீத் ராஜ்குமார் நடிப்பில் கடைசியாக உருவாகி இருக்கும் திரைப்படம், ' ஜேம்ஸ் '. சந்தோஷ் குமார் இயக்கி இருக்கும் இத்திரைப்படம் வரும் 17 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. கன்னட மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படம் சர்வதேச அளவில் சுமார் 4000 திரையரங்குகளுக்கு மேல் ரிலீஸாக இருக்கிறது.

இதில் சரத்குமார், ஆதித்யா மேனன், புனீத்தின் சகோதரர்கள் சிவராஜ் குமார் மற்றும் ராகவேந்திரா ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க புனீத் குமாருக்கு ஜோடியாகப் பிரியா ஆனந்த் நடித்து இருக்கிறார். புனீத் குமார், சீக்ரெட் ஏஜெண்டாக நடித்து இருக்கும் இப்படத்தை கிஷோர் பதிகொண்டா தயாரித்து இருக்கிறார்.

இந்நிலையில் ' ஜேம்ஸ் ' திரைப்படத்தின் புனீத் ராஜ்குமாருடன் நடித்த அனுபவம் குறித்துப் பிரியா ஆனந்த் தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவதது, " புனீத் ராஜ்குமார் ஒரு மிகப் பெரிய பெரிய சூப்பர் ஸ்டார். அவர் திரையில் மட்டும் இல்லை, நிஜத்திலும் சூப்பர் ஸ்டார் தான். புனீத் உயிருடன் இல்லாதது மிகப் பெரிய இழப்பு.

சிலர் படத்தில் நடிப்பது ஒரு மாதிரி இருக்கும். ஆனால் ரியல் வாழ்க்கையில் அவர்கள் நடந்துக் கொள்வது வேற மாதிரி இருக்கும். அதே போல் தான் புனீத்தும். ஏனென்றால் திரையில் இருப்பதை விட அவர் ரியல் வாழ்க்கையில் பெரிய ஹீரோ தான். அவர் உயிரோடு இருந்த வரை அவர் செய்த நல்ல விஷயங்கள் குறித்து மக்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் உயிரிழந்த பிறகு தான் புனீத் ராஜ்குமார் எவ்வளவு நல்ல விஷயங்கள் எல்லாம் செய்து இருக்கிறார் எனத் தெரிய வந்தது.

நானும் , புனீத் ராஜ்குமாரும் இதுவரை இரண்டு படங்கள் நடித்து இருக்கிறோம். கன்னட மொழி படம் எனக்கு பிடித்த துறை ஆனால் கன்னட மொழி சரளமாகப் பேச வராது. அதனால் எப்படி வார்த்தைகள் பயன்படுத்த வேண்டும் என எனக்குச் சொல்லிக் கொடுத்தார். அத்துடன் அங்கு இருக்கும் கோயில்கள், உணவுகள் ஆகியவற்றையும் சொன்னார். அவரை சந்தித்த யாராக இருந்தாலும் பாசமாகவும், மரியாதையாகவும் பழகும் நபர். அவர் ஏற்படுத்தும் நல்ல தாக்கத்தில் இருந்து நம்மால் தப்பிக்கவே முடியாது.

ஒருவர் புனீத்திடம் வந்து பேசினால் அவர்களிடம் மட்டும் தான் பேசுவார். ஒரு போதும் செல்போனை பயன்படுத்த மாட்டார். புனீத் ராஜ்குமார் உயிரோடு இருந்து இருக்க வேண்டும், அவர் உயிரிழந்து இருக்கக் கூடாது " இந்தப்படத்தை அவரது ரசிகர்கள் பலமுறை பார்ப்பார்கள் “ எனக் கதறி அழுதார்.

 

IPL_Entry_Point