தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Shah Rukh Khan Injury: அமெரிக்காவில் படப்பிடிப்பின் போது மூக்கில் காயம் - ஷாருக்கானுக்கு அறுவை சிகிச்சை

Shah Rukh Khan Injury: அமெரிக்காவில் படப்பிடிப்பின் போது மூக்கில் காயம் - ஷாருக்கானுக்கு அறுவை சிகிச்சை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 04, 2023 02:14 PM IST

லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கிய பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் அங்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ளாராம்.

படப்பிடிப்பின்போது ஷாருக்கானுக்கு காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது (கோப்பு படம்)
படப்பிடிப்பின்போது ஷாருக்கானுக்கு காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது (கோப்பு படம்) (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

இதற்கிடையே, அமெரிக்காவில் படப்பிடிப்பில் இருந்தபோது ஒரு காட்சியில் நடித்துக்கொண்டிருக்கையில் ஷாருக்கின் மூக்கில் அடிபட்டு ரத்தம் வெளியேறியுள்ளது. பின்னர் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொண்டு, ரத்தம் வெளியேறியது நிறுத்தப்பட்டது. இந்த சிகிச்சைக்கு பிறகு படப்பிடிப்பின் பாதியில் இருந்து வெளியேறிய ஷாருக்கான் மூக்கிய பேண்டேஜ் ஒட்டியவாறு இந்தியாவுக்கு திரும்பியுள்ளார்.

ஷாருக்கானின் காயம் தொடர்பான புகைப்படங்கள் இதுவரை வெளியாகவில்லை. இதற்கு முன்னர் தனது 31 வருட சினிமா வாழ்க்கையில் படப்பிடிப்பின்போது பலமுறை ஷாருக்கான காயமடைந்துள்ளார். கடந்த 2017இல் ராயிஸ் படத்தின் ஷுட்டிங்கின் போது கை மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு சிறிய அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

2013ஆம் ஆண்டில் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு 8 அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டார். 2009ஆம் ஆண்டில் அவரது இடது தோளில் கிழிவு ஏற்பட்டதற்கு சிகிச்சை மேற்கொண்டார்.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான பதான், பாக்ஸ் ஆபிஸில் வசூலில் துவண்டு கிடந்த பாலிவுட் திரையுலகை புத்துயிர் பெற வைத்தது. அவர் நடித்துள்ள புதிய ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ஜவான், வரும் செப்டம்பர் 7ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை தமிழ் சினிமா இயக்குநர் அட்லி இயக்கியிருக்கும் நிலையில், நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தை தொடர்ந்து பாலிவுட் முன்னணி இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி இயக்கும் டன்கி என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஷாருக் ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்